குரங்கு மனசு பாகம் 11

  • 9

அங்கு லுஹர் தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதற்காய்  எல்லோரும் மஸ்ஜிதில் திரண்டிருக்க,

“முதலாம் கிலாஸ் சர்மி யாரு?” கூப்பாடு போட்டான் லேபர்.

“இந்தா இருக்காள்.” பக்கத்திலிருந்த அவள் நட்புக்கள் சர்மியைக் காட்டிக் கொடுக்க, ஏதோ சிந்தனையிலிருந்த சர்மி லேபரின் அழைப்பை வாங்கிக் கொள்ளவில்லை.

“சர்மி.. அடி உன்ன தான் அந்த மனிஷன் கூப்பிட்டுக் கொண்டே இருக்கான். அவ்வளவு என்ன யோசின?” பக்கத்திலிருந்தவள் தட்டிவிட,

“ஆஹ் நான் ஆஹ்? ஏன் எதுக்கு?”

“உங்கள பிரின்சிபல் வர சொல்றாங்க..” விடயத்துடன் வந்தவன் விடைபெற்றான்.

“பிரின்சிபல் எதுக்கு என்ன கூப்பிடனும்..?” ஏதும்  தெரியாமல் லேபர் பின்னாலே நடைபோட்ட சர்மி காரியாலய வாயிலை அடையும் போதே தன் தாயைக் கண்டு கொண்டாள்.

“ஆஹ் உம்மா. அஸ்ஸலாமு அலைக்கும். நீங்க ஏன்மா இங்க?” மலர்ந்த புன்னகையுடன் தாயின் பக்கம் போனவள், கட்டிப் பிடித்து தன் அன்பை வெளிப்படுத்தினாள்.

“வாங்க சர்மி.. உங்க உம்மா உங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போக வந்திருக்கு”

“ஏன் எதுக்கு?”

“ஏதுன்னா?” அதிபர் வாயைத் திறக்கும் முன்னே..

“இல்ல அது வந்து பெமிலி பங்ஷன் ஒன்னு..நாளக்கி வந்திடலாம் சர்மி” தடுமாற்றத்துடன் சொன்னாள் தாய் ராபியா.

“ஐயோ! அது முக்கியமில்லமா. பாடம் மிஸ் ஆவுமே?”

“இன்னக்கி ஒருநாள் தானே மா? வா போய் வரலாம்” சர்மியின் விலகற் பத்திரம் தொட்டு எல்லாம் ஏற்கனவே கேட்டு எடுத்து விட்ட தாய் அவளைக் கட்டாயப் படுத்திக் கூட்டிச் செல்ல, அந்த சம்பாசனைகளைப் பார்த்து வாய் மூடி இருந்தார் அதிபர். தன் கல்லூரி ஒரு நல்ல பிள்ளையை இழக்கும் கவலை அதிபருக்கிருந்தாலும், ராபியாவின் முகம் ஏதோ சிலவற்றை அவருக்கு உணர்த்த வாய்மூடி வழியனுப்பி வைத்தார்.

“மதராஸா ரொம்ப நல்லா இருக்குமா? சாப்பாடு கூட நல்லா கெடச்சும் தெரியுமா? டெய்ம் போறது விளங்கவே விளங்காது. பிரன்ட்ஸ் கூட ரொம்ப நல்லவங்கமா.” வீட்டில் நடந்து முடிந்த நடப்புக்கள் பற்றி ஏதும் தெரியா சர்மி வாய் மூடாமல் தாயிடம் பேசிக் கொண்டே வர, ராபியாவும் பதிலுக்கு புன்னகைத்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தார்கள்.

“அப்போ வீட்டுக்கு வரவே பிடிக்கல்ல” நுழைவாயில் தாண்டி வீட்டுக்குள் செல்லும் போதே முனுமுனுத்த சர்மி, முன் ஹோலில் அமர்ந்து கொண்டாள்.

“அதுசரி உம்மா. என்ன பங்ஷன்? அதுவும் நான் வார அளவுக்கு அப்பிடி பெரிசா என்னம்மா?”

“அது எல்லாம் அப்புறம் பேசிக்கலாம் போய் வொஷ் எடுத்துட்டு வா..”

“இனி என்ன விஷயம்னு மட்டும் சொல்லுங்களே..?”

“நான் உன் கூடக் கொஞ்சம் பேசனும் சர்மி. முதல்ல போய் வொஷ் எடுத்துட்டு வா..”

“என்னம்மா?”

“சொல்றத செய் சர்மி”

தாய் கோவமாய்ப் பேச, குழம்பிப் போன சர்மி முகத்தை மட்டும் நனைத்துக் கொண்டு தாயின் பக்கம் வந்தாள்.

“அங்கு ராபியாவின் முகம் சோர்வுற்றிருக்க, “ஏன்ட உம்மா என்ன பிரப்லம் சொல்லுங்களேன். ஏன் நீங்க வாடிப் போய் இருக்கீங்க?”

“இப்படி வா சர்மி..” தன் பக்கத்தில் பிள்ளையை இருப்பாட்டிக் கொண்ட தாய் ராபியா,

“புள்ள நீ எதுக்கு என்கிட்ட மதரஸா போகனும்னு சொன்ன? உம்மாவ பார்த்து உண்மைய சொல்லு.” இப்படியொரு கேள்வியை தன் தாயின் வாயிலிருந்து எதிர்பார்க்கா சர்மி

“அது வந்து.. அது வந்து உம்மா..”

“என்னம்மா சொல்லு..” சர்மிக்கு இலேசாக நடுக்கம் பிடித்துக் கொள்ள “எனக்கு எல்லாம் தெரியும்மா.” சொல்லிக்கொண்டே எழுந்து நின்றாள் தாய்  ராபியா.

கதை தொடரும்…
Aathifa Ashra

அங்கு லுஹர் தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதற்காய்  எல்லோரும் மஸ்ஜிதில் திரண்டிருக்க, “முதலாம் கிலாஸ் சர்மி யாரு?” கூப்பாடு போட்டான் லேபர். “இந்தா இருக்காள்.” பக்கத்திலிருந்த அவள் நட்புக்கள் சர்மியைக் காட்டிக் கொடுக்க, ஏதோ சிந்தனையிலிருந்த…

அங்கு லுஹர் தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதற்காய்  எல்லோரும் மஸ்ஜிதில் திரண்டிருக்க, “முதலாம் கிலாஸ் சர்மி யாரு?” கூப்பாடு போட்டான் லேபர். “இந்தா இருக்காள்.” பக்கத்திலிருந்த அவள் நட்புக்கள் சர்மியைக் காட்டிக் கொடுக்க, ஏதோ சிந்தனையிலிருந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *