Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அவன் பெரியாள் ஆவினா நல்லா வருவான் 

அவன் பெரியாள் ஆவினா நல்லா வருவான்

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

“அவன் பெரியாள் ஆவினா நல்லா வருவான்”

இப்படியான வார்த்தைகளை இளம் பிள்ளைகளின் செயற்பாடுகளை வைத்து அவர்களது ஆசிரியர்கள், உறவினர்கள், அவர்களை அறிந்த பலரும் சொல்வதை கேள்விப்பட்டு இருப்பீர்கள்! ஆனால் அவர்கள் குறித்த ஒரு வயதை அடைந்த பின்னர்

“நான் கொஞ்சம் கூட நினைக்க இல்ல அந்தப் பொடியன் இப்படி ஆகுவான் எண்டு! அவன்ட நிறைய திறமைகள் இருந்தும் இப்படி ஆவிட்டானே”

இப்படியான வார்த்தைகளை சொல்வதையும் எங்களால் பார்க்க முடியுமாக இருக்கும். அதற்கு பல காரணங்கள் இருப்பினும் அவனில் பல திறமைகள் இருந்தும் ஒரு சாதனையாளராக வர முடியாது போவதற்கான உளவியல்சார் காரங்கள் சிலதை பகிர்ந்து கொள்கிறேன்.

  1. Thy Believe Talent is everything, my Talent will give me success (Opportunities will come to me) தன்னிடம் திறமை இருக்கு எனவே பெரிய அளவில் முயற்சி செய்ய தேவ இல்ல, எல்லாம் எனக்கு தானாக வந்து சேரும்!
  2. My Skills / Talent is more important then others, they think only they work and others don’t. என்னுடை திறமை மட்டும் எனக்கு போதும் மற்றவர்ளுடைய உதவிகள் எனக்கு தேவ இல்ல!
  3. They don’t think about others Needs. மற்றவர்களுடைய தேவைகள் எல்லாம் எனக்கு பொருட்டு இல்ல! என்னுடை விடயங்கள மட்டும் பார்த்துக் கொண்டால் எனக்கு போதும்!
  4. They are narrow minded (Not having big picture) அவர்களுடைய விடயங்கள் குறித்து ஒரு முழுப் பார்வை இல்லாது இருப்பது!
  5. Not willing to be flexible. நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை இல்லாததால்! நான் எதையும் இப்படி தான் செய்வேன் ஒரு போதும் நெகிழ்ந்து செல்ல மாட்டேன்!
  6. Not learning how to succeed. வெற்றி பெறுவதற்கான வழிகளை கற்றுக் கொள்ளாமல் இருப்பது!

இப்படியான சில மனப் பதிவுகள் அவர்களை பல திறமைகள் இருந்தும் வெறும் ஒரு சாதாரண மனிதனாகவே இருக்கச் செய்து விடும். ஆனால் அதிக திறமைகள் இல்லாத பலர் அவர்களை சரியாக புரிந்து கொண்டு, திறமைகளை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டு, அவரது இலக்கை அடைய உதவி புரியும் பலரையும் இணைத்துக் கொண்டு, தைரியமாக கால்களை முன்நோக்கி வைத்து நகர்ந்து தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டே இருப்பர்கள், தோல்விகளையும் வெற்றியின் படிக்கல்லாக எடுத்து இலக்கை அடையும் வரை தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்பவர்கள் தான் உண்மையான சாதனையாளர்கள். (அவ‌ர்களிடம் நிறைய திறமைகள் இருக்காது).

Habeeb Mohamed
(Motivator and Skills Development Trainer)
Youtuber – Motivation 2 Win.

“அவன் பெரியாள் ஆவினா நல்லா வருவான்” இப்படியான வார்த்தைகளை இளம் பிள்ளைகளின் செயற்பாடுகளை வைத்து அவர்களது ஆசிரியர்கள், உறவினர்கள், அவர்களை அறிந்த பலரும் சொல்வதை கேள்விப்பட்டு இருப்பீர்கள்! ஆனால் அவர்கள் குறித்த ஒரு வயதை…

“அவன் பெரியாள் ஆவினா நல்லா வருவான்” இப்படியான வார்த்தைகளை இளம் பிள்ளைகளின் செயற்பாடுகளை வைத்து அவர்களது ஆசிரியர்கள், உறவினர்கள், அவர்களை அறிந்த பலரும் சொல்வதை கேள்விப்பட்டு இருப்பீர்கள்! ஆனால் அவர்கள் குறித்த ஒரு வயதை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *