தன்னைத்தானே சிறை பிடித்துக் கொண்ட நபித்தோழர்

அபூ லுபாபா அல் அன்ஸாரி ரழியல்லாஹ் அன்ஹு எனும் நபித்தோழர். அவரின் இயற் பெயர் பஷீர் பின் அப்துல் முன்திரி or ரிபாஅத் பின் அப்துல் முன்திரி என்பதாகும். இவர் மதீனா வாசியும் அவ்ஸ் கோத்திரத்தை சேர்ந்தவரும் ஆவார். இவர் ஒரு ஈத்தம் பழ வியாபாரி. இவருக்கும் மதீனாவைச் சேர்ந்த குறைழா கோத்திர யஹூதிகளுக்கும் இடையிலான வியாபார உறவு மிகவும் அன்னிய ஒண்ணியமாக காணப்பட்டது.

இவர் அகபா உடன்படிக்கையில் கலந்து கொண்டவர். பத்ர் யுத்ததில் கலந்து கொண்டவர் என்று மூஸா இப்னு உக்பா என்று வரலாற்று ஆசிரியர் கூறுகிறார். நபி (ஸல்) அவர்கள் மதீனாவை இவரிடம் ஒப்படைத்து விட்டு பத்ர் யுத்ததில் கலந்து கொண்டார்கள். பத்ர் போரில் கலந்து கொண்ட நபித்தோழர்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை பங்குகளும் கனீமத்திலிருந்து இவருக்கும் நபிகளார் கொடுத்தார்கள் . உகது போர் மற்றும் ஏனைய அனைத்து யுத்ததிலும் நபிகளாருடன் கலந்து கொண்டார். மக்கா வெற்றியின் போது அம்ரு கோத்திரத்தின் கொடி இவரின் கையிலே தான் கொடுக்கப்பட்டிருந்தது.

நபி ஸல் அவர்கள் அஹ்ஸாப் போர் முடிந்த கையோடு தனது இராணுவ படையுடன் பனு குறைழாக்களை முற்றுகை இட்டார்கள். காரணம் அவர்கள் நபி ஸல் அவர்களின் உடன் படிக்கையை முறித்துக் கொண்டார்கள். நபி ஸல் அவர்களுக்கு பெரும் துரோகம் செய்தார்கள். நமக்கு தெரியும் ஒரு நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து கொண்டு அந்த நாட்டிற்கு துரோகம் செய்தால் அவர்களுக்கு என்ன தண்டனை என்று. இந்த அடிப்படையிலையே ரஸுலுலுலாஹ் தனது நபித்தோழர்களை அழைத்து மஷூரா செய்தார்கள் அதில் ஸஃத் பின் மூஆத் ரழி அவர்களின் ஆலோசனைப்படி அவர்களுக்கு மரண தண்டனை என்ற தீர்மானம் எடுக்கப் பட்டது .

பனு குறைழாக்கள் தந்திரதாரிகள். அவர்கள் யஹூதிகள் அல்லவா? அப்படித்தான் இருப்பார்கள். கொஞ்சம் கிரிமினலாத்தான் யோசிப்பார்கள். நபி ஸல் அவர்களிடம் அபூ லுபாபை தங்களிடம் அனுப்புங்கள் உங்களின் சட்டத்திற்கு கட்டுப்படுவது நாங்கள் அவருடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நபிகளார் ஏற்றுக் கொண்டு . இறைத் தூதர் அவர்களும் அபூ லுபாபாவை அனுப்பி வைத்தார்கள். அங்கு சென்று நிலமையை பார்த்தார். மோசடிக்கார கும்பல் அவரின் முன்னிலையில் வயது முதிந்த ஆண்கள் பெண்கள் உட்பட சிறுவர்கள் அனைவரையும் பாருங்கள் உண்ண உணவின்றி குடிக்க நீர் இன்றி அழுது கொண்டிருக்கிறார்கள் இந்தக் நீளிக்க கண்ணீரைப் பார்த்த நபித்தோழருக்கு மணம் இலகியது.

இவர்களோடு அபு லுபாபா ஈத்தம் பழ வியாபாரத்தில் நெருங்கிய தோழராக கூட்டாளியாக இருந்த காரணத்தால் இவருக்கும் மணம் இலகியது. அவர்கள் கேட்டார்கள் நாங்கள் முஹம்மதின் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டுமா என்று?

மௌனமாக இருந்த அபு லுபாபா இங்கு தான் ஒரு பெரும் தவறைச் செய்து விடுகிறார். அது தான் ஆம் நபி ஸல் அவர்களின் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்று தலை அசைத்தவர் தனது கையை கழுத்தின் பக்கம் உயர்த்தி சட்டத்திற்கு கட்டுப்பட்டால் மரண தண்டனைதான் என்று தனது கை அசைவினால் சைகை காட்டினார்கள்.

அவர்களுமோ ஆம் சரி புரிந்து கொண்டோம் நீங்கள் சென்று வாருங்கள் என்று பனூ குறைழாக்கள் அபு லுபாபாவிடம் கூறினார்கள். நபித்தோழர் அபு லுபாபா கையை சைகை செய்து மரண தண்டனை தான் என்று காட்டி விட்டு கையை நெஞ்சுப் பகுதிக்கு இறக்கவில்லை . தான் அல்லாஹ்வுக்கும் தனது தூதருக்கும் துரோகம் செய்துவிட்டேன் என்பதை உணருகிறார்கள். இவரின் இந்த விடையத்தில் தான் அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்.

விசுவாசிகளே அல்லாஹ்விட்கும் அவன் தூதருக்கும் மற்றும் உங்கள் அமானிதங்களுக்கும் நீங்கள் மோசடி செய்ய வேண்டாம் என்று. (27:8)

தனது துரோகத்தை தாமாகவே உணர்ந்த ஸஹாபி அவர்கள். மதீனா மஸ்ஜிதுக்கு கொல்லைப்புற வழியாக வருகிறார்கள். இங்கு மக்கள் அவரை முடிவை எதிர்பார்த்துக் கொண்டிரைக்கிறார்கள். தனது மஹா தவறை உணர்ந்த ஸஹாபி அவர்கள் நான் நபி ஸல் அவர்களின் முகத்தை பார்க்க மாட்டேன். நான் இன்றிலிருந்து அல்லாஹ்வும் அவனது தூதரும் எனக்கு பொது மன்னிப்பு வழங்கி எனது தவ்பாவை ஏற்கும் வரைக்கும் நான் உண்ண மாட்டேன் நீர் அருந்த மாட்டேன் என்று மதீனா மஸ்ஜிதின் அபூ லுபாபாவின் தவ்பா தூன் என்று இன்றும் அறியப் படும் தூனில் தன்னை சிறைப் பிடித்துக் கொண்டார். ஏழு நாட்களாக மற்றொரு அறிவிப்பில் பத்து நாட்களாக எதுவும் உண்ணவுமில்லை பருகவுமில்லை.

தொழுகை நேரம் வரும் போது மனைவி அல்லது அவரின் பிள்ளை கட்டுப் போடப் பட்ட கைற்றை அவிழ்த்து விடுவார்கள். தொழுகை முடிந்ததும் பழைய நிலமைக்கு சிறைபிடித்துக் கொண்டார்கள். இதன் காரணமாக மயங்கி விழுந்தார் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

அல்லாஹ் அவரின் தௌபாவை ஏற்றுக் கொண்டு மன்னிப்பு வழங்குகிறான். அவரின் மன்னிப்பு பற்றிய வஹி நபி ஸல் அவர்கள் உம்மு ஸலமா ரழி அவர்களின் வீட்டில் இருக்கும் போது வருகிறது. இறைத் தூதர் அவர்கள் திடீரென புன்னகைக்கிறார்கள். ஏன் சிரிக்கிறீர்கள்? அல்லாஹ் உங்களை புன்னகையுடன் வைத்துக் கொள்வானாக என்று கூறினார்கள். ரஸுலுலுலாஹ் ஸல் அவர்கள் அல்லாஹ் அபு லுபாபாவின் தௌபாவை ஏற்றுக் கொண்டான் என்று கூறினார்கள் . அவர் ஒரு சுவன வாசி என்று மற்றும் ஒரு அறிவிப்பில் ஜிப்ரீல் அலை அவர்கள் நற்செய்தியைக் கூறுகிறார்கள். இததை செவிமடுத்த நபிகளாரின் மனைவிக்கு அந்த நற்செய்தியை நான் அபுலுபாபவுக்கு சொல்லட்டுமா என்று கேட்டார்கள் (ஹிஜாப் கடமையாக்கப் பட முன்பு ) நீங்கள் விரும்பினால் சொல்லுங்கள் என்று கூற அபுலுபாவை நற்செய்தி பெருங்கள் அல்லாஹ் உங்களின் தௌபாவை ஏற்றுக் கொண்டான் என்று கறிய உடனே மக்கள் எல்லோரும் பெரும் திரளாக திரண்டனர் அவரை அவிழ்த்து விட. ஆனால் அபு லுபாபாவோ மறுத்து விட்டார். நபி ஸல் அவர்கள் தான் இந்தக் கட்டை அவிழ்த்து விட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். நபிகளார் ஸுப்ஹு தொழுகைக்காக செல்லும் போது கட்டை அவிழ்த்து விட்டார்கள்.

நபித்தோழர் அபு லுபாபா யாரஸுலுலுலாஹ் நான் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறுதல் செய்த இந்த பூமியில் நான் கால் பதிக்க மாட்டேன் நான் வேறு பூமிக்கு செல்கிறேன் மதீனாவை விட்டு தூரம் சென்றார் இந்த மோசடிக்கார பனூ குறைழாக்களை ஏழெடுத்தும் பார்க்க மாட்டேன் என்று கூறினார் . இதோ எனது அனைத்து சொத்துக்களையும் செய்த தவறுக்கு தௌபா குற்றப் பரிகாரமாக அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்கிறேன் என்று கூறினார்கள். நபிகளார் கூறினார்கள் இல்லை அபு லுபாபாவே மூன்றில் ஒரு பகுதியைக் தர்மம் கொடுங்கள். மீதி இரண்டு பகுதியையும் உங்களுக்கு பிரையோசனமாக இருக்கும் என்று கூறினார்கள் .

அபு லுபாபா நபித்தோழர்களில் சிறந்தவர்களாக காணப்பட்டார்கள். முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் நம்பிக்கை உடையவராகும், வாக்குறுதியை நிறைவேற்றக் கூடியவராகவும் வாழ்ந்தார். அலி ரழி அவர்களின் ஆட்சிப் பகுதியின் ஆரம்ப பகுதியில் மரணம் அவர்களை வந்தடைந்தது.

யா அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து விடுவாயாக எங்களுக்கும் சுவனத்தை பரிசாக தந்து விடுவாயாக.

படிப்பினை.

  1. கடல் அளவு தவறு செய்தாலும் அல்லாஹ்வின் அருளிலிருந்து விரண்டோடி விடாதீர்கள். அல்லாஹ் மிகவும் மன்னிக்க கூடியவன் உங்கள் பாவங்களை நிச்சயமாக அவன் மன்னிப்பான்.
  2. அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் தங்களுக்குள்ளும் (முஸ்லிம்களுக்கு மத்தியில்) துரோகம் செய்வது ஹராம் ஆகும்.
  3. அவர் செய்த தவறு அவர் சுவனம் நுழையக் காரணமாக அமைந்தது பாவம் செய்தால் அதற்காக தௌபா செய்யுங்கள். எந்த அமல் உங்களை சுவனம் நுழையச் செய்யும் என்பது உங்களுக்கு தெறியாது.
  4. இதில் தௌபாவின் சிறப்பு இருக்கிறது.
  5. ஹிஜாப் கடமையாக்கப் பட்டது இந்த சம்பவத்திற்கு பிறகு.
  6. சுப செய்திகளை மற்றவருக்கு எற்றி வைத்தல் அதில் கஞ்சத் தனம் செய்யக கூடாது அது அவர்களுக்கு சந்தோஷத்தை உள மகிழ்ச்சியை கொடுக்கும்.
P.T.KASEER AZHARY.
kinniyan.

Leave a Reply