குரங்கு மனசு பாகம் 24

  • 9

“என்னங்க ராபியா தங்கச்சோட நிலம பயங்கரமா தோனுது, அவ புருஷன்கு போன் பண்ணி அவசரமா ஹாஸ்பிடல் வர சொன்னா சரி எனக்குன்னா ரொம்ப பயமா இருக்குது.”

“அதுதான் மரியம் நான் ரிகானுக்கு கோல்  போட்டு சொல்லிட்டன். நீங்க கொஞ்சம் டென்ஷன் ஆவாம இரீங்க.. அந்த புள்ள போன கவலயால வந்த வருத்தமிருக்கும் இவக்கு..”

“ஹ்ம்ம் என்னப்பா செய்ய? பாவம் ராபியா தங்கச்சி”

மரியம் தன் கணவனோடு பேசிக் கொண்டிருக்கும் போதே பதட்டத்துடன் ஓடி வந்தான் ரிகான். மகள் விடயத்தில் மனைவியோடு பாய்ந்து விழுந்தாலும் ராபியாவுடன் பிரியமில்லாமலில்லை ரிகானுக்கு,

“என்ன? அவக்கு என்ன..? சொல்லுங்க.. ராபியா எங்க”

வியர்வைச் சொட்டுக்கள் அவன் நெற்றியில் கோலம் போட்டிருக்க, பயத்தால் கண்கள் சிறிதாகி இருந்தன.

“இல்ல அது வந்து.. அது என்னன்னா”

மரியம் தாத்தாவுக்கு என்ன சொல்வதென்றே புரியாமல் இருந்தது. மரியம் தாத்தாவின் வார்த்தைகளின் தேக்கம் ரிகானை இன்னும் பயங்காட்ட, பொறுமையிழந்தவன் டாக்டரை சந்திக்க விரைந்தான்.

“எக்ஸியூஸ்மீ டாக்டர்”

“ஆஹ் கம் இன்”

“டாக்டர் அந்த பேர்ஷன்கு என்னா?”

“நீங்க யார கேக்குறீங்க மிஸ்டர்..?”

“அது வந்து இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னால கூட்டி வந்து அட்மிட் பண்ணினாங்க..”

“ஹா நீங்க அவக்கு என்ன உறவு?”

“ஐ அம் ஹ ஹஸ்பன்ட் டாக்டர்..”

“ஓஹ் ஈஸ் இட்..? தென் ப்பிரே போ(for) ஹ”

“டாக்டர்???”

“அவக்கு வீட்டுல இருக்கும் போது ஹார்ட் வருத்தம் வந்திருக்கு முதல் தடவ, ஆஸ்பிட்டல் வந்ததும் செகன்ட் டெய்ம் வந்துட்டு இனி என்ன நடக்குமோ சொல்ல தெரியாது ஆனா இப்போதைக்கு ஷீ பைய்ன்.”

“டாக்டர்.”

ரிகானின் கண்கள் மலமலவென கண்ணீரை சிந்த, முகத்தை புதைத்துக் கொண்டு அழுதான். மனைவியோடு முகம் கொடுத்து பேசுமளவுக்கு முடியாமல் ஏக்கத்தோடு வெளியில் வந்தமர்ந்து கொண்டான்.

“மிஸ்டர் ரிகான்”

“ஓஹ் யெஸ்”

“யூ கென் கோ” அவசர சிகிச்சை பிரிவைக் காட்டி ரிகானை மாத்திரம் உள்ளே செல்ல அனுமதித்தார் அந்தத் தாதி.

“ஏன்ட அல்லாஹ்!”

அவன் இதயம் வேகமாய் துடிக்க, அந்தக் கோலத்தில் தன் மனைவியை காணுமளவுக்கு சக்தியற்றிருந்தான். மெதுவாய் நகர்ந்தவன் மனைவி பக்கம் போய் தலையை வருடி விட்டவனாக, கண்களால் மன்னிப்புக்கோரி நெற்றியில் முத்தமொன்றை பதித்தான்.

“நா.. நா.. நான் சர்மிய பாக்கனும். என் புள்ளய பார்க்கனும்”

கணவனின் சுவாசத்தை உணர்ந்த ராபியா, கண்களைப் பொத்திக் கொண்டே ரிகானிடம் மன்றாட மனைவியின் ஏக்கத்தை ஊகித்துக் கொண்டான் ரிகான்.

“உன் புள்ள உன்ன பார்க்க வரும்.. நீ கவல படாதமா”

தேற்றுமளவுக்கு நாதிற்றவனாயிருந்தாலும் ஏதோ வார்த்தைக்கு சொல்லிவிட்டு வெளியே வந்தவன் கால் செல்லும் திசையில் நடக்க, தாயின் நிலை குறித்தான விடயம் சர்மியின் காதுகளுக்கெட்ட வெகுநேரம் செல்லவில்லை.

கணவனா? தாயா? என்ற நிலையில் சர்மியின் தவிப்புக்களுக்கு கணவன் இணங்கிப் போனால் தாயைக்காண நிச்சயம் வைத்தியசாலைக்கு விரைவாளவள். ஆனால் இங்கு நடந்தது அதுவல்லயே..!

“உம்மாவ பார்க்கனும் நான்”

அறையில் தன்னோடு கூடியிருந்த கணவனிடம் கவலையின் உருவாய் சர்மி சொல்ல, எடுத்த எடுப்புக்கே மனைவியை விட்டகன்று எழுந்து நின்றான் பிலால். திருமணம் முடிந்த முதலிரவே இத் தம்பதிகளின் பொழுது வித்தியாசமாய் நகர, அந்த நான்கு சுவர்களும் கண்ணீர் விட்டழுதிருக்கும் சர்மியின் நிலைகண்டு,

“உம்மா.. என் உம்மா என்ன மன்னிச்சிக் கோங்க.. ஐயோ உம்மா”

சர்மியின் உள்ளக்குமுறலுக்கான தேற்றுவார் யாருமில்லாமலே அந்த இரவு முடிந்து போக, சர்மியின் அவசரப்புத்திக்கு பாடம் பட்டது போதாதோ என்னவோ, அடுத்தநாள் வேண்டாத வேளை ஒன்றில் கால்வைத்து விட்டாள்.

கதை தொடரும்…
Aathifa Ashraf

“என்னங்க ராபியா தங்கச்சோட நிலம பயங்கரமா தோனுது, அவ புருஷன்கு போன் பண்ணி அவசரமா ஹாஸ்பிடல் வர சொன்னா சரி எனக்குன்னா ரொம்ப பயமா இருக்குது.” “அதுதான் மரியம் நான் ரிகானுக்கு கோல்  போட்டு…

“என்னங்க ராபியா தங்கச்சோட நிலம பயங்கரமா தோனுது, அவ புருஷன்கு போன் பண்ணி அவசரமா ஹாஸ்பிடல் வர சொன்னா சரி எனக்குன்னா ரொம்ப பயமா இருக்குது.” “அதுதான் மரியம் நான் ரிகானுக்கு கோல்  போட்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *