Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 92 

காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 92

  • 29

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

என்கிடுவுக்கு மயக்க ஊசிபோட்டு மித்ரத் ஆட்கள் கொண்டுபோய் விட்டனர். ஜெனியை தூக்கி கொண்டு வீட்டுக்கு விரைந்தார்கள் இவர்கள் அனைவரும். வீட்டுக்கு வரவழைக்கப்பட்ட டாக்டர்,

“ஏதோ அதிர்ச்சியில் மயக்கம் போட்டு இருக்காங்க.. யாரும் தொந்தரவு பண்ணாதீங்க. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.”

என்று விட்டு கிளம்பினார். அவளை அவளது ரூமில் ரெஸ்ட் எடுக்க விட்டு எல்லோரும் ஹாலில் ஆளுக்கொரு திசையில் அமர்ந்திருந்தனர். நடந்த விடயத்தை கில்கமேஷ் ஒருகணம் மீட்டிப்பார்த்தான்.

“நான் கில்கமேஷை தான் காதலிக்குறேன்.”

என்று ஜெனி சொன்னதும் அந்த வார்த்தைகளில் இருந்த உறுதியும் அவனை நிலைகுலைய செய்தது.

“ஆக,நம்மளை போலவே ஜெனியும் இவ்வளவு நாளும் சொல்லாமல் மறைத்து… சே.. இது தெரியாது நாம என்கிடுவை…”

என்று மனதுக்குள் எண்ணினான். என்னதான் சந்தோசப்படவேண்டிய விடயமாக இருந்தாலும் அதனை முழுமையாக அனுபவிக்க முடியாத அளவு பிரச்சினை வேறு திசைக்கு அல்லவா போய் விட்டது.

“இப்போ எல்லாமே நம்ம கையை மீறி போயிடுச்சு…. நாம ஜெனியை குற்றம் சொல்ல முடியாது… அவ இடத்தில் யாரு இருந்தாலும் அப்படித்தான் பண்ணி இருப்பா…”

என்றாள் டிடானியா.

“ஹ்ம்ம்… ஆனா மறுபடியும் என்கிடு அவங்க கிட்ட மாட்டி கிட்டான்…”

என விக்டர் சொன்னான்.

“நடந்தது நடந்து போச்சு… இனி நடக்க போறத பற்றி யோசிப்போம்.”

என்றான் ராபர்ட்.

“இப்படியே நாம போடுறே எல்லா பிளானும் சொதப்பிக்கிட்டே இருக்கு… இனி என்னதான் பண்ணுறது.?”

என்று கேட்டாள் மீரா.

“இப்போ என்கிடு பலமடங்கு கோபத்தில் இருக்கிறான். பார்த்தெல்ல சர்கஸ்ல வெச்சு ஜெனியை கொல்ல முயற்சி பண்ணத”

என்றான் ஆர்தர்.

“ஒவ்வொரு தடவையும் தோத்துகிட்டே வரோம்.”

என்றாள் மீரா.

“இந்த தோல்வி ஒரு மாபெரும் வெற்றியோட அடிப்படையாக கூட இருக்கலாம். அதனால யாரும் நடந்தத நினைச்சி வருத்தப்பட வேணாம். கண்டிப்பாக நாம எல்லோரும் ஒற்றுமையா இருந்து ஜெயிப்போம்.”

என்றான் கில்கமேஷ். அவன் எல்லோரையும் உற்சாகப்படுத்தினான். அவர்களுக்கு புது உத்வேகம் பிறந்தது.

“சரி நான் ஜெனியை பார்த்து பேசிட்டு வரேன்.”

என்றான் கில்கமேஷ்.

**********************

“அந்த கில்கமேஷ் என்ன பண்ணுறான்னு தெரியல்ல… ஆனா ஒரு டாக்டரை கூட என்னால கண்டுபிடிக்கவோ. கான்டக்ட் பண்ணவோ முடியல…”

என்று கோபத்துடன் தன் ஆட்களிடம் மித்ரத் சொன்னான்.

“எப்போ என்ன பண்ணுவது?” என்று ஒருவன் கேட்டான்.

“இன்னும் ஒரே ஒரு இடம் பாக்கி இருக்கு. எப்படியாவது அங்க இருக்குற டாக்டர் கிட்ட நான் பேசணும்.” என்ற மித்ரத் என்கிடு தூங்கி கொண்டிருந்த அறைக்குள் சென்று அவனை ஒருவாட்டி எட்டிப்பார்த்து விட்டு வந்தான்.

**************

கில்கமேஷ் ஜெனி அறைக்கு சென்றான். அவள் அருகில் அமர்ந்தான்.. அவள் தூங்கி கொண்டிருந்தாள். மெல்ல அவள் நெற்றி முடியை விலக்கி விட்டான். அந்த சலனத்தில் ஜெனி முழித்து கொண்டாள்.

“கில்கமேஷ்!”

என்று சொல்லியபடியே எழுந்திருக்க முயற்சி செய்தாள். அவன் சைகையால் வேண்டாம் அப்படியே படுத்திரு என்று சொல்ல அவளும் அவனை பார்த்து கொண்டே படுத்து கொண்டாள்.

ஜெனி, நான்…. இதுக்கு முன்னாடி நிறைய பாவங்கள் பண்ணி இருக்கேன். கண்ணுமன்னு தெரியாம பல பெண்களின் கற்பை சூறையாடி இருக்கேன். ஒரு மிருகமா வாழ்ந்து இருக்கேன். என்னை எப்படி நீ…?

என்று தயக்கத்துடன் கேட்டான். ஜெனி அவனது உதட்டில் ஒரு விரலை வைத்து மேலும் பேசவிடாமல் தடுத்து,

“எனக்கு தெரிஞ்ச கில்கமேஷ் வேற… அவன் அன்புக்காக எதையும் இழக்க துணிஞ்ச வீரன். கில்கமேஷ்! உன்னோட கடந்த காலம் எனக்கு முக்கியமில்ல. அதை பற்றி நான் யோசிக்கவும் விரும்பல. ஆனா என்னோட எதிர்காலம் நீயா இருக்கணும் என்று விரும்புறேன். என்னை கல்யாணம் பண்ணிக்குவியா?”

என்று கேட்டாள். அவனால் பேசமுடியவில்லை. அவளது இரு கைகளையும் சேர்த்து பிடித்தான். அதில் தனது நெற்றியை பதித்தான்.

“கண்டிப்பாக, நான் காதலிச்ச ஒரே பொண்ணு நீ தான் நீ மட்டும் தான். உன்னை கல்யாணம் பண்ணிக்குவேன். கண்டிப்பாக. இது என்னோட சத்தியம்.”

என்றான். மகிழ்ச்சியில் ஜெனி படுத்திருந்தவாறே கில்கமேஷை அணைத்துக்கொண்டாள். அப்போது வெளியே ஹாலில் ராபர்ட் பேச்சு சத்தம் கேட்டது.

“ஹேய்… அந்த ஹாங்காங் டாக்டர் எங்க இருக்காருன்னு கண்டிபிடிச்சுட்டேன்…”

என்று கத்த எல்லோரும் அவன் லேப்டாப் கிட்ட சென்றனர். அதேபோல் மித்ரத் அவன் ஆட்களின் உதவியுடன் அந்த டாக்டர் ஹாங்காங்கில் இருப்பதை கண்டு கொண்டான்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

என்கிடுவுக்கு மயக்க ஊசிபோட்டு மித்ரத் ஆட்கள் கொண்டுபோய் விட்டனர். ஜெனியை தூக்கி கொண்டு வீட்டுக்கு விரைந்தார்கள் இவர்கள் அனைவரும். வீட்டுக்கு வரவழைக்கப்பட்ட டாக்டர், “ஏதோ அதிர்ச்சியில் மயக்கம் போட்டு இருக்காங்க.. யாரும் தொந்தரவு பண்ணாதீங்க.…

என்கிடுவுக்கு மயக்க ஊசிபோட்டு மித்ரத் ஆட்கள் கொண்டுபோய் விட்டனர். ஜெனியை தூக்கி கொண்டு வீட்டுக்கு விரைந்தார்கள் இவர்கள் அனைவரும். வீட்டுக்கு வரவழைக்கப்பட்ட டாக்டர், “ஏதோ அதிர்ச்சியில் மயக்கம் போட்டு இருக்காங்க.. யாரும் தொந்தரவு பண்ணாதீங்க.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *