Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அவதூறினால் அவதிப்படும் பெண்கள். 

அவதூறினால் அவதிப்படும் பெண்கள்.

  • 12

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பெண்ணின் உரிமைக்கான போராட்டங்களும் பெண்ணின் நிலை குறித்தான நலனோன்பு காரியங்களும் கடலளவு பெருகி கோசங்கள் எழுப்பப்பட்டாலும் இன்று சமூகத்தில் பெண் தன் இனத்தாலோ அல்லது ஆணாலோ அவதூறு கூறப்பபட்டு அவதிப்படும் நிலை குறைந்ததாய் இல்லை. பெண்ணுக்கே வரப்பிரசாதமாய் கிடைக்கப்பெற்றது போன்று இதனுள் அகப்பட்டு விடுகினறனர். தைரியமான பெண்ணையும் இச்சொல்லால் அவதியுறச் செய்து அவளை ஒரு மூலையில் தள்ளிவிடுகிறது எம் சமூகம். அவதூறை பரப்புவதும் இட்டுக்கட்டுவதும் இன்று மலிந்து விட்டன.

சகோதரன் சகோரி என்று போலி உறவில் உரையாடல் ஆரம்பித்து நாளை காதல் மலர பெண் எதிர்த்தால் உடனே அவளை அவதூறு பேசி அல்லது இட்டுக்கட்டி அவளை குற்றவாளியாய் தரம் குறைத்து விடுகின்றனர். மறுபுறம் காதல் பிரிவு ஏற்பட்டால் அவதூறினால் தூற்றி அவளை சருகாய் மாற்றி உயிருடன் புதைக்கிறது இன்னொரு கூட்டம்.

இன்னும் பெண்கள் தாம் கேள்வி படும் விடயங்களை அது சரியா , அதன் உண்மை நிலை என்ன என எதுவும் அறியாமல் ஒரு பெண்குறித்தான தவறான கருத்தை பரப்பி அவளை விளம்பரப் பொருளாய் மாற்றி மானத்தை விற்கின்றனர். மானத்தை மறைப்பது என்னவோ ஆடையாக இருந்தாலும் மானத்தை களைவது அடுத்தவரின் அவதூறே!

பழி போடும் வார்த்தைகள் ஒன்றும் வாய்தவறி வருவதல்ல. வாய் தவறி வருவது பிழைகளை கொண்டிருக்கும். திருத்த முடியாத பிழைகளால் அலங்கரிக்கப்பட்டு அங்கிகாரம் சூட்டிய பின் அவதூறு சுமத்தப்பட்டவள் அவதிப்படுகிறாள் அனுதினமும்.இது சொல்லால் தவறியதல்ல மானத்தில் விளையாடியது.

ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள். (33:58)

இவ் இறைவாக்கு காதுகளில் எட்டிய பிறகும் சிறிய சிறிய சண்டை , கோபமான பேச்சு இவற்றுக்கெல்லாம் அவதூறு சொல்வது எம்மை விட்டு அகல வேண்டும்.

நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. (24: 23)

வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும்,மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (24: 19)

வெட்கக்கேடான செயல், பிறரிடத்தில் பரவ வேண்டும் என விரும்புவருக்குரிய தண்டனையாக இறைவன் மேற்கூறியவற்றை விதியாக்கி உள்ளான். இவ்வாறான தண்டனைகள் அவதூறுகள் பரப்பியோருக்கு வழங்ப்பட்டுள்ளது என்றால் அவதூறினால் அவதிப்படும் பெண்களின் நிலை துயரமாக இருப்பதனாலே ஆகும்.

சொல்லால் குற்றுயிராக்கி அவதூறை அவகாசம் இன்றி வீசி மானத்தில் விளையாடிய அத்தனைபேருக்கும் இறைவனின் தண்டனை உண்டு பழி போடும் முன் தாம் ஒவ்வொருவரும் தம் குடும்பத்திலுள்ளவர்களை நினைவில் கொள்வோம். வாழ்க்கை இத்தோடு முடிவடைவதல்ல இவை மாறி மறுகணம் தமக்கு நடக்க சில நொடியே!!

மருதமுனை நிஜா
ஹுதாயிய்யா
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்

பெண்ணின் உரிமைக்கான போராட்டங்களும் பெண்ணின் நிலை குறித்தான நலனோன்பு காரியங்களும் கடலளவு பெருகி கோசங்கள் எழுப்பப்பட்டாலும் இன்று சமூகத்தில் பெண் தன் இனத்தாலோ அல்லது ஆணாலோ அவதூறு கூறப்பபட்டு அவதிப்படும் நிலை குறைந்ததாய் இல்லை.…

பெண்ணின் உரிமைக்கான போராட்டங்களும் பெண்ணின் நிலை குறித்தான நலனோன்பு காரியங்களும் கடலளவு பெருகி கோசங்கள் எழுப்பப்பட்டாலும் இன்று சமூகத்தில் பெண் தன் இனத்தாலோ அல்லது ஆணாலோ அவதூறு கூறப்பபட்டு அவதிப்படும் நிலை குறைந்ததாய் இல்லை.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *