காதலர்களே!
- by admin
- 18
கண்கள் மோதி
காதலில் விழுந்து
காயங்கள் தேடும்
காதலர்களே!
பகட்டான வேஷம்
போலியான பாசம்
கண்டவுடன் தேசம்
சுற்றும் காதலர்களே!
முத்தங்கள் பரிமாறி
முகவரிகள் வழிமாறி
பாதைகள் தடம்மாறி
தடுமாறும் காதலர்களே!
அவசரத்தில் அலைந்து
அத்தனையும் முடிந்து
ஒப்பனைகள் கலைந்து
அவதியுறும் காதலர்களே!
காதல் என்ற பெயரில்
காலங்கள் கரைய
கனவுகள் கலைய
கண்ணீர் சிந்தும்
காதலர்களே!
மதியிழந்து மாயைகளில்
மயங்கிடாமல்
உங்கள் புனிதமான காதலை
உரிமையுள்ள உங்களுக்கான
துணையுடன் பகிர்ந்திடுங்கள்
கண்ணியமாய் வாழ்ந்திடுங்கள்
காதலர்களே!
Rushdha Faris
South Eastern University of Sri Lanka.
கண்கள் மோதி காதலில் விழுந்து காயங்கள் தேடும் காதலர்களே! பகட்டான வேஷம் போலியான பாசம் கண்டவுடன் தேசம் சுற்றும் காதலர்களே! முத்தங்கள் பரிமாறி முகவரிகள் வழிமாறி பாதைகள் தடம்மாறி தடுமாறும் காதலர்களே! அவசரத்தில் அலைந்து…