Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இன்றைய கொவிட் தொற்று காலத்தில் மஸ்ஜித்களுக்கு பாரிய பொறுப்பு உண்டு 

இன்றைய கொவிட் தொற்று காலத்தில் மஸ்ஜித்களுக்கு பாரிய பொறுப்பு உண்டு

  • 11

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி)

இன்றைய நவீன காலத்திற்குப் பொருத்தமான வகையிலும், கொவிட்19 அசாதாரண சூழ்நிலையிலும், அனர்த்தங்களின் போதும் மஸ்ஜித்கள் (பள்ளிவாசல்கள்) புதிய பாதையில் பயணிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது. மஹல்லாக்களில் கட்டுக்கோப்பான நல்வழியில் மக்கள் வாழும் வகையில் ஒற்றுமையான சமூகத்தை கட்டியெழுப்பும் தளம் மஸ்ஜித்கள்.

இதை பராமரித்து நிர்வகிப்பவர்களுக்கு ஓர் அமானிதமாக இது வழங்கப்பட்டாலும் இப்பணியானது அல்லாஹ்வுக்காக என்ற தூய சிந்தனையோடு முன்னெடுக்கப்பட வேண்டும். நம்பிக்கையாளர்கள் என்ற சிறப்புப் பட்டம் மஸ்ஜித்களை நிர்வகிப்பவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. ஆனால் அதிகமான மஸ்ஜித்கள் நம்பிக்கைக்கு மாறாக மாற்றமாக இயங்கிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.

இறை இல்லங்களை பராமரிப்பது, நிர்வாகம் செய்வதென்பதில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் பயப்படாமல் இருக்க வேண்டும். இறை இல்லங்களான மஸ்ஜித்களில் கடமை செய்கின்ற இறைபணியாளர்களை மட்டுமல்ல, மஹல்லாவில் வாழும் ஜமாஅத்தார்களையும் பராமரிப்பது மஸ்ஜித் நிர்வாகிகளை சார்ந்த பணியாகும்.

கடந்த காலங்களில் மஸ்ஜித்களில் குர்ஆன் மத்ரஸாவில் கதீபாக, இமாமாக, முஅத்தினாக, முஅல்லிமாக கடமை செய்த இவர்களை எவ்வாறு மஸ்ஜித் நிர்வாகிகள் கவனித்தார்களோ அவ்வாறு கவனிக்க வேண்டும்.

அசாதாரண சூழ்நிலையில் முதலில் கவனிக்கப்பட வேண்டியவர்கள் இவர்களேயாவர். அவர்களின் மாதாந்த வருமானமான சம்பளத்தை சரியாக கொடுப்பதும் கடமைகளில் ஒன்று.

பள்ளிவாசல்கள் ஊடாக மக்களின் வறுமைப் பிணியைப் போக்க ஒழுங்கான வேலைத் திட்டத்தை உருவாக்க வேண்டும். இறைபணி செய்பவர்களின் மாதாந்த வேதனங்களை முறையாக நிர்வாகிகள் வழங்கி அவர்களை கௌரவிக்க வேண்டியது தார்மீக பொறுப்பு. இறை கடமைகள் செய்பவர்களின் மனம் வேதனைப்படாமல் உடைத்து விடாமல் அவர்களின் வாழ்வாதாரத்தில் பங்களிப்பு செய்ய வேண்டும்.

எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி) இன்றைய நவீன காலத்திற்குப் பொருத்தமான வகையிலும், கொவிட்19 அசாதாரண சூழ்நிலையிலும், அனர்த்தங்களின் போதும் மஸ்ஜித்கள் (பள்ளிவாசல்கள்) புதிய பாதையில் பயணிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது. மஹல்லாக்களில் கட்டுக்கோப்பான நல்வழியில் மக்கள் வாழும்…

எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி) இன்றைய நவீன காலத்திற்குப் பொருத்தமான வகையிலும், கொவிட்19 அசாதாரண சூழ்நிலையிலும், அனர்த்தங்களின் போதும் மஸ்ஜித்கள் (பள்ளிவாசல்கள்) புதிய பாதையில் பயணிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது. மஹல்லாக்களில் கட்டுக்கோப்பான நல்வழியில் மக்கள் வாழும்…