என்னை நெகிழ வைத்த புனித உயிர்கள் இரண்டு

  • 10

இரவு நேரம் தேவை நிமித்தம் குடும்பத்துடன் வெளியில் சென்று வந்து கொண்டிருந்தோம். இரவு வேளை என்பதால்
அவ்வளவு வாகன நெரிசல் இல்லை. பொருள் ஒன்றை வாங்குவதற்காக கடை அருகில் வாகனம் நிறுத்தப்பட்டது. அப்போது தான் வாகனத்தின் உள்ளே அமர்ந்திருந்த எனது கண்களின் திசை அவர்களின் பக்கம் சென்றது. பார்வைகளற்று இரண்டு கால்களும் நடக்க முடியாமல் இன்று வரை தந்தை மட்டுமே தன் முழு உடலும் உயிரும் என நம்பி வாழும் ஒரு சிறுமியும் மகளை தாயாக நினைத்து அவளை சக்கர நாற்காலியில் வைத்து பாதையின் மறுபுறம் கடப்பதற்கு வாகனங்களை பார்த்துகொண்டு தந்தையும் மகளும் நின்றனர்.

தன் மகளின் இயலாமையால் கொண்ட அச்சத்தை விட, அந்த இராப்பொழுதில் வாகனங்கள் மின்னலை விட வேகமாக வருவதை பார்த்து அவர் கண்கள் அச்சத்தால் துவண்டது, எப்படியோ அவர்கள் இருவரும் வீதியை கடந்துவிட்டனர். எனக்குள் அப்போது ஏற்பட்ட ஆனந்தம் என்னை அறியாமல் இறைவனை புகழ வைத்தது (لحمد لله).

உதவ முடியா விட்டாலும் உபத்திரம் செய்ய கூடாது. வாகனத்தில் செல்லும் போது நிதானம் அவசியம். இன்றைய இளைஞர்கள் மத்தியில் வாகன மோகமும், வேக கட்டுப்பாடற்ற வாகன போட்டிகளும் அதிகமாகிவிட்டது. சமூகத்தில் தேவைகள் அதிகம், அதில் காகித(பணம்) தேவை மட்டுமே எம் அனைவரது கண்களிலும் தெரிகிறது. அளவான செல்வம் நிறைவான வாழ்வை தரும் என்பதை அனைவரும் மறுக்கின்றோம்.

இது வெறும் கற்பனை உலகம் நிரந்தர சுவர்க்கத்திற்கு கூட அதிகம் பிடிப்பது ஏழைகளை தான். எம்மில் பலர் எம்மிடம் இல்லாதவற்றை எண்ணி அதிகம் புலம்பிக்கொண்டிருக்கின்றோம் ஆனால் யதார்த்தம் அவ்வாறில்லை உடலில் ஊணமின்றி அன்றாடம் உணவு ஆரோக்கியம் சற்றும் குறையாமல் எம்மை இவ்வுலகில் வாழவைத்திருக்கின்றான் இறைவன் (الحمد لله)

றஹ்னா பின்த் மகுனதுர் ரஹ்மான்
ஹுதாயிய்யா

இரவு நேரம் தேவை நிமித்தம் குடும்பத்துடன் வெளியில் சென்று வந்து கொண்டிருந்தோம். இரவு வேளை என்பதால் அவ்வளவு வாகன நெரிசல் இல்லை. பொருள் ஒன்றை வாங்குவதற்காக கடை அருகில் வாகனம் நிறுத்தப்பட்டது. அப்போது தான்…

இரவு நேரம் தேவை நிமித்தம் குடும்பத்துடன் வெளியில் சென்று வந்து கொண்டிருந்தோம். இரவு வேளை என்பதால் அவ்வளவு வாகன நெரிசல் இல்லை. பொருள் ஒன்றை வாங்குவதற்காக கடை அருகில் வாகனம் நிறுத்தப்பட்டது. அப்போது தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *