Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
Fake Signature 

Fake Signature

  • 4

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

சொல்லவந்த விடயத்தை சொல்லி விடுகிறேன்,தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். சிறு விடயங்களை தவறு என்றறிந்தும் அதனை தவறு என உள்ளம் ஏற்க மறுக்கிறது. உங்கள் பார்வையில் கள்ள sign (Fake signature) வைப்பது பாவம் என சிறிதும் கருதியது உண்டா?

களவெடுத்தால் கள்ளன் என்போம்,நம்பிக்கை துரோகம் செய்தால் துரோகி என்போம். கள்ள sign உம் அப்படியான செயல் என்பதை சிந்தித்து இருப்பீர்களா?

ஒரு lecture, signature sheet யைத் தருகின்ற வேளையில் அவரிடம் நம் மீது ஓர் நம்பிக்கை உள்ளதல்லவா? ஆனால் நாமோ நமக்கும் நமது நண்பர்களுக்கும் சேர்த்து signatures வைக்கிறோம். நண்பர்களின் மனது காயப்படக் கூடாது, அவர்களுக்கு “நாம் sign வைக்கிறோம்” என்ற கொடுத்த வாக்கை மீறாமல் இருப்பதற்காக இந்த செயல் எவ்வாறு நமது வாழ்வில் தாக்கம் செலுத்துகிறது என்று சற்று பார்போம்.

நாம் நமக்கு signature sheet ஐ நம்பி தந்த விரிவுரையாளர்களை ஏமாற்றுகிறோம், அவ்வாறாயின் துரோகி என்ற பட்டியலில் இடம் பிடித்து விடுகிறோம் அல்லவா? (ஒருவர் வைத்த நம்பிக்கையை மோசம் செய்ததற்காக)

  • Head of the department ஐ ஏமாற்றுகிறோம். அதன் தொடர் இறுதியில் UGC வரை செல்கிறது.
  • நாம் பட்டம் பெறுகிறோம், அங்கு கட்டாயம் நாம் செய்த இத்தவறு கலக்கப்படுகிறது.
  • இந்த degree ஐ வைத்து தொழில் எடுக்குகின்றோம், அதன் மூலம் வருமானம் ஈட்டுகிறோம், எத்தனை பேருக்கு நாம் செய்த நம்பிக்கைத் துரோகம் நாங்கள் சம்பாதிக்கின்றவற்றிலும் தாக்கம் செலுத்துகிறது.
  • நாங்கள் சில வேளை ஒரு வேளை Teacher ஆகவோ, Lecturer ஆவோக,ஒரு நிறுவனத்தின் அதிகாரியாகவோ தலைமைத் தாங்களாம் இன் ஷா அல்லாஹ்,எங்களில் அதிகமானோர் ஒரு தொழில் புரியத் தான் போகிறோம் அல்லவா, நிச்சயமாக நாங்களும் ஏமாற்றப்படலாம் என்பதை உணர்ந்தது உண்டா?

அதிகமாக madrasa வில் படித்தவர்களும்,முழுமையாக இஸ்லாத்தைக் கற்ற மாணவர்களாக இருந்துக் கொண்டு, இதனை தவறு என்றறிருந்தும் இந்த காரியத்தில் ஈடுபடுவது சரியா? சற்று நமக்குள் நாமே கேட்டுப் பார்ப்போம்.

ஒருவர் நாம் மீது வைத்த நம்பிக்கையை நாங்களே இழக்கச் செய்தோம் எனின்; அதனை பழைய விதத்தில் திரும்பப் பெற முடியாது. நாங்கள் வெளி உலகிற்கு சென்று நாம் தான் பட்டம் பெற்றவர்கள் என்று சொன்னால் சமூகம் சிரிக்கும், நமது செயலே நம்மை பிறருக்கு அடையாளப்படுத்தும்.

Lectures கு attend பண்ண தவிர்க்க முடியாத காரணங்கள் இருப்பின் அதனை உரிய விரிவுரையாளர்களிடம் பேசி தீர்த்துக் கொள்வோம், அதை தவிர இக் கள்ள signs வைத்து அவர்கள் எம் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையை இழக்கச் செய்வதை விட்டும் தவிர்ந்துக் கொள்வோம். அல்லாஹ்!நம்மை நற்குணங்களின் மூலம் அழகுபடுத்துவானாக!

சொல்லவந்த விடயத்தை சொல்லி விடுகிறேன்,தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். சிறு விடயங்களை தவறு என்றறிந்தும் அதனை தவறு என உள்ளம் ஏற்க மறுக்கிறது. உங்கள் பார்வையில் கள்ள sign (Fake signature) வைப்பது பாவம் என…

சொல்லவந்த விடயத்தை சொல்லி விடுகிறேன்,தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். சிறு விடயங்களை தவறு என்றறிந்தும் அதனை தவறு என உள்ளம் ஏற்க மறுக்கிறது. உங்கள் பார்வையில் கள்ள sign (Fake signature) வைப்பது பாவம் என…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *