Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இதுவும் புத்தகம் தான் 

இதுவும் புத்தகம் தான்

  • 15

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

படிக்க படிக்க சுவாரஸ்யமான சில பக்கங்கள்
படிக்காமல் மூடி விட தோன்றும் சில பக்கங்கள்
கண்ணீர் மல்கும் சில பக்கங்கள்.
கடைசி பக்க நிதர்சனம் என்ன
என தேடும் சில பக்கங்கள்.

இவ்வளவு தானா என ஏங்கும் சில பக்கங்கள்
இவ்வளவு தான் போதும் என்ற சில பக்கங்கள்
முடியவில்லையே என நொறுங்கும் சில பக்கங்கள்
முடிந்து விட்டதே இன்னும் தாமதிக்காதா
என சில பக்கங்கள்.

கிழித்து எறியும் சில பக்கங்கள்
தானாய் தொலைந்து போன சில பக்கங்கள்
நாமாய் வேண்டாம் என்று தொலைத்த சில பக்கங்கள்
தொலைக்க முடியாமல் வேறு வழி இல்லை
என தொலைத்த சில பக்கங்கள்.

இவைகள் தானே வாழ்க்கை
புத்தகத்தின் உள்ளடக்கங்கள்.
மறந்தாலும் மறைத்தாலும்
தடம் ஒன்று இருக்கத்தானே செய்யும்.

நிந்தவூர் றிசாமா
SEUSL

படிக்க படிக்க சுவாரஸ்யமான சில பக்கங்கள் படிக்காமல் மூடி விட தோன்றும் சில பக்கங்கள் கண்ணீர் மல்கும் சில பக்கங்கள். கடைசி பக்க நிதர்சனம் என்ன என தேடும் சில பக்கங்கள். இவ்வளவு தானா…

படிக்க படிக்க சுவாரஸ்யமான சில பக்கங்கள் படிக்காமல் மூடி விட தோன்றும் சில பக்கங்கள் கண்ணீர் மல்கும் சில பக்கங்கள். கடைசி பக்க நிதர்சனம் என்ன என தேடும் சில பக்கங்கள். இவ்வளவு தானா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *