JUMMA SECURITY

  • 13

இன்றைய பள்ளிவாயல்களை பொருத்தவரையில் பொது மக்கள் அதிகமானோர் பள்ளி வாசலுக்கு செல்கின்ற நேரம் ஜும்மா தொழுகையாகும். இதனால் இனங்கானப்பட்ட பிரச்சினைகளாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம்.
ஆண்கள் வீட்டில் இல்லா சந்தர்ப்பம்
அந்நியர்கள் வந்து தாக்கலாம், பள்ளி வாசலுக்கு வாகனங்களில் வருவோர் முறையாக வாகனங்களை தரித்து வைக்காமையினால் பொது போக்குவரத்து பாதிக்கலாம், குறிப்பாக நகர்புற பள்ளிவாசலை அண்மித்த பகுதிகள் ஜும்மா தொழுகை முடிவடைந்ததும் வாகன நெரிசல் ஏற்படுகின்றது, ஜும்மா தொழுகைக்கு வரும் தமிழ் தெறியாத அறபு தெறிந்த சிறுவர் முதல் முதியோர்வரை அறபு ஜும்மா ஆரம்பிக்கும் வரை பள்ளியை சுற்றியுள்ள பகுதியிலும், பல மாடிகளை கொண்ட பள்ளிவாசல்களில் இரண்டாம், மூன்றாம் மாடிகளில் ஊர் வம்புகளை பேசுவதிலும் ஜும்மா நேரத்தை கழிப்பதை அவதானிக்க முடிகின்றது.
இப்பிரச்சினை இலங்கையில்
பொதுவாக அனைத்து பள்ளிவாசல்களில் காணப்பட்டாலும் தான் இதுவரை சென்ற பள்ளிவாசல்களில் ஒரேயொரு பள்ளிவாசலில் குறித்த பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வை முன்வைத்திருந்தனர்.
அதாவது குறித்த பள்ளிவாசலில் ஜும்மாவுடைய நேரத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சீருடை சகிதம் கடமையில் இருந்தார். அவருடைய பணி இதுதான்.
பள்ளிவாசலுக்கு வரும் வாகனங்களை முறையாக தரித்து வைப்பதற்கு கட்டளை பிறப்பித்தல், பள்ளியின் மேல் மாடியிலும், மைதானத்திலும் குழுக்களாக சேர்ந்து உரையாடிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு அறிவுரை வழங்கி ஜும்மா பயானை கேட்பதற்காக ஆர்வமூட்டுதல், பொது மக்கள் வழங்கும் பொருட்களை பாதுகாப்பாக வைத்தல் போன்ற கடமைகளில் ஈடுபட்டார்.
பள்ளி வாசலை சுற்றி ஜும்மா கடமையை வீணாக்கும் விதமாக நடக்கும் போது மிம்பர் மேடையிலிருந்து கட்டளை பிறபிக்காமல் அதிகாரி ஒருவரை நியமித்து, அவர் மூலம் தவறு செய்யும் போது சுட்டிக்காட்டி திருத்த முயற்சிக்கும் இந்த முயற்சி சிறந்தது. இதனை அனைத்து பள்ளிவாசல்களில் செய்தால் சிறப்பாக இருக்கும். சிந்திப்போம்! செயற்படுவோம்!

Ibnuasad

இன்றைய பள்ளிவாயல்களை பொருத்தவரையில் பொது மக்கள் அதிகமானோர் பள்ளி வாசலுக்கு செல்கின்ற நேரம் ஜும்மா தொழுகையாகும். இதனால் இனங்கானப்பட்ட பிரச்சினைகளாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம். ஆண்கள் வீட்டில் இல்லா சந்தர்ப்பம் அந்நியர்கள் வந்து தாக்கலாம், பள்ளி…

இன்றைய பள்ளிவாயல்களை பொருத்தவரையில் பொது மக்கள் அதிகமானோர் பள்ளி வாசலுக்கு செல்கின்ற நேரம் ஜும்மா தொழுகையாகும். இதனால் இனங்கானப்பட்ட பிரச்சினைகளாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம். ஆண்கள் வீட்டில் இல்லா சந்தர்ப்பம் அந்நியர்கள் வந்து தாக்கலாம், பள்ளி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *