அல்லாஹ்வின் அருட்கொடைகள்

  • 90

அல்லாஹ் வழங்குவதை எவராலும் தடுக்க முடியாது, தடுத்ததை எவராலும் வழங்க முடியாது என்ற நபிகமொழிக்கேற்ப அல்லாஹ் இவ்வுலகை பல்வகை அருள்களால் படைத்துள்ளான்.

அந்தவகையில் அவனது படைப்பாற்றலைப் பற்றி அதிகம் சிந்திப்பதினூடாக அவனது நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.  உண்மையிலே வானத்தை எவ்வித முகடுகளும் இல்லாமல், பூமியை எவ்வித அஸ்திவாரம் இன்றி, அதில் பிராமாண்டமான மலைகளை திடமாக நட்டி, விசாலமான கடல்கள், ஆறுகள், நீர்வீழ்ச்சிகள், கடிக்கள், முனைகள், மரம், செடி, கொடி, புற்பூண்டுகள், பூக்கள், காய் கனி வர்க்கங்கள், பூங்காக்கள், பாலைவனம், கால் நடைகள், பட்சிக்கள் என எண்ணிலடங்கா அருட்கொடைகளை இத்தரணியில் படைத்து அவற்றை புசிப்பதற்காக ஆறரிவை வழங்கிய உயர் படைப்பான மனிதனை, தன் பிரதி நிதியை படைத்தான்.

அந்தவகையில் அவனளித்துள்ள அருட்கொடைகளை நம் வாழ்வில் தாரளமாக அனுபவிக்கின்றோமே!

அந்த ரப்புடன் எப்படி நாம் தொடர்பு வைத்துள்ளோம்? எந்தளவுக்கு நன்றி செலுத்துகின்றோம்?

உண்மையில் கவலைக்கிடமானது.

“அல்லாஹ் அடியானை சோதித்து பின்னர் அவனை கண்ணியப்படுத்தி, அவனுக்கு அருட்கொடைகளையும் அளித்தால், என்னுடைய இரட்சகன் என்னை கண்ணியப்படுத்திவிட்டான் என்றும், அவனைச் சோதித்து அவனுடைய வாழ்வாதாரங்களை நெருக்கடியாக்கிவிட்டால் அப்போது என் இரட்சகன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று அவன் குறை கூறுவான்”

என்ற இறை மறை வசனத்திற்கமைய மனித தன் வாழ்வில் சோதனைகள், பிரச்சனைகள் வருவதை வெறுப்பதுடன், சந்தோசம் வருவதையே விரும்புகின்றான்.

இவ்வாறிருக்க அவனது அருட்கொடைகள் பற்றி மறுமையில் விசாரிக்கப்படும் போது அதற்கான பதில்களுக்கு நம்மில் எத்தனைப்பேர் பதிலளிக் தயாராக இருக்கின்றோம்?

ஏனெனில் நம் உடம்பிலோ, நிறத்திலோ, அழகிலோ, அறிவிலோ, ஆற்றல்களிலோ, எவ்விதக் குறைப்பாடுகளோ, ஊணங்களோ இன்றி படைக்கப்பட்டுள்ள நாம் அவனுக்கு செலுத்த வேண்டிய கடமைகளில் எவ்வாறு செயற்படுகின்றோம்?

நம்மில் அதிகமானோர் அதான் கூறியதும் உரிய நேரத்தில் வுழூ செய்து தொழுகின்றோமா? அல்குர்ஆனை ஓதுகின்றோமா? நம் நாவுகள் காலை, மாலை, மற்றும் ஏனைய திக்ர்கள், துஆக்களை ஓதுகின்றதா? வீண் பேச்சுக்கள், கழியாட்டங்களில் இருந்து நம் உடல் அங்கங்கள், நாவுகள் பேணிக்கொள்கின்றோமா? நிச்சயமாக இல்லை.

நம் பெற்றோர்கள் சினிமாவுடன், வாலிபர்கள் போதை வஸ்துக்களுடன், பெண் பிள்ளைகள் மொபைல் போன்களுடன், சின்னம் சிறார்கள் கார்ட்டூன்களுடன், இப்படி கழியும் நம் முஸ்லிம் உம்மத்தின் நிலைமை நினைக்கும் போது உள்ளம் குமுருகின்றது.

இன்றைய எம் சிறார்களை எவ்வாறு இம்மை, மறுமை வாழ்விற்கு முன்மாதிரிமிக்க தலைவர்களாய் உருவாக்கலாம்?

இஸ்லாத்தை கேவலப்படுத்தும் அளவிற்கு நம்மோர்களது செயற்பாடுகள் மாறியமையினாலேயே இன்று ஏராளமான சோதனைகள் நம்மை வந்தடைந்துள்ளது

எமது அனைத்துச் செயல்பாடுகளையும் பிறர் உதவியின்றி தாமாக செயற்பட ஆளுமைகளை தந்த நாயனுக்கு எப்போது நாம் மாறு செய்யாமல் வாழ்வது? அவனது ஏவல்களுக்கு முழுமையாக கட்டுப்படுவது?

நம்மரணத்திற்கு வயது கிடையாது. சிறிய வயதோ அல்லது நடுத்தர வயதோ அல்லது வயோதிபம் வரும் வரைக்கும் நம் ஆயுள் நீடிக்காது. அல்லாஹ் அழைக்கும் போது நாம் செல்லவேண்டுமே!

அந்தத் தனிமையான பயணத்திற்கு செல்ல என்ன கட்டுச்சாதத்தை, தயார் செய்துள்ளோம்?

இங்கு தோல்வியோ, கஷ்டமோ வந்தால் கரம் நீட்ட பெற்றோர், குடும்பம், நண்பர்கள், அயலோர் என உதவிக்கரம் நீட்டுவர். ஆனால் யாருமே உதவாத அந்நாளில் நாம் யாது செய்வோம்?

நம்மைப் போன்ற, நமது சம வயதை உடைய எத்தனைப் பேர் ஊணமுற்றோர்களாக படைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகமானோர் ஆலிம்களாக, ஹாபில்களாக, சாதனையாளர்களாக இருக்கின்ற போது நமது நிலை?

பாதைகளில் யாசகம் கேட்டு அழையாமல், பைத்தியக்காரர்களாக உலராமல், ஆடை அணிகலன்கள், உணவு, உறையுள்களில், பிள்ளை செல்வம், தொழில் வாய்ப்பக்களில் குறை இன்றி நிறப்பாக தந்தவனுக்கு நாம் என்ன நன்றிக் கடன் செய்துள்ளோம்?

குறைந்தது பர்ளான தொழுகைமை மட்டும் நிறைவேற்றி, றமழானில் நோன்பு நோற்று, வசதி வாய்ப்புக்கள் இருந்தால் ஸகாத் வழங்கி, குறைந்தது பேரீத்தம் பழத்துண்டையாவது ஸதகா கொடுத்து நரக நெருப்பை விட்டும் பாதுகாவல் தேடி, முடியுமான திக்ர், ஸலவாத், பாவமன்னிப்புக்களை கேட்டாலே போதும் நம்மறுபை பயணத்தில் வெற்றியடையலாம்.

இவ்வனைத்து நற்கருமங்களை புரிவதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் அதிகமாகுவதில்லை. அது எமக்கே நன்மையளிக்கும்.

“நாம் ஒரு நன்மையை நினைத்தாலே நன்மை எழுதப்பட்டு விடும், அதனை செய்தால் நன்மை பன்மடங்காகும். தீமையை நினைத்தால் பாவம் எழுதப்படமாட்டாது. ஆனால் அதனை செய்தால் மட்டுமே தீமை பதியப்படும்”

என்ற நபிமொழிக்கமைய அவனது அருளும், அன்பும் விசாலமானது.

உண்மையிலே மனிதன் புரியும் இழி செயல்களும், பாவங்கலும், குற்றங்களும் மனிதனாலேயே பொறுக்க முடியாமல் சண்டைகளும், முரண்பாடுகளும், சூழ்ச்சிகளும் ஏன் கொலைகள் கூட உடனுக்குடன் இடம்பெறுகின்றன.

ஆனால் ஏக நாயகன் அனைத்தையும் பொறுமையுடன் அவற்றை கண்காணித்துக் கொண்டும் இவ்வுலகில் ஒரே தடவையில் சோதனைகளையும், அவனது வேதனைகளையோ, தீராத நோய்களையோ இறக்கவில்லை. மாறாக சோதணைகளுக்காகவே சிலதை இறக்குகிறான். அதுவும் சிலருக்கு நலவாகும்.

இவ்வாறாக விசாலமான அவனது அருளை முழு மனித உடலை மட்டும் வைத்து சிந்தித்தாலே போதும் அவனுக்கு முழுமையாக நன்றி செலுத்தும் அடியானாக வாழ்ந்து மரணிக்க போதுமானது. அல்லாஹ்வின் அளவிலா அருட்கொடைகளைப் பற்றி சிந்திப்போம், செயல்படுவோம், இம்மை, மறுமை வாழ்வில் பூரண வெற்றியடைய முயன்றிடுவோம்.
இன்ஷா அல்லாஹ்!

Ummu Adheeba 
BA (Hons)
SEUSL
Counsellor (R)
Badulla

அல்லாஹ் வழங்குவதை எவராலும் தடுக்க முடியாது, தடுத்ததை எவராலும் வழங்க முடியாது என்ற நபிகமொழிக்கேற்ப அல்லாஹ் இவ்வுலகை பல்வகை அருள்களால் படைத்துள்ளான். அந்தவகையில் அவனது படைப்பாற்றலைப் பற்றி அதிகம் சிந்திப்பதினூடாக அவனது நெருக்கத்தை அதிகப்படுத்திக்…

அல்லாஹ் வழங்குவதை எவராலும் தடுக்க முடியாது, தடுத்ததை எவராலும் வழங்க முடியாது என்ற நபிகமொழிக்கேற்ப அல்லாஹ் இவ்வுலகை பல்வகை அருள்களால் படைத்துள்ளான். அந்தவகையில் அவனது படைப்பாற்றலைப் பற்றி அதிகம் சிந்திப்பதினூடாக அவனது நெருக்கத்தை அதிகப்படுத்திக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *