தாயோடு பட்டதாரியாகினேன்

தாயோடு பட்டதாரியாகினேன்

இன்று என் அன்னைக்கு
பட்டமளிப்பு விழா
இல்லையில்லை
என் அன்னையோடு
எனக்கும் பட்டமளிப்பு

விரிவுரைக்கு தாயோடு சென்றேன்
இல்லை தாய் என்னை
கருவாக சுமந்து சென்றாள்.

மூன்றாண்டுப் பயணமிது
கருவரையில்
ஈரைந்து திங்கள் கற்றேன்
மீதியை பல்கலை
நண்பிகளோடு அமுதாக
ஊட்டினாள் என் அன்னை.

கருவரைக்கல்வி
உன்னதமானதென்பதை
உலகறியச் செய்துவிட்டாள்
என் அன்னை

Farisa Asadh
ஆசிரிய பக்கம் கவிதை