Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஊமைக் காதல் நாடகம் - அறிமுகம் 

ஊமைக் காதல் நாடகம் – அறிமுகம்

  • 47

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இது எனது சுய ஆக்கத்திற்கான ஒரு அறிமுகம்,

காதல் அது ஒரு வகை வியாதி! அது யார் மீது? யாருக்கு? எப்பொழுது? எப்படி? என்ன விதத்தில்? தொற்றும் என்று யாராலும் கண்டுபிடிக்க இயலாத ஒருவகை வியாதி. இந்த வியாதியால் பீடிக்கப்படாத மனிதனே உலகத்தில் இல்லை என்றே குறிப்பிட வேண்டும். ஏனென்றால் ஒரு பைத்தியக்காரன் கூட ஒன்றின் மீது அதிக காதல் கொண்டு தான் பைத்தியமாக மாறியிருப்பான். இந்த வியாதியானது உலகமே நல்லவன் என்று போற்றும் ஒருவனை அந்த உள்ளத்திற்கு கெட்டவனாகக் காட்டும். இந்த உலகமே தீயவன் என்று தூற்றும் ஒருவனை அந்த இதயத்திற்கு நல்லவனாக காண்பித்து தீயவனை நல்லவனாக்கவும் தொற்றக் கூடும். இது தான் காதல் வியாதி.

“எதற்காக இரக்கம் வைத்தேன் என தெரியாது! ஆனால் அதிகளவு இரக்கம் உன் மீது தான்.”

இது தான் இந்த வியாதியின் கருப்பொருள்.

காதலிலே பல வகைகள் உண்டு. ஒரு தலைக் காதல், இரு தலைக் காதல், காண்பவர்கள் மீதெல்லாம் காதல், கற்பனைக்காதல், நிஜமான காதல், தெய்வீகக் காதல், அதிசயக் காதல், கண்டதும் காதல், ஓர் தேசக் காதல், வெளி தேசக் காதல், ஏழைக் காதல், உயர்குலக் காதல், சப்தமான காதல், நிஷப்தமான காதல், தற்காலிகக் காதல், நிரந்தரக் காதல், வெளிப்படையான காதல், ஊமைக்காதல் எனப் பல காதல் நான் அறிந்தவை. இதில் “ஊமைக்காதல்” இருக்கின்றதல்லவா அது விஷேடமான காதல்.

தான் நினைத்த, நேசித்த உள்ளம் இந்த உலகில் எந்தக் கோடியில் இருந்தாலும் அந்த உள்ளத்தை எந்த தீங்கும் ஏற்படாமல், எந்த ஆபத்திலும் அந்த உள்ளம் சிக்கி விடாமலும் அந்த உள்ளத்தை தூய்மையான நிலையில் பாதுகாக்கும் சக்தி கொண்டதே “ஊமைக் காதல்” என்பதாகும்.

தான் சந்தித்த உள்ளம், தான் நேசித்த பிறகு தன்னை விட்டுச் சென்றாலும் காத்திருப்பின் மூலம் கைகூட வைக்கும் ஒரு வகை அதிசயப் பொருள் தான் காதல் ஊமைக் காதல்.

நான் எழுதும் இந்தக் காதல் கதை ஒரு கல்லூரி மாணவியினதும், ஒரு ஏழை ஆடவனினதும் காதல் கதையாகும். கல்விச் சுற்றுலா ஒன்றின் போது முகம் காணா ஒருவரின் மீது ஏற்பட்ட பரிதாபமும், அனுதாபமும் மனதிலே இருவர் மத்தியிலும் ஊமையான நிலையில் காதலை ஏற்படுத்திய முறையே இந்த நாடகத்தின் மூலம் வெளிக்காட்டப்படும். தான் நேசித்த உள்ளத்தின் முன்னேற்றத்துக்காய் தன்னையே தியாகம் செய்த கதை சித்தரிக்கப்படும். ஒருவருக்கு ஒருவர் சந்திக்க முடியாமலும், வெளிப்படையாக காதலை சொல்லாத நிலையிலும் இருவர் மத்தியிலும் மலர்ந்த காதல் இருவரையும் காத்திருக்க வைத்து மிக நீண்ட காலத்திற்கு பின்பு தொடர்புகளற்றுப் போய் இருந்த நிலையிலும் இருவரின் மனதிலும் வேறெடுத்த காதல் இருவரையும் இணைத்த கதை ஊமைக் காதல் நாடகம் ஊடாக காட்டப்பட இருக்கிறது. தான் நேசம் கொண்ட உள்ளம் தன்னிடம் வந்து சேரும் வரை வேறொரு துணையை நாடாது காத்திருந்து காதல் கைகூடிய பாங்கு இதில் காண்பிக்கப்பட இருக்கிறது.

எனது சுய முயற்சியின் பால் நான் எழுதவிருக்கும் இந்த நாடகத்திற்கு ஒரு சிறு அறிமுகம் தரும் நோக்கில் நான் இதனை எழுதுகிறேன். காதல் எனும் வியாதி “ஊமையாய்” இரு இதயங்களை தாக்கிய விதம் உங்களை கவருமா? இல்லையா? எனத் தெரியாது. ஆனால் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

Fathima Badhusha Hussain
Faculty of Islamic Studies and Arabic Language
South Eastern University of Sri Lanka

இது எனது சுய ஆக்கத்திற்கான ஒரு அறிமுகம், காதல் அது ஒரு வகை வியாதி! அது யார் மீது? யாருக்கு? எப்பொழுது? எப்படி? என்ன விதத்தில்? தொற்றும் என்று யாராலும் கண்டுபிடிக்க இயலாத ஒருவகை…

இது எனது சுய ஆக்கத்திற்கான ஒரு அறிமுகம், காதல் அது ஒரு வகை வியாதி! அது யார் மீது? யாருக்கு? எப்பொழுது? எப்படி? என்ன விதத்தில்? தொற்றும் என்று யாராலும் கண்டுபிடிக்க இயலாத ஒருவகை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *