Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அரசியல் கலவை 

அரசியல் கலவை

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நவீன உலகில் காலத்திற்குக் காலம் சந்தைக்கு புது பொருள் வருவதும் அது குறித்த காலம் சந்தையில் நிலைத்திருப்பதும்/ வந்த வேகத்திலேயே சந்தையை விட்டு வெளியேறுவதும்/ நீண்ட காலம் சந்தையில் நிலைத்திருப்பதும் தங்கியிருப்பது சந்தைபடுத்தல் கலவையிலும் (Marketing Mix) மற்றும் மேம்படுத்தல் கலவையிலுமே (Promotional Mix) தங்கியுள்ளது.

இது போன்றே இலங்கை அரசியலின் இன்றைய நிலை அமைந்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை வைத்தே இன்றைய பிரதான சபை நகர்த்தலை அவதானிக்க முடியும். இதுவரை தெரிவாகிய ஜனாதிபதிகள் பலவிதமான வாக்குறுதிகளை வழங்கி அதிகாரத்தைப் பெற்று இரண்டாவது முறையும் ஜனாதிபதி ஆகினார்கள். ஆனால் 6 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான மைத்திரி பால சிறிசேனவின் படுமோசமான அரசியல் கலவையின் மூலம் இலங்கை அரசியலில் துர்நாற்றம் வீசியது என்றே குறிப்பிடலாம். அவரது உபாய மட்ட காய் நகர்த்தல்கள் யாவும் நகைச்சுவையான தாகவே அமைந்துள்ளன.

இவை எல்லாம் கடந்து இன்று 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக முன்னாள் பாதுகப்புச் செயலாளர் கோத்தாய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்கு பலவிதமான மற்றும் வரலாற்று முக்கித்துவம் வாய்ந்த அரசியல் கலவை இங்கேயே காணப்படுகின்றது. இலங்கை அரசியலை பொருத்தவகையில் மிகவும் கீழ்த்தரமான அரசியல் விமர்சனங்களை கொண்றே அரசியல் செய்கின்றனர். ஒருவரின் திறமைக்குப் பதிலாக அவர்களின் குறைகளைப் வைத்தே அரசியல் மேடைகளை நாரடிக்கின்றனர். அபிவிருத்திக் கொள்கைகள், பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கைகள், சுகாதார மற்றும் நாட்டின் உட்கட்டமைப்புக்கள் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக இவ்வாறான செயற்பாடுகளை வைத்தே அரசியல் செய்கின்றனர். இவை அனைத்திலிருந்தும் தற்போதைய ஜனாதிபதி வித்தியாசமான ஒரு கலவை ஒன்றை கையாள்கிறார் என்பதே நிதர்சனம்.

இங்கு நான் கூறப் போகும் விடயங்கள் யாவும் எதிர்கால அரசியல் கலவையை கொண்டதாகும். ஒரு பொருள் எவ்வாறு நீண்ட நாள் சந்தையில் நிலைத்திருக்க வேண்டுமோ அதற்கு ஏற்றவாறான பொருளின் விலை, இடம், உற்பத்தி மற்றும் மேம்படுத்தல் என்பன நுகர்வோர்க்கு ஏற்றவாறு உற்பத்தி செய்தால் மாத்திரமே காலவோட்டத்திற்கு ஏற்றவாறான சந்தையில் தனித்துவமான ஒரு இடத்தைப் பிடிக்கும். அது போன்றே தற்போதைய ஜனாதிபதியின் கொள்கைகளும் அமையலாம் என எதிர்வு கூறலாம்.

இன்று ஒரு பெரும் கருத்து காணப்படுகின்றது பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளால் தெரிவாகிய ஜனாதிபதி என்று. இது இனவாதிகளுக்கு தீனி போடுவதாகவே அமைந்துள்ளது என அரசியல் ஆய்வார்கள் குறிப்பிடுகின்றனர். இந்தியாவில் BJP எவ்வாறு இந்துத்துவத்துவ அலையை உருவாக்கி ஆட்சிபீடம் ஏறியதோ அது போன்றே இலங்கையிலும் பௌத்த அலை உருவாக்கப்பட்டு தற்போதைய ஜனாதிபதி ஆட்சி பீடம் ஏறியுள்ளார். BJP இன் பிரதான நபர்களே தற்போதைய அரசாங்கத்தின் உற்ற நண்பர்கள். மோடியின் ஆட்சியில் எவ்வாறு பண மதிப்பிழப்பு செய்யப்பட்டது, காஷ்மீர் யூனியன் பிரதேசமாக ஆக்கப்பட்டமை மற்றும் மோடியின் வெளிநாட்டுக் கொள்கைகளே இந்திய அரசியல் கலையின் பிரதான அங்கமாகும்.

இதன் பிரதிபளிப்புக்களை இலங்கையிலும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சாத்தியப்பாடுகள் அதிகமே. BJP யிற்கு எவ்வாறு காஷ்மீரின் அதிகாரத்தை தன் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வர முடிந்ததோ, அதே கலவையில் வட மாகாணம், கிழக்கு மாகாணம் என்பன இவ்வாறு யூனியன் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டால் இலங்கை பேரினவாத அரசியலில் பாரிய திருப்பு முனையாக இது அமையும்.

இவ்வாறான கலவைகள் எதிர்கால அரசியலில் தற்போதைய இருப்பை பாதுகாக்க உதவியாக இருக்கும். மறுபுறம் பிரதேச ரீதியாகவும், இன, மத ரீதியாகவும் ஒடுக்கு முறைக்கு ஒரு சில சமூகத்தினர் ஆலாகலாம். ஆனாலும் குறித்த நபருக்கு அரசியலில் நிலைத்திருக்க இது அவசியமாகின்றது. பொருளும் அரசியலும் நிலைத்திருக்க வேண்டுமாயின் உபாய மட்ட கலவை அவசியம் மாறாக அது இன மத பிரதேச ஒடுக்கு முறைகளுக்கு ஆளாகக் கூடாது என்பதே என் கருத்து. சமகால அரசியலை நுன்னிப்பாக அவதானிப்பது ஒவ்வொரு குடிமகனினதும் கடப்பாடாகும்.

வெலிகம அம்ஸல் ஹிபிஷி
வணிக முகாமைத்துவ முதுமானிக் கற்கை பீடம்
கொழும்பு பல்கலைக்கழகம்.

நவீன உலகில் காலத்திற்குக் காலம் சந்தைக்கு புது பொருள் வருவதும் அது குறித்த காலம் சந்தையில் நிலைத்திருப்பதும்/ வந்த வேகத்திலேயே சந்தையை விட்டு வெளியேறுவதும்/ நீண்ட காலம் சந்தையில் நிலைத்திருப்பதும் தங்கியிருப்பது சந்தைபடுத்தல் கலவையிலும்…

நவீன உலகில் காலத்திற்குக் காலம் சந்தைக்கு புது பொருள் வருவதும் அது குறித்த காலம் சந்தையில் நிலைத்திருப்பதும்/ வந்த வேகத்திலேயே சந்தையை விட்டு வெளியேறுவதும்/ நீண்ட காலம் சந்தையில் நிலைத்திருப்பதும் தங்கியிருப்பது சந்தைபடுத்தல் கலவையிலும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *