Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
குரங்கு மனசு பாகம் 38 

குரங்கு மனசு பாகம் 38

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

“இப்படி எழும்பி இருந்துக்க சர்மி”

முன்னால் கிடந்த சோபாவில் மகளை இருப்பாட்ட, ராபியாவின் மார்பில் முகம் புதைத்தவளாய் நீண்ட நேரத்துக்கு வீறிட்டு அழுதாள் சர்மி. அதீகால் என்ன செய்வதென்றே புரியாத நிலையில்,

“நான் திரும்ப உம்மாக்கிட்ட பேசுறன் சர்மி” என்றான் மெதுவாக,

“நோ நோ… வேணாம்” பேய் பிடித்தவள் போல் வெகுண்டெழுந்தாள் சர்மி.

“உங்க உம்மாக்கிட்ட தயவு பண்ணி எங்க விஷயமா திரும்ப பேசாதிங்க, நான் தனியா இருக்கன் அதீக், என்னால திரும்ப அவங்கள சந்திக்க விருப்பமில்ல…”

“நீ என்ன வேணுமோ சொல்லிக்க சர்மி, எனக்கு நீ தான் வேணும்.”

“நான் மாசுபட்டவள் அதீக், என்ன விட்டுட்டு போ.. போ அதீக், போ… பிளீஸ்.”

“உன்ன விட்டுட்டு போக நான் ஒன்னும் இவ்வளவு அவசரமா நாட்டுக்கு வரல்ல சர்மி, எங்க உம்மா மனச எப்படியாவது சரிப்படுத்தி உன்ன கலியாணம் முடிச்சி கூட்டிட்டு போக வந்திருக்கன்.”

“வாயால சொல்றது இலேசு அதீக், ஆனா இந்த ஜென்மத்துல அப்படி ஒன்னு நடக்க வாய்ப்பேயில்ல.”

“கொஞ்சம் பொசிடிவ் ஆஹ் திங்க் பண்ணலாமே சர்மி?”

“என்னோட லய்ப் முடிஞ்சு போச்சு அதீக்..”

இருவரினதும் வாத விவாதம் தொடர, வாயை மூடிக் கொண்டு அமைதியாய் அனைத்தையும் வாங்கிக் கொண்டிருந்தாள் ராபியா.

“உன்னோட லய்ப் இனித் தான் சந்தோஷமா இருக்கப் போகுது…”

“அதுல எனக்கு நம்பிக்க இல்ல அதீக்”

“உனக்கு நம்பிக்க வரனும்னா நான் என்ன செய்யனும் சர்மி? சொல்லு என்கிட்ட.”

“என்ன இப்பவே கலியாணம் முடிச்சிக்க அதீக்..”

இந்த வார்த்தையை நிச்சயமாக அவன் எதிர்பார்க்கவில்லை. ஆயினும் ராபியாவின் உள்ளத்தில் அது சரியாகவே தோன்றியது.

“புள்ள சொல்றது சரி தான் மகன், உங்க உம்ம எப்படியும் இதுக்கு ஒத்துக்க போறதில்ல, உங்களுக்கு சர்மி வேணும்னா இதத் தவிர வேற ஒப்ஷன் கிடையாது”இவ்வளவு நேரம் அமைதி காத்தவள் மெதுவாக வாய் திறக்க,

“நீங்க வாய மூடிட்டு இரீங்க ஆன்ட்டீ” என்று சொல்வத போல் அவளை நோக்கினான் அதீக்.

“சரி சர்மி வா போகலாம்” தன்னிலை எண்ணி அழுது கொண்டிருந்தவள், அதிர்ச்சியோடு அதீகை நோக்கினான்.

“உங்க உம்மாவுக்கும் ரெடி ஆவி வர சொல்லுங்க”

“அதீக்… நான் சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னன், அப்படி எதுவும் வேணாம், என்ன விட்டு போயிடுங்க.”

“சொன்னத செய் சர்மி”

அவனது அதிகாரமான உறுமல் உம்மா, மகள் இருவரையும் நடுங்க வைக்க,

“அதீக்..” தயக்கத்தோடு அவனை அழைத்தாள் சர்மி.

“உனக்கு சொல்றது புரியாதா? போ.. போய் ரெடி ஆவிட்டு வா”

“நோ அதுவந்து..”

“சர்மி நான் போய் ரெடி ஆவிட்டு வர சொன்னன்”

அதற்கு மேல் பேசத் தயங்கியவள் அவ்விடம் விட்டகன்றாள் அதற்குள் ரினோஷிற்கு அழைப்பு செய்தவன், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவு படுத்தி, அவனையும் கிளம்பி வரச் செய்தான்.

*********************************

“எங்க இன்னம் என் புள்ளய காணோம், இவ்வளவு லேட் ஆவ மாட்டானே?” மறுபக்கத்தில் மகனின் வருகைக்காக காத்திருந்த வாஹிதா, நிலைமையை தெரிந்து கொள்ள அதீகிற்கு அழைப்பு செய்தாள்.

கதை தொடரும்
Aathifa Ashraf

“இப்படி எழும்பி இருந்துக்க சர்மி” முன்னால் கிடந்த சோபாவில் மகளை இருப்பாட்ட, ராபியாவின் மார்பில் முகம் புதைத்தவளாய் நீண்ட நேரத்துக்கு வீறிட்டு அழுதாள் சர்மி. அதீகால் என்ன செய்வதென்றே புரியாத நிலையில், “நான் திரும்ப…

“இப்படி எழும்பி இருந்துக்க சர்மி” முன்னால் கிடந்த சோபாவில் மகளை இருப்பாட்ட, ராபியாவின் மார்பில் முகம் புதைத்தவளாய் நீண்ட நேரத்துக்கு வீறிட்டு அழுதாள் சர்மி. அதீகால் என்ன செய்வதென்றே புரியாத நிலையில், “நான் திரும்ப…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *