Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 10 

அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 10

  • 7

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

குதிரைகள் வேகமாக ஆரம்பித்த பயணம் இடைநடுவே நின்றுவிட்டன. அவை அசாதாரண நிலையில் பின்வாங்கியன. கியோன் முகமும் மாறியது. அலைசுக்கு ஒன்றும் புரியவில்லை.

“நம்மள யாரோ சுத்தி வளைச்சிருக்காங்க.”

“பிரின்ஸஸ் அலீஸியா… கொஞ்சம் ஜாக்கிரதை ஆக இருங்க என்னன்னு பார்த்திட்டு வர்றோம்..” என்றான் ரியூகி.

குதிரையை விட்டு இறங்கி புதரை நோக்கி சென்றான் கியோன். எதுவும் இல்லை என்று சொல்வதற்குள் கியோன் தாக்கப்பட்டான். குதிரைகள் கணைத்தன. தாக்குதல் நடத்துவது யாரென்று கண்களுக்கு தெரியவில்லை. ரியூகியின் கையும் தாக்கப்பட்டது. ரியூகி ஒருவிடயத்தை புரிந்து கொண்டான். எதிரிகள் கண்களுக்கு புலப்படவில்லை. ஆனால் அவர்களின் நிழல் மட்டும் விழுந்தது. ரியூகிக்கி முன்னாள் ஒரு நிழல் வாளை வீசுவது போல் வர அலீஸியாவும் கியோனும் கத்த ரியூகி எதிர் திசையில் வாளை வீசி எதிரியை தாக்கினான். இரத்தம் பீறிட்டது அவ்வளவு நேரமும் அவனது பின்னாடி நின்று கொண்டிருந்த நிழல் தேவதை ஒன்று வெட்டப்பட்டு கீழே விழுந்தது. அதன் உருவமும் இப்போது நன்றாக தெரிந்தது. தாமதிக்காது ஏனையவற்றின் நிழலை வைத்தே அவற்றை கொன்றான் ரியூகி. கியோனுக்கு பின்னால் ஒரு நிழல் தேவதை இருப்பதை கண்டு ரியூகி வாளோடு அவனை நோக்கி பாய,

“டேய்… டேய்.. நான் கியோன்… எதிரி இல்ல” என்று பயத்தில் கத்தினான். ரியூகி பாய்ந்து அதையும் கொன்ற பின்னர்,

“அப்பாடா…. என்னதான் கொல்ல வரியோ என்னு பயந்துட்டேன்” என்றான் கியோன்.

“கவலை படாதே… உன்னை இப்போ கொல்ல மாட்டேன்” என்றான் ரியூகி.

“ஆமா இதுங்கல்லாம் என்ன கிரீச்சர்” என அலைஸ் கேட்டாள்.

“இதுங்க தான் நிழல் தேவதைகள். உங்களுக்கு புரியும் வகையில் சொல்லணும் என்றால் ஷாடோ ஏஞ்செல்.”

“என்னது ஏஞ்செலா???”

“பேரு மட்டும் தான் ஏஞ்செல் மத்தபடி அவை பேயை விட கொடியது” என்றான் ரியூகி.

“ஒஹ்ஹ்… சரி… தாமதிக்குற ஒவ்வொரு நேரமும் நமக்கு தான் பிரச்சினை நாம கிளம்பலாம்.” என்று அலைஸ் சொல்ல மறுபடியும் பயணம் ஆரம்பித்தது.

காட்டு வனாந்தர எல்லைகளை கடந்து ஒரு கிராமம் வந்தது. அங்கே சற்று தொலைவில் ஒரு சந்தை பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

“அதோ தெரியுற சந்தையை தாண்டிவிட்டால் போதும். என் வீட்டுக்கு போய் விடலாம்.” என்றான் ரியூகி.

“உன்னோட தங்கை சோஃபி அங்க தனியாவா இருக்கா!”

“இல்ல இல்ல அவளை பார்த்துக்க ஒரு ஆயா இருக்காங்க நான் வீட்டில் இல்லாத நேரத்தில் அவங்க தான் சோஃபியை பார்த்துக்கொள்ளுவது வழக்கம்.” என்றான்.

குதிரையை விட்டு இறங்கி அதன் கடிவாளத்தை பிடித்து கொண்டே சந்தைக்குள் நடந்தார்கள் மூவரும். அப்போது இவர்களை இடித்து கொண்டு ஒருவன் சந்தைக்குள் ஓடினான். அவன் ஒரு பாட்டியின் பையை பறித்து கொண்டு ஓடுவதை அறிந்த ரியூகி அந்த திருடனை பிடிக்க பின்னாடியே துரத்தினான். மறுபுறம் இன்னுமொரு ஆளும் அதே நேரத்தில் அதே வேகத்தில் அந்த திருடனை துரத்துவதை ரியூகி கண்டான். ஒரே நேரத்தில் இருவர் கையிலும் அவன் அகப்பட்டான். கோணிப்பையால் தலையை மூடி இருந்த மற்றவனிடம் ரியூகி,

“இவனை நான் பார்த்துக்கிறேன் விடு தம்பி” என்று சொல்ல, ஆச்சர்யத்துடன் தலையில் இருந்த துணியை அகற்றி

“ரியூகி…” என்றது அந்த குரல்

தொடரும்…….
ALF. Sanfara.

 

குதிரைகள் வேகமாக ஆரம்பித்த பயணம் இடைநடுவே நின்றுவிட்டன. அவை அசாதாரண நிலையில் பின்வாங்கியன. கியோன் முகமும் மாறியது. அலைசுக்கு ஒன்றும் புரியவில்லை. “நம்மள யாரோ சுத்தி வளைச்சிருக்காங்க.” “பிரின்ஸஸ் அலீஸியா… கொஞ்சம் ஜாக்கிரதை ஆக…

குதிரைகள் வேகமாக ஆரம்பித்த பயணம் இடைநடுவே நின்றுவிட்டன. அவை அசாதாரண நிலையில் பின்வாங்கியன. கியோன் முகமும் மாறியது. அலைசுக்கு ஒன்றும் புரியவில்லை. “நம்மள யாரோ சுத்தி வளைச்சிருக்காங்க.” “பிரின்ஸஸ் அலீஸியா… கொஞ்சம் ஜாக்கிரதை ஆக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *