எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 31

  • 61

“ருஷா….”

“இன்னா கிச்சன்ல வாரன் வெய்ட்”

“குய்க்கா வாங்க ருஷா வொகிங் போகணும்”

“அய்யோ இண்டைக்குமா ஹபி எங்கி எலா…”

என்று சொல்லி கொண்டு டீ கொண்டு வந்தாள் ருஷா,

“ருஷா ஆஃபீஸ் போகணும் சோவ் டைம் இல்ல டெலிவரிக்கு இன்னமும் ரெண்டு மூணு நாள் இருக்கு இனி அல்லாஹ்ட நாட்டம் விளையாடாம அபாயாவே போடுட்டு எடுங்க.”

“ம்ம்சரி இருங்க வாரன்”

என்று ம்ஹ்ஹ்… என்று கிண்டலாக முகத்தை வெட்டி சென்றாள். ருஷாவும் வர இருவரும் வெளி இறங்கினர்.

ருஷா மெது மெதுவாக நடக்க நிசாத் ருஷாவின் வேகத்தை கூட்ட அவன் கொஞ்சம் வேகமாக நடை தொடர்ந்தான்.

“அய்யோ ஹபி என்னால ஏலா மெதுவா நடங்க”

“ருஷாவாங்க கெதியா அந்த பக்கம் நிறைய டோக் கிடைக்காம்”

பயத்தில் கோபம் கொண்டவள்.

“டேய் நிசாத் நில்லுடா இல்லாடி நடு ரோட்ல இருப்பன்.”

“அய்யோ நில்லுமா வாரன்”

என்று தன் மனைவியை கூடி சென்றான், தெரு முனை சுற்றி தன் வீடு வந்து சேர நிசாத் குளித்து விட்டு ஆஃபீஸ் செல்ல ரெடி ஆகினான்.வழமையான ருஷாவின் வழி அனுப்பலுடன் விடை பெற்றான். நிசாத் சென்று ஒரு சில மணித்தியாலங்கள் இருக்கும்.

ரிங் ரிங்…

“ஹேய் பேபிமா..”

“ம்ம் சொல்லுங்க சேர்”

“என்ன இப்பதான் போன அதுக்குள்ள கோள்”

“ஆமா என் வைப்கு கோள் பண்ண கூடவா”

“சேர் வைப் வேலையா இருக்கா…”

“ஓஹ் மேடமுக்கு அப்படி என்ன வேல…”

“எங்கட ரெண்டு பேபிக்கும் மப்ளர் கெப் பிண்ணிட்டு இருக்காங்க…”

“ஓஹ் வெல்டன் டியர்…”

“டேய் ருஷா நியாபகம் இருக்கா மலேசியா புரஜெக்ட் செலக்ட் ஆனது.”

“ஆமா”

“அதுக்கு வர சொல்லிருக்கு டா”

தன் ஹபியின் பிரிவை நினைத்து மௌனம் கொண்டாள்.

“என்ன படார் படார் என்று பேசின ஆள்ட பேச்ச காணல”

“இல்ல ஒன்னும் இல்ல ஹபி… எப்ப போற.”

“என்ன ருஷா நீங்க உம்மா கூட இருங்க நான் போய் எனி டைம் கோள் பண்ணுவன் டா பேபியையும் பார்த்துக்குவன்.”

“ஆஹ் சரி ஹபி”

என்று கலங்கிய குரல்,

“டேய் ஜோக்குக்கு சொன்னன் என் மூணு பேபியையும் சேர்த்து தான் போக ரெடி பண்ணிருக்கன் மா பீல் பண்ற ரொம்ப”

“பின்ன இல்லையா…”

“சரிடா நான் அது விஷயமா வெளில போறன் போய்ட்டு வீட்ட தான் வருவேன் அப்போ வைக்கன் மா”

என்று போனை கட் பண்ணினான். ருஷாவும் போனை வைத்தது விட்டு அவள் வேலையை தொடர்ந்தாள். நிசாத் போனை வைத்து அரைமணி நேரம் இருக்கும் ருஷாவும் சாராவும் சோபாவில் இருந்து பேசி கொண்டு இருக்கின்றார்கள். பாத்திமாவும் அவளின் கணவரும் வர பேச்சு இன்னும் தொடர்ந்தது.

ரிங் ரிங்…

ருஷா அந்த போன தூக்குமா…

ருஷா போனின் சத்தத்தை அதிக படுத்தி விட்டு அமர வந்தவள்,

“ஹெலோ”

“நிசாத் ஹோம் தானே…”

“ஆமா”

“நாங்க சென்ர்ல் பிரைவட் கொப்பிடல இருந்து பேசுறம் நிசாத் எக்சிடன்ட் ஆகி அட்மின் ஆகிருக்காரு.”

இதை கேட்ட ருஷா மயங்கி விழ சோபாவின் விளிம்பு அவளின் இடுப்பு பின் பகுதியில் அடி பட

“யா அல்லாஹ்”

என்று ருஷாவை பிடிக்க என்ன பண்ண என்று அறியாது ருஷாவை நிசாத் அட்மின் ஆன அதே கொசுப்பிடலுக்கு கொண்டு செல்ல சாரா கண்ணீர் கடலோடு அலை மோதினார். மூச்சு பேசு இன்றி மரம் போல் ருஷா சாராவின் மடியில் ஆறுதலும் அழுகையுமாய் பாத்திமா. கொசுப்பிடலில் ருஷாவை அடிமிட் பண்ண பாத்திமாவின் கணவர் நிசாத்தை பார்க்க செல்ல, நிசாத்தின் தலையில் சின்ன ஒரு காயம் காலில் சின்ன ஒரு கட்டு. நிசாத்திடம் நடந்த எல்லாம் சொல்ல உயிர் இன்றி நடை பிணமாய் தன் மனைவியை பார்க்க செல்ல சாராவும் பாத்திமாவும் நிசாத் என்று பதற,

“உம்மா எனக்கு ஒன்னும் இல்ல மா எனக்கு சின்ன காயம் தான் மா”

என்று

“ருஷா எங்க மா”

என்று குழந்தையாய் மாறினான் நிசாத் அழுகையில், தாதிமார்கள் இரண்டு மூன்று டொக்டர் மார் என்று நிலை மோசம் ஆனது. திடீர் என்று டொக்டேர் வெளியில் வந்து,

“யார் பெசன்ட்டுட கஸ்பன்ட்..”

“நான் டொக்டேர். “

“சொல்லுங்க டொக்டேர்”

“சோரி சேர்….”

தொடரும்….
K.Fathima Risama
Nintavur.
SEUSL.
வியூகம் வெளியீட்டு மையம்

 

“ருஷா….” “இன்னா கிச்சன்ல வாரன் வெய்ட்” “குய்க்கா வாங்க ருஷா வொகிங் போகணும்” “அய்யோ இண்டைக்குமா ஹபி எங்கி எலா…” என்று சொல்லி கொண்டு டீ கொண்டு வந்தாள் ருஷா, “ருஷா ஆஃபீஸ் போகணும்…

“ருஷா….” “இன்னா கிச்சன்ல வாரன் வெய்ட்” “குய்க்கா வாங்க ருஷா வொகிங் போகணும்” “அய்யோ இண்டைக்குமா ஹபி எங்கி எலா…” என்று சொல்லி கொண்டு டீ கொண்டு வந்தாள் ருஷா, “ருஷா ஆஃபீஸ் போகணும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *