அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 20

  • 9

“எங்க போறே அலைஸ்.”

என்று கேட்டுக்கொண்டே மாயா அவள் தோளில் கைவைக்க, அவள் கையை தட்டி விட்ட அலைஸ்,

“எனக்கு உன்னை பற்றி எல்லாம் தெரிஞ்சி போச்சு. நீ நீ என் அக்கா கோரின் கிடையாது. நீ ஒரு நிழல் தேவதை”

என்று கத்தினாள்.

“ஒஹ்ஹ்… அப்போ ரொம்ப நல்லதா போச்சு.. நீ எங்க உலகத்துக்கு சொந்தமான வாரிசு தானே அடம்பிடிக்காம என் கூட வந்திடு இல்லே.” என்று சொல்லி முடிக்கும் போதே ரியூகி வந்து,

“இல்லே என்றால் என்ன பண்ணுவே?” என்று கேட்டான். அவனை கண்டு அலைஸ் மகிழ்ந்தாள்.

“ரியூகி!”

“எங்களை ஏமாத்தின உன்னை நாங்க சும்மா விடமாட்டோம்.” என்று சொல்லி கொண்டே சோஃபியும் கியோனும் வந்து நின்றனர்.

“ரியூகி இவ கோரின் கிடையாது.” என்று அலைஸ் அவனை எச்சரித்தாள்.

“தெரியும்.. நீ கொஞ்சம் தள்ளி போய் நில்லு.”

“வாவ்… ஒருத்தியை எதிர்த்து மூனு பேரா…” என்று ஏளனமாக கேட்டாள் மாயா.

“எத்தினபேரா இருந்தா என்ன? இன்னிக்கு நீ காலி” என்றான் கியோன்.

அவளை அவர்கள் முதல் முறை தாக்க முற்பட்ட போது மாயா அவளது கையால் ஏதோ சைகை செய்ய அவள் உடலில் இருந்து ஒளி ஒன்று வட்ட வடிவில் புறப்பட்டு அவர்களை தாக்கியது.

“ஒஹ்ஹ் ரியூகி டார்லிங்… நீ ஓரமா இருந்து வேடிக்கை பாரு உன்னை நான் காயப்படுத்த விரும்பல.” என்று கொஞ்சலாக பேசினாள். மறுபடியும் எழுந்து அவர்கள் அவளை தாக்க முற்பட்டு தோற்றுப்போனார்கள்.

“அண்ணா.. ஏதாவது பண்ணு.”

“அதுக்கு தான் முயற்சி பண்ணி கொண்டு இருக்கேன்.” என்றவன் வெகு வேகமாக மாயாவை சுற்றி ஓடினான். இது மாஸ்டர் ஷா கற்று கொடுத்த வித்தை. மாயாவுக்கு ரியூகி ஐந்து மாயத்தோற்றமாக விளங்க குழம்பிப்போன மாயாவை ரியூகி ஒரே தாக்காக தாக்கி வீழ்த்தினான்.

“வாவ்.. அதை எப்படி பண்ணே?” என்று சோஃபி வியப்புடன் கேட்க,

“இது நட்சத்திர தாக்குதல். எப்படி…” என்று பெருமைப்பட்டு கொண்டான் ரியூகி.

“கலக்கிட்ட போ…”

அலைசுக்கு நன்றி சொல்லவும் வெறுப்பாக இருந்தது. எங்கே தான் நன்றி சொல்லப்போய் அதை அவன் கண்டுகொள்ளாவிட்டாலும் விடுவான் என்ற பயம் அவளுக்கு. ஓரக்கண்ணால் அவளை பார்த்த ரியூகிக்கு தன்னுடைய வார்த்தைகள் அவளை எவ்வளவு தூரம் பாதித்து இருக்கும் என்று புரிந்து கொள்ள முடிந்தது.

“பிரின்சஸ் கவலைப்படவேணாம் நாம எப்படியாவது உண்மையான கோரினை கண்டுபிடிப்போம்.” என்று சமாதானம் சொல்ல மாயா மறுபடியும் எழுந்து அலைஸை கைப்பற்ற வந்தாள்.

மீண்டும் ஒரு சண்டை நிகழ்ந்தது. இம்முறை அவளை சமாளிக்க சிரமப்பட்டு கொண்டிருக்கையில் வீட்டுக்குள் இன்னொரு பெண் வெகு வேகமாக நுழைந்தாள் எல்லோருக்கும் நடுவில் புகுந்து மாயாவை ஒரே அடியில் கொன்றேவிட்டாள். அதிர்ச்சி அடைந்த அவர்கள் அனைவரையும் முகத்துக்கு நேரே திரும்பி ஒரு ஹாய் சொன்னாள் வந்தவள். அதே நேரத்தில் அலைஸின் கையில் மறுபடியும் அதே அம்புக்குறி தோன்றி தோன்றி மறைந்தது.

தொடரும்……
ALF. Sanfara.

“எங்க போறே அலைஸ்.” என்று கேட்டுக்கொண்டே மாயா அவள் தோளில் கைவைக்க, அவள் கையை தட்டி விட்ட அலைஸ், “எனக்கு உன்னை பற்றி எல்லாம் தெரிஞ்சி போச்சு. நீ நீ என் அக்கா கோரின்…

“எங்க போறே அலைஸ்.” என்று கேட்டுக்கொண்டே மாயா அவள் தோளில் கைவைக்க, அவள் கையை தட்டி விட்ட அலைஸ், “எனக்கு உன்னை பற்றி எல்லாம் தெரிஞ்சி போச்சு. நீ நீ என் அக்கா கோரின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *