Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஆசிரியர்களை மதிக்கக் கற்றுக்கொடுப்போம். அதேபோல்அநீதிக்கெதிராக போராடவும் பேசவும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்போம் அனுபவப் பகிர்வு. 

ஆசிரியர்களை மதிக்கக் கற்றுக்கொடுப்போம். அதேபோல்அநீதிக்கெதிராக போராடவும் பேசவும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்போம் அனுபவப் பகிர்வு.

  • 14

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

மாத இறுதியில் பாடசாலை மாணவர்கள், தொழில் நிமித்தம் அடிக்கடி பஸ்ஸில் பிரயாணிக்கும் அரச, தனியார் ஊழியர்கள் பருவகால சீட்டு (சீசன் டிகட்) பெற மாலை நேரங்களில் முன்னியடித்துக் கொண்டு வருவார்கள்.

ஒரு நாள் நானும் சீசன் டிக்கட்டைப் பெற அவ்வாறு வந்து நிற்கும் போது ஓரளவு சனமாகக் காணப்பட்டது. பாடசாலை மாணவர்களுக்கு வேறாகவும், வயது வந்தவர்களுக்கு வேறாகவும் வரிசையில் வழங்கப்படுவதுதான் வழமை. அன்று, எல்லாம் ஒரே வாயிலினூடாக வழங்கப்பட்டது. அதனாலே வரிசையும் நீளமாகக் காணப்பட்டது. இறுதியில் தான் விளங்கியது ஒருவர் விடுமுறை என்று. எப்படியோ ஆமை வேகத்தில் நகர்ந்து நகர்ந்து 20 நிமிடங்களின் பின்னர் டிக்கட் வழங்கும் இடத்தை (கவ்ண்டரை) அண்மித்து விட்டேன்.

எனக்கு முன்னால் நான்கு மாணவிகள் அவர்களில் ஒருவருக்கு நான்ஒருஆசிரியர் என்பதுசற்று பரீட்சயம். நான்கு மாணவிகளுக்கு முன்னே இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் எடுக்கும் போது, வேகமாக இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் டிகட் வழங்குமிடத்தின் கவ்ண்டர் ஜன்னலை குறுக்கறுத்து நின்று எடுக்க முயற்சிக்கின்றனர்.

நான்கு மாணவிகளில் பரீட்சயமான் அந்த மாணவி பின்னால் உள்ளவர் “சேர் அவருக்கு எடுக்கச் சொல்லி நாம் ஒதுங்குவோம்” என்ற சொல்ல மற்றுமோர் மாணவி “சேர் முன்னுக்கு போய் எடுங்க” என்றார்.

வேண்டாம். யாராக இருந்தாலும் வரிசையில் வருவதுதான் ஒழுங்கு அந்த ஒழுங்கை மீறக் கூடாது. உங்களுக்கு அவசரம் இருக்கலாம். மட்டுமில்லாமல் டியுஷன் வகுப்புக்குச் செல்ல தாமமாகலாம், என்னைப் போலவே நீங்களும் காத்தும் கொண்டிருந்தீர்கள் என்று சொல்லி மறுத்துவிட்டுச் சொன்னேன்.

நீங்கள் எனக்கு வாய்ப்புக் கொடுத்து மதிக்கப் பார்த்தார்கள் அதற்கு மிக்க நன்றி. ஆனால், நீங்கள் செய்ய வேண்டிய ஒரு விடயம் உள்ளது; கற்கும் மாணவிகள் என்ற வகையில், முறையற்ற முறையில் இடையில் நுழைந்து டிக்கட் எடுக்க மூன்று பேர் முயற்சிக்கிறார்கள். அவர்கள் செய்வது தவறு, அந்த அநீதிக்கு எதிராக பேசக் கற்றுக் கொள்ளவும். கல்வி உங்களுக்கு அத்தகைய ஆளுமையை வழங்க வேண்டும் என்று கூறி பேசச் சொன்னேன்.

முதலில் அவர்கள் தயங்கிய தன்மை விளங்கிய போது, நான் உங்களுக்கு பக்க பலமாக இருப்பேன். ஏதும் நடந்தால் நான் முன் வருகிறேன். நானும் உங்களுடைய பங்காளி என்றவுடன். அவர்களில் ஒரு மாணவி “வரிசையில் வராமல் இடையில் வருபவர்களுக்கு வழங்க முடியாது. நாமும் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருக்கிறோம்”. என்று சொன்னவுடன் திரும்பிப்பார்த்து இடையில் நுழைய முற்பட்டவர்களை வரிசைய வரும்படி திருப்பி அனுப்பினார். அந்த கவுண்டரில் உள்ளவர். போகும் போது Thanks Sir என்றனர். நான் தான் க்ஷhanks சொல்ல வேணும் உங்கள் தைரியத்திற்கு.

A Raheem Akbar
மடவளை பஸார்
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

மாத இறுதியில் பாடசாலை மாணவர்கள், தொழில் நிமித்தம் அடிக்கடி பஸ்ஸில் பிரயாணிக்கும் அரச, தனியார் ஊழியர்கள் பருவகால சீட்டு (சீசன் டிகட்) பெற மாலை நேரங்களில் முன்னியடித்துக் கொண்டு வருவார்கள். ஒரு நாள் நானும்…

மாத இறுதியில் பாடசாலை மாணவர்கள், தொழில் நிமித்தம் அடிக்கடி பஸ்ஸில் பிரயாணிக்கும் அரச, தனியார் ஊழியர்கள் பருவகால சீட்டு (சீசன் டிகட்) பெற மாலை நேரங்களில் முன்னியடித்துக் கொண்டு வருவார்கள். ஒரு நாள் நானும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *