உன்னை அநாதையாக்கிப் போன அரக்கனுக்கான கடிதம்!

  • 7

அம்மா என்று
உச்சரிக்க தெரியாத
அரக்கனால் அநாதையாக்கப்பட்டாள்
இந்த தேவதை
தெருவோரம் மறைந்து
கிடக்கின்றாள்!

ரத்தங்களை உணவாக்கி
வியர்வையினை நீராக்கிப்
போனவளுக்கு உணவழிக்க
மறந்திட்ட அரக்கனே
உன் இரக்க
குணம் எங்கே!

பட்டினியாய் இருந்தும்
பக்குவமாய் பார்த்து
பார்த்து வளர்ந்த
பிள்ளை இது
பரிதாபம் கொள்ளத்தான்
போகின்றது இன்று!

அநாதையாக்கப்பட்டவள் நான்
அதனால்தான் என்
மரணச் செய்தியும்
அவன் அறியாமல்
இருக்கின்றான்!

நான் இறந்த
பின்பு என்
கண்களை கொஞ்சம்
திறந்து வையுங்கள்
நான் பத்துமாதமாய்
சுமந்து பெற்ற
செல்வம் என்னால்
சிதறியழுகின்றதா எனக்காக
ஒரு துளி
விழுகின்றதா எனப்
பார்க்க செய்வீர்களா
பதில் கிடைக்கவிடினும்
நீங்களாவது அழுதுவிட்டுப்
போங்கள் என்
மகனாய் என்
ஆத்மா சாந்தியடைய.

பொத்துவில் அஜ்மல்கான்

அம்மா என்று உச்சரிக்க தெரியாத அரக்கனால் அநாதையாக்கப்பட்டாள் இந்த தேவதை தெருவோரம் மறைந்து கிடக்கின்றாள்! ரத்தங்களை உணவாக்கி வியர்வையினை நீராக்கிப் போனவளுக்கு உணவழிக்க மறந்திட்ட அரக்கனே உன் இரக்க குணம் எங்கே! பட்டினியாய் இருந்தும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *