இணையதள காதல்
- by admin
- 16
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
இனம் புரியா சந்தோசம்!
தந்தையின் அன்பளிப்பில்
மனம் குளிர்ந்தாள் மாது
கனவுக் கன்னி கைபேசி
அன்று அவளது
கரங்களுக்கு உரிமையானது!
பல புதிய கனவுகளுடன்
இணையதளத்தில்
உலா வந்தாள் அவள் கனவுகள்
இனிமையாக கழிந்த தருணங்கள்.
அறிமுகமில்லா அவனது அழைப்பில்
தனை இழந்தாள் அவள்.
இணைய காதல் ஆரம்பமானது!
ரா பகல் பாராது
கைபேசிக்கடிமையாகி
முகம் பாரா அவள் காதல்
பசும் தளிராய் வளர்ந்த வேளை.
முறையற்ற அவன் செயலால்
அகப்பட்டாள் பேதை!
உண்மைகள் வெளிவர
முகம் பாராது மனம் பழியான
அவள் காதல் அன்றுடன் ரணமானது.
எத்தனை அழைப்புக்கள்
எத்தனை இணைப்புகள்
ஏமாற்றமே மிஞ்சியது.
முகம் பாரா காதல்
முகம் பாராது முற்றானது
பல கனவுகளுடனான
கன்னி வாழ்க்கை
கண்ணீருக்கு இறையானது.
மாதரே! கைபேசிகள் ஓர் வரம்!
அவற்றை சாபமாக்குவது அவரவர் கரம்.
உங்கள் வாழ்வை வரமாக்குமா?
அன்றேல் சாபமாக்குமா?
நீங்களே தேர்ந்தெடுங்கள்!
Shima Harees
Puttalam
இனம் புரியா சந்தோசம்! தந்தையின் அன்பளிப்பில் மனம் குளிர்ந்தாள் மாது கனவுக் கன்னி கைபேசி அன்று அவளது கரங்களுக்கு உரிமையானது! பல புதிய கனவுகளுடன் இணையதளத்தில் உலா வந்தாள் அவள் கனவுகள் இனிமையாக கழிந்த…
இனம் புரியா சந்தோசம்! தந்தையின் அன்பளிப்பில் மனம் குளிர்ந்தாள் மாது கனவுக் கன்னி கைபேசி அன்று அவளது கரங்களுக்கு உரிமையானது! பல புதிய கனவுகளுடன் இணையதளத்தில் உலா வந்தாள் அவள் கனவுகள் இனிமையாக கழிந்த…