உந்தக்காப்புத் தத்துவம் (Law of Conservation of Momentum)

0 Comments

ஆரம்ப உந்தம் பூச்சியம்! பாரமான Bag வேகமாக கீழே போகும் போது, இறுதி உந்தத்தைப் பூச்சியமாக்க பாரம் குறைந்த கை அதிவேகமாக மேலே போகும்! (மூக்கு பத்திரம்!) Physics is Simple Ifham Aslam

சுகாதார அமைச்சரின் பார்வையில் சக்திக் காப்புத் தத்துவம் – விஞ்ஞான அமைச்சரவை

0 Comments

அமைச்சர் குடத்தை மெதுவாகத் தான் எறிகிறார். ஆனால், குடமானது கீழே செல்லும் போது வேகம் கூடி, பெரிய வேகத்துடனேயே நீரை அடிப்பதை அவதானிக்க முடியும்! “பசக்க்” என்று பெரும் சத்தம் அதனால் தான் கேட்டது) Physics விளக்கம் சக்திக் காப்புத் தத்துவம்: மொத்த சக்தி காக்கப்படும். இங்கு, பொறிமுறைச் சக்தியே (இயக்கம் (or வேகம் u) காரணமான இயக்க சக்தி, பொருளின் நிலை (உயரம் h) காரணமான அழுத்த சக்தி) காணப்படும்! அத்துடன், இயக்க சக்தி + […]

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச அவர்களுக்கு ஓர் திறந்த மடல்!

0 Comments

மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்களே! நீண்ட நாளாக ஒரு ஏக்கம். ஒரு வலி. யாரிடம் கூறுவது என்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருந்தேன். இந்தப் புலம்பலானது எனது புலம்பல் மாத்திரமல்ல, ஒரு ஒட்டுமொத்த சிறுபான்மைச் சமூகமொன்றின் புலம்பல். அவர்களுக்கும் தெரியவில்லை, யாரிடம் கூறினால் அவர்களின் புலம்பலுக்குத் தீர்வு கிடைக்கும் என்று. நான் ஒரு இலங்கைக் குடிமகனாக இருப்பதால், எமது ஜனாதிபதியான உங்களிடமேயே நேரடியாகப் புலம்பி விட முடிவெடுத்து விட்டேன். உங்களால் மாத்திரமேயே எனது புலம்பலுக்கு, மன்னிக்க வேண்டும் எமது புலம்பலுக்குத் […]

சிறுபான்மையின மாணவர்களிடமிருந்து சிங்கள மொழி தூரமாக்கப்படுகிறதா?

0 Comments

எத்தனை அதிபர்கள் கவனித்திருப்பார்களோ,  தெரியவில்லை. எத்தனை ஆசிரியர்கள் கவனித்திருப்பார்களோ, தெரியவில்லை. எத்தனை சிறுபான்மையின கல்வியியலாளர்கள் கவனித்திருப்பார்களோ, தெரியவில்லை. சிங்கள மொழியானது மாணவர்களிடம் இருந்து தூரமாகும் வகையிலேயே சாதாரண தரத்திற்கான பாடத்தெரிவுகள் அமைந்திருக்கின்றன. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற சிங்களப் பாடத்துடன், வணிக (commerce) பாடமே pool Subjects ஆக இருக்கிறது. சிங்களம் அல்லது வணிகம். இரண்டில் ஒன்றையே தெரிவு செய்ய வேண்டும். உயர்தரத்தில் Commerce செய்ய வேண்டும் என்று ஆசைப்படும் மாணவர்களும், “சிங்களம் தெரியாத மொழி – […]

போதையால் மாறிய பாதை (தொடர் 3)

0 Comments

‘இவங்ககிட்ட கேட்டால் சரி வராது செயலில் இறங்க வேண்டியது தான்’ என‌ நினைத்துக் கொண்டே‌ சகுனம் பார்த்துக் கொண்டிருந்தேன். மறுநாள் பகல், வீட்டுப் பெண்கள் எல்லோரும் சமயலறையில் பிசி. உடனே உம்மாவின் அலுமாரியைத் திறந்து, தங்கச் சவடியை‌ எடுத்துக் கொண்டு சத்தமில்லாமல் கிளம்பி விட்டேன். நேரடியாக அவனிடம் சென்று, நகையைக் கொடுத்து “ஐஸ்” எனும் போதைப்பொருளை‌ அதிகமாக வாங்கினேன். அந்தச் சவடி மூன்று நான்கு லட்சம் பெறுமதியிருக்கும். அது மூன்று நான்கு ஐஸ் பக்கெட்டுக்கு முன்னே பெரிதாகத் […]

போதையால் மாறிய‌ பாதை (தொடர் 1)

0 Comments

பெனால்டி பொக்ஸ் (Penalty Box) இற்கு சற்று வெளியே ஃப்ரீ கிக் (Free Kick). கோல்கீப்பராக சினாஸ். என் நண்பன்! எனக்குத் தெரிந்த சிறந்த கோல்கீப்பர்களில் அவனும் ஒருவன். அவனைத் தாண்டி கோல் அடிப்பது சற்றுக் கடினம். இடது, வலது, மேலே, கீழே என எந்தப் பக்கமாக அடித்தாலும் பாய்ந்து பாய்ந்து பந்தைப் பிடிக்கும் லாவகம் உடையவன். “ஒலிவர் கான்” என்று அவனை அழைப்பதில் இருந்து அவனது திறமையைப் புரிந்து கொள்ளுங்கள். சினாஸ் மூன்று பேரை கோல் […]

சிங்கள மொழிப் புலமை: காலத்தின் தேவை

0 Comments

“எமது நாடு சிங்களம் பேசுபவர்களை அதிகமாகக் கொண்ட நாடு என்பதை பல ஆராய்ச்சிகளின் முடிவில் கண்டறிந்த ஓர் முடிவாகும்” என்றெல்லாம் கூறிக்கொண்டு இருக்கத் தேவையில்லை, அது எல்லோரும் அறிந்த உண்மை! அதேபோல், எமது தமிழ் மொழி பேசும் சிறுபான்மையினரில் பெரும்பாலானோருக்கு இரண்டேயிரண்டு சிங்கள வாக்கியங்கள் தான் தெரியும்! “இஸ்ஸரா ஹோல்ட் பஹினவா” “பத் பார்ஸல் கீய’த?” இந்தப் பெரும் மலைக்கும் சிறு மடுவிற்கும் இடையே இனி எவ்வாறு பாலம் போடுவது. உப்புச் சப்பில்லாத சாப்பாட்டை சமாளிக்க பப்படத்தை […]

டாக்டர் அன்பாஸ்: சமூகத்திற்காக உழைக்கும் ஓர் ஊழியன்

0 Comments

[cov2019] நேற்று 03.04.2020 களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் பிரசவத்திற்கு வந்த ஓர் கர்பிணித் தாய் சம்பந்தப்பட்ட voice note ஒன்றினால், சற்று பதற்றம் ஏற்பட்டதை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். யாவரும் மனிதர்களே! மனிதர்கள் தவறுகளுக்கு மத்தியிலேயே படைக்கப்பட்டவர்கள். Dr.Anfas அதற்கு விதிவிலக்கானவரல்ல. பெரும்பான்மையினருடன் இணைந்து சேவைகளில் ஈடுபடுபவர்கள் தினமும் சந்திக்கும் நிகழ்வுகளில் மிக முக்கியமான ஒரு விடயம் இருக்கிறது. அது, எமது சமூகத்தில் இருக்கும் ஒருசிலர் செய்யும் முட்டாள்தனமான வேலைகளுக்காக சக ஊழியர்களிடம் பேச்சுக் கேட்பது. “ஒங்கட […]

ஏன் இந்தப் பொடுபோக்குத் தனம்??

0 Comments

சீனா’ல தானே! எங்களுக்கு நோ ப்ரொப்ளம்! இத்தாலி’ல தானே!! எங்களுக்கு நோ கேஸ்!! அமெரிக்கா’ல தானே!! எங்களுக்கு நோ வொர்ரீஸ்!!! கடசில, கம்பஹா’ல தானே!! இங்க இல்லயே!! இவ்வாறு, ஒவ்வொரு படிமுறையாக பொடுபோக்காக இருந்து விட்டு, அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்ட பின்னர், “அந்த ஏரியால தானே, எங்கட ஏரியா’ல இல்லயே!!” என்று வியாக்கியானம் பேசித் திரிந்து கொண்டிருக்கின்றனர், இலங்கையர்கள். ஊரடங்கு உத்தரவையும் மதிக்காமல், ஒன்று கூடி விளையாடுவதும், ஒன்றாக உணவருந்துவதும், ஒன்றாக பேசிக்கொண்டிருப்பதுமாக நாட்களைக் […]