குரங்கு மனசு பாகம் 34

  • 8

ஆயினும் எங்கோ பார்த்த முகம் போன்று தூரத்தில் விளங்கினாலும், வீட்டுக்குள் வரும் வரை இணங்காண கடினமாய் தான் இருந்தது சர்மிக்கு. முன்ஹோலுக்கு ஓடிச் சென்றவள், கதவு தட்டும் முன்னதாகவே கதவைத் திறக்க, அதிர்ந்து போனாள்.

“ஆ..ன்ட்டீ நீங்க?”

சர்மியின் தொண்டைக் குழியிலே ஏதோ அடைப்பது போல் உணர, உள்ளே அழைக்கவும் முடியாமல் பிரமை பிடித்தவள் போல் வார்த்தைகளின்றி வீட்டு வாயிலில் நின்று கொண்டிருந்தாள்.

“புள்ள சர்மி.. யாருடா? யாரு வந்த?” கேட்டுக்கொண்டே வந்த தாய் ராபியா இப்படியோர் நாளை இனி எப்போதும் சந்திக்க மாட்டாள்.

“ஆஹ் நீங்களா? வாங்க உள்ள வாங்க?”

“என்ன சம்மந்தி மரியாத எல்லாம் கடுமையா இருக்கு?”

“அது… அதுவந்து அப்படி ஒன்னும் இல்ல, வழக்கம் போல தான்.”

“ஓஹ்… நமக்கு தெரியுமே? நீங்க யாரு? எவ்வளவு நல்ல மனசு? உங்களப் போய் தப்பா சொல்ல ஏலுமா? “

எதுவும் பேசாது வாய் மூடி இருந்தாள் ராபியா.

“இல்ல நான் தெரியாமத் தான் கேக்குறன், உங்க மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கீங்க? என் புள்ள யாரு தெரியுமா? இப்போ அவன் பொஷிஷன் என்னான்னு தெரியுமா? அவனுக்கு போயும் போயும் இப்படி ஒருத்தியா? இன்னொருத்தன் கூட வாழ்ந்துட்டு வந்தவனோட என் புள்ள வாழ்க்கைப் பட அவனுக்கு என்ன கொற இருக்கு?”

“ஓஹ் ஆட்டோ ட்டைவர் னு நெனச்சிட்டீங்களோ? நோ நோ… இவளுக்கு இப்போ அப்புடி ஒருத்தர் கெடச்சுறது கூட ரொம்ப கஷ்டம் தான்…”

சொல்லி நக்கலாய் சிரித்த அதீகின் தான் வாஹிதாவின் வார்த்தைகள் சர்மியின் உள்ளத்தை வதைக்க வீறிட்டு அழுதாள்.

“தயவு பண்ணி இதுக்கு மேல எதுவும் சொல்லாதீங்க, உங்களுக்கு என் புள்ள விருப்பமில்லன்னா அதோட முடிச்சிக்குவோம். ஆனா இப்புடி மனசு நோகுற போல பேசாதிங்க பிலீஸ்”

மகளின் மனம் இதற்கு மேலும் வருந்துவதை விரும்பாத ராபியா பொறுமையிழந்து பேசத் துவங்கினாள்.

“இப்படியொரு நாளுக்காகத் தானே நானும் வைய்ட் பண்ணிட்டு இருந்தன். அன்னக்கி என் புள்ளக்கி என்னவெல்லாமோ சொன்னீங்களே? கடவுள் யாரத் தண்டிச்சான் பார்த்தீங்களா? இங்க பாருங்க என் உடம்புல உயிர் இருக்கும் வர என் புள்ள இந்த வீட்டுல, அதுவும் இவளுக்கு, நோ.. ஷான்சே இல்ல. உங்க பணத் திமிறு இனிமே எங்கயும் எடுபடப் போறதில்ல”

வீராப்புடன் சொல்லிவிட்டு வந்த வேகத்திலே திரும்பிப் போனாள் வாஹிதா. வாஹிதா அங்கிருந்து மறையும் வரை வாய்மூடி இருந்த சர்மி ஒப்பாறி வைத்து அழத் துவங்கி விட்டாள்.

“ஏன்மா எனக்கு மட்டும் இப்புடி எல்லாம் நடக்குது? நான் என்னம்மா செய்ய? எனக்கு எதுக்கும்மா இந்தளவு சோதன?”

“புள்ள சர்மி பிளீஸ் அழாத டா, அழாத கண்ணு. உனக்குத் தான் இந்த உம்மா இருக்கன்ல, இப்படி அழக் கூடாதும்மா…

சர்மி… சர்மி… சர்மி… சர்மி பேசும்மா… சர்மி…”

மயக்கமுற்ற தரையில் சாய்ந்த மகளின் நிலை கண்டு நடுங்கிப் போனாள் தாய் ராபியா.

கதை தொடரும்…
Aathifa Ashraf

ஆயினும் எங்கோ பார்த்த முகம் போன்று தூரத்தில் விளங்கினாலும், வீட்டுக்குள் வரும் வரை இணங்காண கடினமாய் தான் இருந்தது சர்மிக்கு. முன்ஹோலுக்கு ஓடிச் சென்றவள், கதவு தட்டும் முன்னதாகவே கதவைத் திறக்க, அதிர்ந்து போனாள்.…

ஆயினும் எங்கோ பார்த்த முகம் போன்று தூரத்தில் விளங்கினாலும், வீட்டுக்குள் வரும் வரை இணங்காண கடினமாய் தான் இருந்தது சர்மிக்கு. முன்ஹோலுக்கு ஓடிச் சென்றவள், கதவு தட்டும் முன்னதாகவே கதவைத் திறக்க, அதிர்ந்து போனாள்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *