Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பறிக்கப்பட்ட முஸ்லிம் தனியார் சட்டம் இதற்கு முஸ்லிம் சமூகமும் ஒரு காரணமா? 

பறிக்கப்பட்ட முஸ்லிம் தனியார் சட்டம் இதற்கு முஸ்லிம் சமூகமும் ஒரு காரணமா?

  • 19

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பேருவளை ஹில்மி

ஏனைய சமூகத்தின் உரிமைகள் அவ்வாறே இருக்கும் போது முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் மட்டும் பறிக்கபடுவது ஏன்?

பல்லின மக்கள் வாழும் இலங்கை நாட்டின் வரலாறு தொடக்கம் ஒவ்வெரு இன மக்களுக்கும் அம்மக்களின் மார்க்க சமூக கலாச்சார விழுமியங்களுக்கு ஏற்ப அவரவர்களுக்கு உரிமையான மார்க்க வழிபாட்டு வழி முறைகள், உரிமைகள், கலாச்சார வழி முறைகள் போன்றவை பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த ஒவ்வெரு நடை முறைகளும் காலப் போக்கில் அந்தந்த சமூகங்களுக்கான உரித்தான, உரிமைகளாக எழுதப்பட்டு, பாதுகாக்கப்பட்ட சட்டங்களாக வடிவைமக்கப்பட்டு அவைகளுக்கான சட்ட அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் முஸ்லிம்களின் மத கலாசார உரிமைகளின் கீழ் 1953 ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்ட சட்டங்களாக முஸ்லிம்களின் விவாக, விவாக ரத்துச் சட்டம் (MMDA) Muslim marriage And divorce act கானப்படுகின்றது.

இலங்கையில் நடைமுறையில் உள்ள பொதுச் சட்டங்களுக்கு அப்பால், கண்டியச் சட்டம், தேச வழமைச் சட்டம், கிரிஸ்து தேவாலயங்களில் சட்டம், மற்றும் முஸ்லிம் தனியார் சட்டம் ஆகியவையும் அமுலில் உள்ளன. இவற்றில் முஸ்லிம் தனியார் சட்டத்தினுள் முஸ்லிம்களின் விவாகம், மற்றும் விவாக ரத்துச் சட்டம் அடங்கியுள்ளது.

மேற் குறிப்பிட்ட சட்டமானது அக்காலத்திற்கு ஏற்ற வகையிலான விதத்தில் காணப்பட்டதால் காலப் போக்கில் இதில் பிழைகளும் தவறுகளும் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து இலங்கையில் அமுலிலுள்ள 1951ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதற்காக கடந்த காலங்களில் தொடர்ந்து வந்த அரசாங்கங்களினால் 1956, 1970, 1984, 1990, 2009 ஆம் ஆண்டுகளில் பல்வேறுபட்ட காலப்பகுதிகளில் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இவ்வாறான குழுக்கள் அமைக்கப்பட்டாலும் இந்தக் குழுக்களும் இது சம்பந்தமாக எந்தவிமான ஆக்கபூர்வமான திருத்தங்களை செய்து பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைக்காத காரணத்தினால் இதன் குறைபாடுகள் தொடர்ந்தே வந்தது.

குறிப்பாக இந்தச் சட்டத்தினால் முஸ்லிம் பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர், முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பாது காக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பெருமளவில் முன்வைக்கப்பட்ட போதிலும், இச்சட்டத்தில் காணப்படும் பெண்கள் திருமணம், செய்துகொள்வதற்கான வயதெல்லை குறிப்பிடப்படாமை, இது மார்க்கத்தில் 12 வயதாக (பருவ வயதை அடைந்த) என இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டாலும், இது விவாக சட்டத்தில் காட்டப்படவிலை.

இதனால் 18 வயதிற்ககுறைந்த ஒரு பெண்ணுக்கு ஏற்படும் வேறு விதமான பிரச்சினைகளுக்கு நீதி மன்றங்களை நாடி சுயமாக சட்ட பாதுகாப்புக்களை பெறுவதில் வயது அடிபடையில் ஏற்படும் சிக்கல்.

மேலும் மணப் பெண்ணின் விருப்பத்தை மார்க்கம் வழியுறுத்தினாலும், இதை பூரண விருப்பத்தை தெரிவிக்க பெண்ணின் கை ஒப்பத்திற்கான வாய்ப்பு பத்திரத்தில் வழங்கப்படாமை, பலதார் மணத்தில் முன்னைய மனைவியின் விருப்பம் குறிப்பிடப் பட்டிருக்கவில்லை. அதனால் இன்னொரு குடும்பத்திற்கு ஏற்பட்ட அசாதாரணம், அடுத்து, வயது சமத்துவம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. இது சில பெண்களின் வாழ்கையை வெகுவாக பாதித்தது. இது போன்ற விடயங்கள் குறைபாடுகள் காணப்பட்டன.

எனவே இஸ்லாம் காலத்திற்கு ஏற்றவாறு மனித சமூகத்திற்கு இலகு வழி காட்டிய மார்க்கம். எனவே இதில் கவனம் செலுத்தி மாற்றங்கள் செய்யப்பட்ட வேண்டியதில் முஸ்லிம் சமூகத்தின் பொறுப்புதாரிகள் தவறி விட்டனர்.

இது போக பெண்கள் விடயம் என்பதால் காதி நீதிபதிகளாக பெண்களும் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோசம் நம்மவர்களாலேயே மேல் எழுந்தமையும், காதி நீதிபதிகள் நியமிப்பதில் கருத்தில் கொள்ள வேண்டிய தகைமைகள் போன்றவைகள் பேசப்பட்டே வந்தன.

இந்தச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட பெண்களும் சட்டத்திருத்த விடயத்தை வலியுறுத்தியே வந்தனர். மேலும் முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டத்தால் பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலைக்கு உள்ளாகியிருக்கும் பெண்கள், சில இடங்களில் காதி நீதிபதிகளால் நடந்த ஊழல்கள் அசாதரணங்கள், சில வன்முறைகள், போன்ற வற்றால் முஸ்லிம் விவாக ரத்துச் சட்டம் சர்ச்சைக்கு உள்ளாகியது.

90% மான காதிகள் அல்லாஹ்வுக்கு பயந்து நீதிதமாக நடந்தாலும் சில காதிகள் இதை ஒரு வரப்பிரசாதமாக கருதி வந்தனர்.

இதில் இரண்டு குடும்பங்களுக்கு நடந்த மிக மோசமான நிலையை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன்.

அதில் ஒன்று மிகமிக வறிய நிலையில் உள்ள குடும்பம். இவாவாறான நிலையில் இவற்றை முறையிடுவதற்கான சரியான வழி முறைகள் வறிய மக்களுக்கான வழி முறைகளும் தெளிவுகளும் அதற்கான ஏற்பாடுகளும் சாரியன முறையி்ல் இருக்கவில்லை.

இதேவேளை இலங்கையில், தனியார் சட்டம் இருப்பதற்கு எதிராகவும், அதனை இல்லாதொழிக்க வேண்டும் எனக் கூறியும், பௌத்த பிக்குகளும், சில இனவாத அமைப்புக்களும் சில காலமாக ஆர்ப்பாட்டங்களையும், கவனயீர்ப்பு போராட்டங்களையும் நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

இது கடந்த கால தேர்தல்களில் தேர்தல் வாக்குறுதியாகவும் வழங்கப்பட்டது. இவ் வேளையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லும் ஒருவன் தன் உதவிக்காக தூனைக் கண்டாலும் பிடிப்பான், துரும்பைக் கண்டாலும் பிடிப்பான் என்ற வகையில், இதனால் பாதிக்கப்பட் சிலர், தமது நியாயங்களை முறையிட இந்த இனவாதிகளின் துணையை நாடினர்.

இதனால் முஸ்லிம் சமூகத்திற்கு நலவு செய்ய நாடுவதைப்போல் சந்தர்ப்பத்தை பயன்படுத்திய இனவாதிகள் அவர்களின் நோக்கத்தை அடைய முற்படாடனர்.

இதனால் மேற்கூறப்பட்ட குறைபாடுகளை நம் சமூக பொறுப்பாளர்கள் துரித கதியில் செயல்பட்டு குறைபாடுகளை நீக்காததின் காரணமாக. அவர்களினால் முன்வைக்கப்பட் குற்றச்சாட்டுக்கள் நியாயமான குற்றச் சாட்டுக்களாக மேல் ஓங்கின. இனவாதிகள் எடுத்துக்காட்டிய இதில் உள்ள குறைபாடுகள் நியாயமானதாக காணப்பட்டது. எமது தரப்பில் இது ஏற்றுக் கொண்டு பதிலளித்து உடனடி திருத்தங்களை மேற் கொண்டு நிலமைகளை வெற்றி கொள்ள தவறிவிட்டது. நமது குரல்கள் அவர்களின் முன் ஓய்ந்தன.

இதற்கு யார் காரணம்

காலாகாலமாக குற்றச் சாட்டுக்களும் குறைபாடுகளும் முன் வைக்கப்பட்டபோது, அதை உடனடியாக திருத்தி ஆவன செய்ய பொறுப்பான முஸ்லிம் அமைப்புக்கள் கவனம் செலுத்தவில்லை. இந்த விமர்சனங்கள் இனவாதிகளுக்கு தீனியாக அமையும் வரை பார்த்திருந்தனர்.

ஆனால் இதற்கிடையில் இலங்கையின் பொதுச் சட்டத்தில் 2007 ஆம் ஆண்டு திருமண வயது 16 என்றும் 2019 ஆம் ஆண்டு திருமண வயது 18 என்றும் மாற்றங்கள் செய்யப்பட போதும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் எந்தவித மாற்றங்களையும் செய்ய முஸ்லிம் சமூகம் தவறிவிட்டது.

அமைச்சார் பைஸல் முஸ்தபா அமைச்சராக இருந்த காலத்தில் இது சம்பந்தமாக முஸ்லிம் பாரளுமன்ற உறுப்பினர்களும் சில முக்கியஸ்தர்களும் கூடி இது பற்றி ஆராய்ந்து சில திருத்தங்களுடன் வடிவமைக்கப்பட்ட போதிலும், மேற் கொண்ட துரித நடிவடிக்கைகளை பொறுப்புள்ள அமைப்புக்கள் மேற்கொள்ளவில்லை. இவ்வாறான பாறிய குறைபாடுகள் உள்ள முஸ்லிம் தனியார் சட்டம் இனம் காணப்பட்டு அப்போதே திருத்தப்பட்டிருக்க வேண்டு்ம்.

இருந்தாலும் இது சம்பந்தமாக ஆராய்து திருத்தங்களை சிபாரிசு செய்து அறிக்கை சமர்பிக்கப்பட்ட குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும் நிலமைகளை கருத்தில் கொண்டு இதுவும் துரிதமாக செயற்பட்டதாகத் தெரியவில்லை.

இதற்கு மத்தியில் இது அமைச்சரவையால் மற்றம் செய்யப்பட்டு காதி நிதிமன்றம் ரத்துச் செய்யப்பட்டு மாவட்ட நீதிமன்றத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதில் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அமைக்கப்பட்ட குழுவை துரிதப்படுத்தி அமைச்சரவையில் கால அவகாச‌ம் எடுத்து இதற்கான முடிவுகளை எட்டி இருக்காலாம். ஆனால் இதன் இடையில் நடந்தது என்ன என்பது தான் தெரிவில்லை.

ஆனால் தம் தரப்புக்கு ஆலோசனைக்கான வாய்பு வழங்கப்படவில்லை என்றே ஜம்மீயதுல் உலமா குற்றம் சுமத்துகின்றனர். தான் இது சம்பந்தமாக எந்தவிதமான அமைச்சரவை பத்திரங்களையும் கையளிக்கவில்லை என பொறுப்பான அமைச்சர் கூறுகின்றார்.

எவ்வாறாயினும் MMDA என்பது முனோர்களால் தொகுத்து பாதுகாத்து வழங்கப்பட்ட ஒரு சட்டக் கோவை. இதில் சில விடயங்கள் திருத்தப்பட வேண்டி இருந்தாலும், இதை படித்தவர்களுக்கும் தெரியும். இதை உரிமை என்பதை விட ஒரு சலுகை என்பதே பொருத்தம். அந்தளவுக்கு முஸ்லிம் சமூகத்திற்கு சலுகைகள் அதில் அடங்கியுள்ளன. அதனால் தான் இதை அறிந்த இனவாதிகள் ஓரே நாடு ஒரே சட்டம் என்ற கோசத்தில் இதில் குறி வைத்தனர்.

காலத்திற்குக் காலம் இவை திருத்தப்படவேண்டும் என கருத்துக்களும் அலேசனைகளும் முன்வைக்கப்பட்ட போதிலும், முஸ்லிம்களின் ஆன்மீக விடயங்களுக்கு பொறுப்பான அமைப்புக்களின் அசமந்தப் போக்கும், பழமைவாத கொள்கைகளுமே இதன் இழுபறி நிலைக்கான முதல் காரணமாகும். காலா காலமாக இதை திருத்துவதில் இழுபறி நிலைகளும் கருத்து வேறுபாடுகளும் தொடர்ந்ததே தவிர ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

ஆக மொத்தத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஆளுக்கு ஆள் காரணங்களைச் சொல்லி கைகளை கழுவிக் கொள்ள முற்பட்டாலும், இதில் உள்ள குறைகளை கண்டறிந்து அவ்வப்போது திருத்தங்களை மேற்கொண்டு பாதுகாத்துக் கொள்ளத் தெரியவில்லை என்பதே உண்மை.

ஒரு சமூகத்தின் மத, வணக்க காலாச்சார உரிமைகள் சர்வேதச சட்டங்களினால் சமூக, மத, மனித உரிமைகள் என பாதுகாக்கப்பட்டாலும், அவை சட்டங்களினாலும் சுற்றறிக்கைகளினாலும் மீறப்பட்டாலும், அவை நீதிமன்றங்களிகனுடாக அல்லது பின் ஒரு கால ஆட்சி மாற்றத்திலாவது பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால் இழக்கும் சலுகைகளை பொறுத்தவரை தற்போது நாட்டடின் நிலைமையை பொறுத்து திரும்பவும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். சலுகையாக இருப்பதை நம் கவனயீனம் காரணமாக இழந்தால் அதை விட பெரிய கைசேதம் எதும் இல்லை.

பேருவளை ஹில்மி ஏனைய சமூகத்தின் உரிமைகள் அவ்வாறே இருக்கும் போது முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் மட்டும் பறிக்கபடுவது ஏன்? பல்லின மக்கள் வாழும் இலங்கை நாட்டின் வரலாறு தொடக்கம் ஒவ்வெரு இன மக்களுக்கும் அம்மக்களின்…

பேருவளை ஹில்மி ஏனைய சமூகத்தின் உரிமைகள் அவ்வாறே இருக்கும் போது முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் மட்டும் பறிக்கபடுவது ஏன்? பல்லின மக்கள் வாழும் இலங்கை நாட்டின் வரலாறு தொடக்கம் ஒவ்வெரு இன மக்களுக்கும் அம்மக்களின்…