Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இலங்கைக் தேசிய கொடியுடன் கால் துடைப்பான் மிகுந்த வேதனை அளிக்கிறது 

இலங்கைக் தேசிய கொடியுடன் கால் துடைப்பான் மிகுந்த வேதனை அளிக்கிறது

  • 8

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

எல்லா புகழும் இறைவனுக்கே! இறைவன் பெயரால் ஆரம்பிக்கின்றேன். இன்று நான் மிகவும் முக்கியமானதொரு விடயம் பற்றிய உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

அன்பார்ந்த உறவுகளே! இன்று காலை முதல் இந்த நொடி வரை சமூக வலைதளங்களில் மிகப் பரவலாகப் பரவி வரும் ஒரு செய்தி பற்றி தான் நான் உங்களோடு பேச நினைக்கிறேன்.

இலங்கை எமது நாடு, அழகான நாடு, சுபிட்சமான நாடு, சிறிய நாடு இந்த விடயத்தை நாம் யாரும் ஒருபோதும் மறுக்க மாட்டோம். அதேபோன்றுதான் இந்த இலங்கை மண்ணில் உள்ள ஒவ்வொருவரும் இலங்கையை நேசிக்கும் மக்கள். நான் எனது பதிவுகளில் ஒருபோதும் இனவாதம் இயக்க வாதம் கட்சி வாதம் போன்றவற்றை தூண்டியது கிடையாது என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

இனவாதத்திற்கு அப்பால் சென்று நாம் ஒரே நாடு என்ற அடிப்படையில் ஒன்றாக எழ வேண்டிய கடப்பாட்டில் தற்போது இருக்கின்றோம்.

அதாவது இலங்கையின் தேசிய கொடியுடன் கூடிய கால்துடைப்பான்கள் சர்வதேச இயங்கலை வணிகமான அமாஸூன் இணையதளத்தில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.   மேலும் இன்று சமூக வலைதளங்களில் இப்புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

இலங்கை மண்ணில் பிறந்த இலங்கையில் என்ற உணர்வு உள்ள எவனும் இந்த செயற்பாட்டை ஒருபோதும் ஆதரிக்க மாட்டான். இது ஒரு இனத்தின் பிரச்சினை அல்ல. ஒரு இயக்கத்தின் பிரச்சினை அல்ல. ஒரு மதத்தின் பிரச்சினை அல்ல. ஒரு கட்சியின் பிரச்சினை அல்ல. ஒரு அரசாங்கத்தின் பிரச்சினையும் அல்ல. இது இலங்கை நாட்டின் பிரச்சினை.

எனது அருமை உறவுகளே ஒருபோதும் நான் அந்தப் படத்தை சமூக வலைத்தளங்களில் பகிரப் போவதில்லை. குறித்த விற்பனை விளம்பரங்களை அமஸூன் இணையதளத்திலிருந்து நீக்குமாறு அழுத்தம் கொடுப்போம். அதேபோன்று நான் வினயமாக கேட்டுக் கொள்வது என்னவென்றால் நீங்களும் அந்த புகைப்படங்களை தயவுசெய்து சமூக வலைத்தளங்களில் பகிராதீர்கள். எங்களால் முடியுமாக இருந்தால் நாம் அனைவரும் ஒன்றாக இதற்கு எதிராக அணிதிரள்வோம்.

இதே சமூக வலைத்தளத்தில் எமது எதிர்ப்புகளை காட்டுவோம். எங்கள் இராணுவத் தலைவர்கள் எனக்குப் பெற்றுத் தந்த எமது நாட்டின் நற்பெயரை பாதுகாப்போம். அதற்காக அனைத்து இன மத குல வேறுபாடுகளை தவிர்த்து ஒன்றிணைவோம். நான் உங்கள் அனைவரையும் எமது நாட்டின் நற்பெயரை பாதுகாப்பதற்காக பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறேன்.

பஸீம் இப்னு ரஸுல்

எல்லா புகழும் இறைவனுக்கே! இறைவன் பெயரால் ஆரம்பிக்கின்றேன். இன்று நான் மிகவும் முக்கியமானதொரு விடயம் பற்றிய உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். அன்பார்ந்த உறவுகளே! இன்று காலை முதல் இந்த நொடி வரை…

எல்லா புகழும் இறைவனுக்கே! இறைவன் பெயரால் ஆரம்பிக்கின்றேன். இன்று நான் மிகவும் முக்கியமானதொரு விடயம் பற்றிய உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். அன்பார்ந்த உறவுகளே! இன்று காலை முதல் இந்த நொடி வரை…