என் கால்கள் போடும் நடனமிது

0 Comments

நடைப்பயணமாகவே நீண்ட தூரம் வெகு நாளாக செல்கிறேன். பேரிரைச்சல் இல்லா கடலலையை தேடி அலைகிறேன் கால் நனைக்க. அதோ அங்கே! கறுத்த முகத்தோடு பார்க்கவே பயங்கரமாக கடலலை தொட்டு விட்டு செல்லும் ஈரலிப்பான உடலோடு கரும்பாறை எனக்காக காத்திருக்கிறது. என் நடமாட்டத்தை சுருக்கிக் விட்டேன். என் இருப்பிடத்தை அடைந்து விட்டேன். என் பயணத்தின் எல்லையை வரையறை செய்து விட்டேன். புத்தகங்களோடு தன்னந்தனியே தனித்தீவில் ஒதுங்குகிறேன். எனைத் தேடுபவர் யாராவது இருந்தால் காகிதத்தில் எழுதி கடலலையிடம் கொடுத்து விடட்டும். […]

பிராத்தனை துஆ

0 Comments

தனியாக விழுகிறேன் தனியாக அழுகிறேன் மௌனமாக பேசுகிறேன் அருகினிலோ தூரத்திலோ யாரும் கண்ணுக்கு பட்டதாய் இல்லை! ஆனாலும் என் முறைப்பாடுகள் நீள்கிறது ஆறுதல் கிடைக்கிறது மௌன மொழியின் அர்த்தம் புரிகிறது மனதின் பாரம் குறைகிறது பிராத்தனைகள் என் வலிகளை ஏந்தி நிற்கிறது என் இருப்பிடம் சுஜூது செய்யும் இடமாகிறது எனக்கு அருகிலல்ல! என்னுடனே; என் இறைவன் உள்ளான்! வார்த்தைகளை இப்போது பத்திரப்படுத்துகிறேன். அடுத்த பிராத்தனையில் ஒப்புவிப்பதற்காய். மருதமுனை நிஜா

சுதந்திர தினத்தன்று சுதந்திரமடையட்டும் பெண்கள்!!

0 Comments

நாடு சுதந்திரம் அடைந்து; நாட்டவரும் சுதந்திரமடைந்து பலவருடங்களாயிற்று. ஆனால் இன்னும் அடிமைத்தனத்தினுள் கட்டுண்டு அடுப்படியில் காலத்தை கடத்துகின்றனர் பெண்கள். பெண்கள் வலுவடைந்து அடிமைத்தனம் ஒழிந்து இன்று பிரகாசிக்கின்றனர் என்று வெறுமனே அதிகரித்துள்ள பெண்களின் பல்கலைக்கழக நுளைவு விகிதத்தை மாத்திரம் காட்டி மாயாஜாலம் செய்யப்படுகிறது. பெண் இன்னும் சுதந்திரமடைய வில்லை அவள் சிறைப்படுத்தப் பட்டுள்ளாள். ஊடகத்துறையிலோ அரசியலிலோ மேலும் உயர்பதவியில் அவளின் விகிதாசாரம் மற்றும் பங்கு பற்றும் தன்மை குறைவே. சிலபோது அவளின் கல்வி பயணம் பல்கலைக்கழக கற்கையோடு […]

சுதந்திர தினத்தில் சகவாழ்விற்கு வித்திடுவோம்!

0 Comments

சுதந்திர தினம் சுதந்திரமாய் கொண்டாடப்பட வேண்டும். மாறாக ஒரு கையில் சமாதானப் புறாவும் மறு கையில் புறாவினை பிடித்து அடைக்க கூண்டும் வைத்தாற் போல் கொண்டாடுவதில் அர்த்தமில்லை. எமது நாடு பன்மைத்துவ சமூக அமைப்பைக் கொண்ட நாடாகும். எனவே சுதந்திரம் என்பது ஒரு இனத்துக்கு மாத்திரம் கிடைக்கப்பெற்றது அன்று. அனைத்து இனமக்களும் சுதந்திரம் பெற்றவர்களே என்ற அடிநாதத்தை உயிர்ப்பிக்க வேண்டும். சிறுபான்மை இனம் நாட்டின் சட்டத்தை மதித்து வழ்தலுடன் பன்மைத்துவ சமூக அமைப்பில் எமது தனித்துவத்தை இழந்துவிடாமல் […]

வர்க்க வேறுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் இஸ்லாம்!

0 Comments

மனிதன் மண்ணில் பிறக்கையிலும் அவனுள் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஏனெனில் அவன் ஒரே தாய் வயிற்றில், ஒரே ஊரில், குறிப்பிட கால சூழ்நிலையில் பிறப்பவன் அல்ல. எனவே அவன் இன, நிற, மொழி ,வர்க்க வேறுபாடுகளை இயல்பாகவே கொண்டுள்ளான். “மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் […]

பொறுமை பெண்ணுக்கு பெருமை!

0 Comments

பெண்ணுக்கு நிகராக பூக்களை வர்ணிப்பது அவர்களின் மென்மையினாலே! மேன்மை தாங்கிய மென்மை இனமான பெண்ணினத்திற்கு அழகு சேர்பபது அவர்களின் பொறுமையே!!! பொறுமைக்கு பெண் உவமையாக கொள்ள காரணம் அவளின் தாய்மைப் பேறே!! தன் தாய்மை அடையும் போது தன் வயிற்றுச்சுமையை பத்து மாதமும் பக்குவமாய் சுமக்கிறாள். தாய்மைக்கு தலையசைப்பது இப் பொறுமையே! ஆகவே பெண்கள் அணிகலனாய் அணியவேண்டியது பொறுமையையே. பொறுமை இல்லையேல் வாழ்வின் எத் தருணத்திலும் வெற்றியை சுவீகரித்துக் கொள்ள முடியாது. பொறுமை இல்லையேல் இவ்வுலகிலும் சரி […]

இவள் மலர்

0 Comments

கொள்ளை அழகு கொஞ்சிட துடிக்க வைக்கும் வசீகரம் பார்த்த நொடியே மனதை இழுக்கும் மென்மை இதழாலே ஆயிரம் மொழி பேசும் தோரணம் மணம் வீசி மனதை பறிக்கும் அற்புதம் நான் பெண் அல்ல மலர் தான் என்னை வர்ணிப்பதுடன் நிறுத்தி விடுங்கள் !! என்னை பறித்து கசக்கி விடாதீர்கள் மருதமுனை நிஜா

தந்தை – மகள் உறவு

0 Comments

உலகில் தோன்றிடும் உறவுகளுள் இரத்தபந்தமானது உன்னதமானதே! அதிலே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதே தந்தை – மகள் உறவு. ஒரு பெண் திருமணமாவதற்கு முன் ஹலாலான முறையில் முதற்தடவையாக காதல் கொள்ளும் முதல் ஆணுடனான உறவு என்றால் அது தந்தை உறவே! இதில் காமம் கிடையாது. ஆனாலும் இவ்வுறவில் அன்புக்கு பஞ்சமில்லை இதுவே இவ்வுறவின் அற்புதம். தந்தையின் கடல் அளவு கோபமும் சுமையும் நொடிப்பொழுதில் மறைந்து விடும் தன் மகளின் சிறு புன்னகையில். எப்படிப்பட்ட திடமான தந்தையாக இருந்தாலும் […]

வேறெதுவும் தேவை இல்லை

0 Comments

எதிர்பார்ப்புக்களின் பட்டியல் நீள ஆசைகளின் கனவுகள் தொடர கற்பனையில் உடலிருக்க உயிர் தொலைக்க ஏங்குகிறேன் நிஜத்தை அறிய!!! அழுகையில் இரவு விடயலாய் மாற காத்திருப்புகள் வரையறை இன்றி பயணிக்க வாழ்விற்கான விடியலை தேடுகிறேன்!!! முதற் படியே தள்ளிவிட சொந்தங்களே முட்டுக்கட்டை போட துரோகிகள் நண்பர்களாக வேஷம் போட தோல்விக்கு நான் சொந்தக்காரன் என நடப்பவை சொல்ல வெற்றியை தேடி அலைகிறேன்!!! காலத்தின் ஓட்டத்தின் தான் ஒரு பயணி இறைவனின் படைப்பில் நான் ஒரு அடியான் படைத்தவனை நம்புகிறேன்! […]