Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
வீரசேகரவை அமைதியாக இருக்குமாறு கூறியுள்ள ராஜபக்‌ஷ 

வீரசேகரவை அமைதியாக இருக்குமாறு கூறியுள்ள ராஜபக்‌ஷ

  • 8

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை சற்று அமைதியாக இருக்குமாறு பணித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ.

பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் பெயரில் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வௌிவந்த செய்திகள் தொடர்பில் அதற்கெதிராக நீதிமன்றம் செல்ல தயாராகியுள்ளார் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர.

இந்நிலையில் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்களுக்கு சற்று அமைதியாக இருக்குமாறு தெரிவித்துள்ளார்

தனிமைப்படுத்தல் மற்றும் பயணக்கட்டுப்பாட்டு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கைதான நடிகை பியுமியை  நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதன்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அவருக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை பியூமி ஹன்சமாலிக்கு வழங்கிய தனிமைப்படுத்தல் உத்தரவில் அமைச்சர் தலையிட்டதாக கூறப்படுவதால் அமைச்சர் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்று ஆளும் கட்சிக்குள் உள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

தனிமைப்படுத்தல் மற்றும் பயணக்கட்டுப்பாட்டு சட்டங்களை மீறி அழகுக்கலை நிபுணரான சந்திமால் ஜயசிங்க கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். இதில் பங்கேற்ற நடிகை பியூமி ஹன்சமாலி உட்பட 15 பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதன்போது மாற்று ஆடையில்லை என பியூமி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர அவருக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்திருந்தார்.

பியுமி ஹன்சமாலியின் தொலைபேசிக்கு அழைப்பெடுத்து அவரது கவலையை கேட்டறிந்து, பஸ்ஸிற்குப் பொறுப்பாக இருந்த உதவி பொலிஸ் அதிகாரிக்கு கூறி கொஸ்வத்த பிரதேசத்தில் பஸ்ஸினை நிறுத்தும் படியும் உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தில் அவர்களது உறவினர்களிடம் கூறி தனிமைப்படுத்தலில் ஈடுபடும் காலத்தில் பயன்படுத்த ஆடைகளை அவர்கள் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தனிமைப்படுத்தப்பட்ட வசதிக்கு புறப்படுவதற்கு முன்னர் நடிகை தனது வீட்டிலிருந்து சில துணிகளைப் பெற உதவுவதில் மட்டுமே தலையிட்டதாக அமைச்சர் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதையடுத்தே அமைச்சர் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்று ஆளும் கட்சிக்குள் உள்ள பல எம்.பி.க்கள் கருதுகின்றனர் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஹிரு தொலைக்காட்சியில் இடம் பெறும் சலகுண நிகழ்சியில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண அவர்களிடம் பியுமி ஹன்சமாலியின் விவகாரமும் விவாதிக்கப்பட்டதை தொடர்ந்து கொரோனாவின் அரசியல் களத்தில் பியுமி ஹன்சமாலியின் பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை சற்று அமைதியாக இருக்குமாறு பணித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ. பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் பெயரில் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வௌிவந்த செய்திகள் தொடர்பில் அதற்கெதிராக நீதிமன்றம்…

பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை சற்று அமைதியாக இருக்குமாறு பணித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ. பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் பெயரில் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வௌிவந்த செய்திகள் தொடர்பில் அதற்கெதிராக நீதிமன்றம்…