Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இரு வாரங்களுக்கு கடும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த ஆலோசனை 

இரு வாரங்களுக்கு கடும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த ஆலோசனை

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பயணக்கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் கொரோனா கட்டுப்படுத்தல் வெற்றியடையாத நிலையில் நாடாளாவிய ரீதியில் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு கடும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற கொரோனா கட்டுப்படுத்தல் செயலணியின் கூட்டத்திலேயே இது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

நாடு தற்போதுள்ள நிலைமையில் தொடர்ந்தால் பாரிய ஆபத்தை எதிர் நோக்குமென்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனலே கடும் சட்டங்களுடன் கூடிய ஊரடங்கை இரண்டு வாரங்களுக்கு அமுல்படுத்த வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நாடுகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. எனவே கடுமையான ஊரடங்கை அமுல்படுத்த ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்க இன்றை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு நடைமுறைகளில் நாளைமுதல் கடும்போக்கை கடைப்பிடிப்பதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

பயணக்கட்டுப்பாடு காலத்திலும் அரச மற்றும் தனியார் துறை அலுவலக பணியாளர்கள் வகைதொகையின்றி பயணிப்பது குறித்து கவனஞ்செலுத்தியுள்ள பொலிஸார் ,நாளைமுதல் விசேட நடைமுறைகளை பின்பற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

இதன்படி நாளை கொழும்புக்குள் வரும் வாகனங்களுக்கு விசேட ஸ்ரிக்கர்களை ஒட்டும் செயற்பாடு இடம்பெறவுள்ளது.அதேபோல பயணத்தடை காலங்களில் பயணிப்போர் ,அலுவலகங்களின் தலைமை அதிகாரிகளிடம் இருந்து கொண்டுவரும் கடிதங்களின் உண்மைத்தன்மை குறித்தும் பொலிசாரின் சோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இதற்கிடையில் இதர அத்தியாவசிய பொதுச் சேவைகளில் தேவையானவர்களை மட்டும் பணிக்கு அழைக்கும் விசேட சுற்றறிக்கையொன்றை வெளியிட அரசு தயாராகி வருவதாக மேலும் அறியமுடிந்தது. LNN Staff

பயணக்கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் கொரோனா கட்டுப்படுத்தல் வெற்றியடையாத நிலையில் நாடாளாவிய ரீதியில் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு கடும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கொரோனா கட்டுப்படுத்தல் செயலணியின் கூட்டத்திலேயே இது…

பயணக்கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் கொரோனா கட்டுப்படுத்தல் வெற்றியடையாத நிலையில் நாடாளாவிய ரீதியில் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு கடும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கொரோனா கட்டுப்படுத்தல் செயலணியின் கூட்டத்திலேயே இது…