ஏக்கம்

வெளியில் சொல்ல முடியாத
ஓராயிரம் வலிகள் மனதில்.
தலையணை நனையாத
கண்ணீர்த்துளிகள் விழியில்.

உணர்வுகளால் உணர்த்த முடியாத
ஏமாற்றங்கள் வாழ்வில்.

சில மாற்றங்கள்
ஏமாற்றங்களை தந்தது.
அந்த ஏமாற்றங்களோ
என்னை மாற்றியது.

எனது மாற்றங்கள்
எதிரியின் ஏமாற்றமே!

கண்ணீர்த்துளிகளை
காணாது கடக்க முடியாது
இந்த வாழ்க்கை பாதையை!

எத்தனையோ ரணங்களை
தாங்கிய இதயம் இனி
இமயத்தையும் தாங்கும்
தளர்ந்து போகாது!

Noor Shahidha.
SEUSL.
Badulla.

Leave a Reply