Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 15 

அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 15

  • 7

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

“சொல்லு சோஃபி அவன் எங்க என்னாச்சு?” என்று கேட்டான் ரியூகி.

“நாங்க வேட்டையாடி கொண்டு இருக்கும் போது திடீரென எங்கிருந்தோ சில டிராகன் ரைடர்கள் வந்துடுச்சி… அவன். அதுங்க கூட தனியா சண்டை போட்டுக்கிட்டு இருக்கான்.” என பதற்றத்துடன் சொல்லி முடித்தாள் சோஃபி.

“சோஃபி அலைசை பத்திரமா பார்த்துக்க” என்று அவளை சோஃபியின் குதிரையில் ஏற்றி விட்டு கியோன் சண்டையிடும் இடத்துக்கு விரைந்தான்.

அப்போது ஒன்று கியோனை தாக்க வர ரியூகி சென்று அதனை கொன்றான்.

“இவங்க சாடோவ் ஏஞ்செல்களோட ரைடர் தான் அவங்களுக்கு எப்படியோ அலைஸ் நம்ம கூட இருக்குற விஷயம் தெரிஞ்சிடுச்சு.” என்று கியோன் சொல்லி கொண்டிருக்கையில் சோபியும் அலைசும் வந்து சேர்ந்தனர்.

“ராத்திரியில் பயணிப்பது நல்லதில்லை விடியரத்துக்குள்ள நாம அடுத்த ஊருக்குள்ள போய்டனும்.” என்றான்.

சரி என்று விட்டு ரியூகி அலைசை அவனது குதிரையில் ஏற்றி கொண்டு முன்னே செல்ல கியோன் சோபியுடன் வந்தான். ஆனால் முன்னரை போல அவனால் வேகமாக குதிரை ஓட்ட முடியவில்லை.

“என்னாச்சு உனக்கு.” என்று கேட்டாள் சோஃபி

“ஒன்னுமில்ல” என கியோன் சொல்ல அவனை சந்தேகத்துடன் பார்த்த சோஃபி பதறிப்போனாள்.

“ஒஹ்ஹ். மை காட்… உனக்கு அடிபட்டு இருக்கு கியோன் உடனே ரத்தம் வெளியேறுவதை சரிபண்ணனும்.” என்றாள்.

“அதெல்லாம் ஒன்றும் தேவை இல்லை அப்படியே விட்டுட்டா ரெண்டு நாளில் சரியாகிவிடும்.”

“நீ திருந்தவே மாட்டே போடா” என்றவள் பின் பக்கமாக இருந்து கொண்டே அவன் வயிற்று புறமாக கையை வைத்து பட்டனை கழற்ற,

“ஏய்.. ஏய்.. என்னடி பண்ணுறே.”

“ஷ்…..” என்றவள் அவள் ஆடையில் ஒரு துண்டை கிழித்து அவனுக்கு அப்படியே கட்டிப்போட்டு விட்டாள். அத்தோடு அப்படியே அவனை இறுக்கி அணைத்து கொண்டாள்.

“நல்ல சாவகாசமா தூங்குறதுக்கு தான் இவ்வளவு கரிசனையா?”

“நான் முடிவு பண்ணிட்டேன் கியோன்.” என்றதும் அவன் குதிரையை நிறுத்தி விட்டான்.

“நீ என் மேல எவ்வளவு அன்பா இருக்கேன்னு நான் தெரிஞ்சி கிட்டேன். கியோன் இதைவிட உன்னை காதலிக்க எனக்கு வேறு எந்த காரணமும் தேவையில்லை.” என்றதும் கியோனுக்கு சந்தோசத்தில் என்ன சொல்வதென்றே புரியவில்லை. அவன் முகத்தை திருப்பி முத்தம் கொடுத்து விட்டாள்.

“எம்மாடி.. ஷாக் அடிச்சிட்டு” என்று அவன் சொல்ல இருவருமாக சிரித்து கொண்டே ரியூகியை பின்தொடர்ந்தனர்.

“அதோ தெரியுதே அதுதான் சாகுனோ நகரம் நாம அடுத்த சகோதரியை அங்க தான் தேடப்போறோம்.” என்று காட்டியபடி ரியூகி குதிரையை நிறுத்தினான்”

“ஓஹ்…”

விடிவதற்குள் அவர்கள் சாகுனோ நகரை அடைந்தனர். நகரின் எல்லையை அடைந்ததும் திடீரென கியோன்.

“எல்லோரும் குனிஞ்சிக்கங்க” என்று கத்தினான்.

தொடரும்……

ALF. Sanfara.

“சொல்லு சோஃபி அவன் எங்க என்னாச்சு?” என்று கேட்டான் ரியூகி. “நாங்க வேட்டையாடி கொண்டு இருக்கும் போது திடீரென எங்கிருந்தோ சில டிராகன் ரைடர்கள் வந்துடுச்சி… அவன். அதுங்க கூட தனியா சண்டை போட்டுக்கிட்டு…

“சொல்லு சோஃபி அவன் எங்க என்னாச்சு?” என்று கேட்டான் ரியூகி. “நாங்க வேட்டையாடி கொண்டு இருக்கும் போது திடீரென எங்கிருந்தோ சில டிராகன் ரைடர்கள் வந்துடுச்சி… அவன். அதுங்க கூட தனியா சண்டை போட்டுக்கிட்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *