இலங்கையில் வெளிநாட்டவர்

  • 7

இயற்கை எழிலின் ஒரு குடையே
யாவரும் இயந்து போற்றும் எழில் வளமே
அரேபியர் சரந்தீப் எனக்கூறி
சரிசமமாய் அள்ளி இரைத்தாய் உன் வளத்தை

வாசனைமிக்க திரவியங்கள் வாரி வழியும்
இடம் கண்டு செய் பணி செய்யும்
விருந்தினராய் வந்தார் போர்த்துக்கள்
1505 ஆம் ஆண்டளவில் உன் சுதந்திர மதம்
கலைந்துவிட கிறிஸ்த்தவ சமயம் இடம்கொள்ள
தர்மபால அரசன் செயலும் பொம்மையானது

மதுபானம் ஆட்சியை மறக்கடிக்க
மன்னர் – மக்கள் தொடர்பு அறுந்துவிட
தந்திரம் பேணி போர்த்துக்கள்
தாகம் தீர்த்ததனர் சிம்மாசனம் ஏறி

விரிந்தனர் குடியை அறுத்துவிட உதவி நாடியே
ஒல்லாந்தரிடம் ஒப்பந்தம் என்ற உறவேட்டின் – படி
உறுதியாக நின்றனர் எம் மன்னர்
நாட்டு மக்களின் வலிமையறியா எம் மன்னன்கோ
கடைசியில் பரிசாக கிடைத்ததோ
இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கியது போல

“டச்சு” முறைமை கொண்டுவந்தார்
பல அரண்மனை கோட்டை கட்டி வைத்தார்
அக் கோட்டை ஓட்டையில் ஓடுவதோ
உன் மாந்தர் செங்குருதி இலங்கைத்தாயே

போர்த்துக்கேய ஓல்லாந்தர்
ஒடுங்கிய ஆட்சியை ஒழித்திடவே
கிய10 கடிதம் கிளைகொள்ள ஏகாதிபத்தியம் விஸ்த்தரிக்க
விஷமிகளின் விஷச் செயலால்
வாழ்வும் – அரசும் தலை முடங்க
1796 வந்தே வெறும் பத்தொன்பது ஆண்டில்
மொத்தமாய் உனை கைப்பற்றியே – பிரித்தானியர்
வேள்வி செய்தனர் உன் மண்ணில்

மிஷனரி இயக்கம் புகுத்தப்பட
ஆங்கிலக் தலை எடுக்க
காடுகள் வழியே பாதைகளாக
பாதைகள் ஒடுங்கி தண்டவாளங்களாக்கி
எத்தனைதான் செய்திட்டாலும்
அடிமை ஆட்சி கூடுமோ உனக்கு?
இதனை ஏற்போமா நாமும்

கொரில்லா போர்முறை என்றே பெயர் கண்டோம்
வெற்றியின் முதலடியை சுவைத்தே கால் வைத்தோம்
சுதந்திர வேட்கை வேண்டியே நின்றோம்

தேச தலைவர்கள் அரிய செயலோங்கியே
அறிவைக் கொண்டு ஆட்சியில் நுழைந்தோம்
வீரத்தைக் கொண்டு விளைநிலம் காத்தோம்
நாடு முழுதும் ஓடித் திறிந்தோம்
கடிதங்கள் மூலம் கண்ணியம் காத்தே

காலத்தின் போக்கினால் நாட்டை வென்றிட
ஒற்றுமையின் ஒருங்கிசைவால் ஒன்றியே
சுதந்திர உடன்படிக்கை வெற்றி கொண்டே
வீரத்தலைவர்களை பெற்றதனால்
வீர சுதந்திரம் பெற்றுவிட்டாய்
வாழ்க – இலங்கைத் தாயே

Aarifathul Aakila
SEUSL

இயற்கை எழிலின் ஒரு குடையே யாவரும் இயந்து போற்றும் எழில் வளமே அரேபியர் சரந்தீப் எனக்கூறி சரிசமமாய் அள்ளி இரைத்தாய் உன் வளத்தை வாசனைமிக்க திரவியங்கள் வாரி வழியும் இடம் கண்டு செய் பணி…

இயற்கை எழிலின் ஒரு குடையே யாவரும் இயந்து போற்றும் எழில் வளமே அரேபியர் சரந்தீப் எனக்கூறி சரிசமமாய் அள்ளி இரைத்தாய் உன் வளத்தை வாசனைமிக்க திரவியங்கள் வாரி வழியும் இடம் கண்டு செய் பணி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *