நாளை தேர்தல்

  • 13

விழித்திடு மனிதா விழித்திடு

விழிகளை மெல்ல திறந்திடு

உறங்கங்கள் கலையட்டும்

உன் விரல் நுணியில்

நாளை நம் தேசம்

நீ இடும் பிழையில்தான்

பிழைக்க போகிறது

சிந்தித்து வாக்களி

சமூதாயம் உன் கையில்

நாளை இளம் தலைமுறை

இருளில் மூழ்க

துரும்பாய் இருந்து விடாதே

நின்று கொண்டே நீயும் உறங்கலாம்

விழித்திடு உணர்ந்திடு புறப்படு

கரும்பாய் இனிக்கும்

கறுப்பாடுகளின் வாக்குறுதிகள்

மதியிழந்து விதி மறந்தால்

வீதியில் கூட உனக்கிடமில்லை

சிறுபான்மை என்ற குருதியை

உறிஞ்சி குடிக்க துடிக்கும்

மொக்கு கூட்டத்திற்கு

உரமிட்டு வளர்க்காதே

தேசம் சுதந்திர காற்றை

சுவாசிக்க விரும்பினால்

தேசத்தின் மடியினில்

தவழ்ந்திட விரும்பினால் நீ

வரலாறு ஈன்றெடுத்த

தலைமைக்கு உன் வாக்களி…

நாளை விடியல்

உன் விரல் நுணி

இடும் பிழையில்……

அனுகவி றிப்கான்,

அட்டாளைச்சேனை-06.

விழித்திடு மனிதா விழித்திடு விழிகளை மெல்ல திறந்திடு உறங்கங்கள் கலையட்டும் உன் விரல் நுணியில் நாளை நம் தேசம் நீ இடும் பிழையில்தான் பிழைக்க போகிறது சிந்தித்து வாக்களி சமூதாயம் உன் கையில் நாளை…

விழித்திடு மனிதா விழித்திடு விழிகளை மெல்ல திறந்திடு உறங்கங்கள் கலையட்டும் உன் விரல் நுணியில் நாளை நம் தேசம் நீ இடும் பிழையில்தான் பிழைக்க போகிறது சிந்தித்து வாக்களி சமூதாயம் உன் கையில் நாளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *