Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இலங்கையில் தேயிலைச் செய்கையின் வரலாறு 

இலங்கையில் தேயிலைச் செய்கையின் வரலாறு

  • 227

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பிரித்தானியர் தமது ஆட்சியை இலங்கையில் ஸ்திரமாக்கி கொண்டதன் பின்னர் அதுவரை காலமும் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதார முறை நிலை மாறி வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட திறந்த பொருளாதார முறைக்கு இட்டுச் சென்றது.

பல கொள்கைகளை வகுத்து பொருளாதார நிலையை அபிவிருத்தி செய்வதில் விசேட கவனம் செலுத்தினர்.

1837 தொடக்கம் ஏறக்குறைய 21ம் நூற்றாண்டு ஆரம்ப காலம் வரை இந்நாட்டில் ஏராளமான தோட்டங்களை நிறுவி தோட்ட பயிர்ச்செய்கையை பரப்பினார்கள். அத்தோட்ட விளைபொருட்களை வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல போக்குவரத்து சாதனங்களை அமைத்தனர்.

இலங்கையில் ஆரம்பத்தில் கோப்பி, தேயிலை, இறப்பர், தென்னை ஆகிய தோட்டங்களையும் அதிகமாக திறந்தால் ஏற்றுமதி பெருகியது. அவ்வேற்றுமதிகளை சிரமமின்றி குறுகிய காலத்தில் குறைந்த பணச்செலவில் செய்வதற்காக பல பாதைகளை அமைத்தார்கள். அதிக பொருட்களையும் ஆட்களையும் இடம்மாற்றுவதற்காக பின்னர் புகையிரத பாதைகளை அமைத்தனர்.

தோட்டங்களில் உழைப்பதற்காக தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களை வரவழைத்தார்கள். போக்குவரத்து சாதனங்களின் வளர்ச்சியினாலும் புதிய தொழிலாளர் குடியேற்றங்களின் விளைவாலும் புது நகரங்கள் தோற்றம் பெற்றன.

அந்தவகையில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையில் பல பயிர்களை இந்நாட்டுக்கு அறிமுகப்ப்டுத்தினர்.

கோப்பி, சிங்கோனா, கொக்கோ போன்ற பயிர்களின் வீழ்ச்சியானது தோட்டக்காரரை மட்டுமன்றி, நாட்டின் பொருளாதாரத்தையும் பலமாகப் பாதித்தது. இதனைத் தொடர்ந்து தான் தேயிலைச் செய்கையில் ஆர்வம் காட்டினர்.

இலங்கையில் தேயிலை செய்கையின் விருத்திக்கு பல காரணிகள் துணை நின்றன.

1.தேயிலை செய்கைக்கு ஏற்ற மண் வகை காணப்பட்டது.

  • மலை நாட்டு சாய்வுகளில் செம்பூரான் மண் வகை அதிகளவு பரம்பிக் காணப்பட்டது.
  1. செம்மஞ்சள் பொட்சோலிக் மண்
  2. செங்கபில லற்றசோல் மண்
  3. மென் சாய்வான தரைதோற்றம்
  4. மொறவக் கோரளை 2500 அடிக்கு குறைவான உயரமான பகுதியில் வளரும் தேயிலை
  5. கண்டி 2500 அடிக்கு மேல் உயரமான பகுதியில் வளரும் தேயிலை
  6. ஊவா 2800 அடிக்கு மேல் உயரமான பகுதியில் வளரும் தேயிலை
  7. தம்புள்ளை மற்றும் டிக்கோயா 3500 அடிக்கு மேல் உயரமான பகுதியில் வளரும் தேயிலை
  8. நுவரெலியா 6000 அடிக்கு மேல் உயரமான பகுதியில் வளரும் தேயிலை
  • கூடிய மழை வீழ்ச்சி
  • குறைந்ந வெப்பநிலை

போன்ற புவியியல் காரணிகள் வாய்ப்பாக இருந்தது.

2. உலக சந்தையில் செங்கோனாவின் விலை வீழ்ச்சி, கொக்கோவை சில இடங்களில் மட்டுமே பயிரிட கூடியதாக இருந்தமை. இதனால் தோட்டக்காரரின் வருமானம் வீழ்ச்சியடைதல்.

3. தேயிலை பதனிவதிலும் தயாரிப்பதிலும் இலகுவான புதிய முறைகள் அறிமுகப்படுத்தியமை.

4. இந்தியாவின் அஸாமிலும் பார்க்க இலங்கையின் தேயிலை விளைச்சல் அதிகமாக இருந்தமை.

தேயிலை செய்கையின் ஆரம்பத்துக்கு மேற்குறித்த காரணிகள் உதவியது.

Camellia sinensis

இந்நிலைத்திணையின் இருசொற்பெயர் Camellia sinensis என்பதாகும். இங்கு sinensis என்பது இலத்தீன் மொழியில் சீனாவைச் சேர்ந்த என்ற பொருள்படும். Camellia என்பது அருட்திரு. செரொக் காமெல் (1661-1706) அருட்திரு. செரொக் காமெல் தேயிலைச் செடியைக் கண்டுபிடிக்கவோ அல்லது பெயரிடவோ இல்லை. எனினும் திணை வகையீட்டை உருவாக்கிய கரோலஸ் லீனியஸ் என அறியப்பட்ட தாவரவியலாளரான . செரொக் காமெல் அடிகள் அறிவியல் துறைக்காற்றிய சேவையைப் பாராட்டும் வகையில் இப்பேரினத்துக்கு இப்பெயரை இட்டார்.

இலங்கையின் தேயிலை வரலாறு 1824 ஆம் வருடத்துடன் ஆரம்பமாகிறது. அந்த வருடத்தில் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தேயிலைச் செடி பேராதனை பூங்காவில் நடப்படுகிறது.

1867 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேயிலை வளர்ப்பு கண்டியிலுள்ள லூல்கந்துரை பெருந்தோட்டம் தேயிலை வளர்ப்பிற்கான ஆர்வத்தைக் கொண்டிருந்தது. பெருந்தோட்டத்துக்கு வந்திருந்த ஸ்கொட்லாந்து நாட்டவரான ஜேம்ஸ் டெய்லர் 1867 தேயிலைப் பயிரிட்டார். மொத்தம் 19 ஏக்கர் நிலத்தில் தேயிலை பெயிரிடப்பட்டது. வட இந்தியாவில் அஸாமில் தேயிலை வளர்ப்பு, தேயிலை உற்பத்தி போன்றவற்றில் அனுபவம் பெற்றிருந்த டெய்லர், தனது வீட்டின் முன்னரையில் உற்பத்தி தொடர்பான பல சோதனைகளைச் செய்தார். தேயிலை இலையைக் தனது கைகளால் சுருட்டி, வாடிய அத்தேயிலைகளை களிமண் அடுப்பில் கரியைப் பயன்படுத்தி சுட்டார். இவ்வாறு தயாரிக்கப்பட்ட தேயிலை இலண்டன் நகரின் ஏலத்தில் கூடிய விலையைப் பெற்றது. இது இலங்கையில் தேயிலை உற்பத்தியை ஊக்கமூட்டியது.

இலங்கையில் முக்கிய தேயிலை வளர்ப்புப் பகுதிகள்

  1. காலி
  2. இரத்தினபுரி
  3. கண்டி
  4. நுவரெலியா
  5. திம்புள்ளை
  6. ஊவா

தேயிலை செய்கை விருத்தியினால் உருவாகிய புதிய நகரங்கள்

  1. ரத்தோட்ட
  2. எலகடுவ
  3. றங்காலை
  4. புஸ்ல்லாவ
  5. தொலஸ்பாகே
  6. ருவான்வெல

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தேயிலை செய்கை எழுச்சி அடைவதற்கும் பல காரணிகள் உதவின.

தோட்ட விளை பொருட்களை துறைமுகங்களுக்கு அனுப்பும் வசதி காணப்பட்டமை.

  • வீதிகள்

முதலாவது பெருந்தெரு பிரித்தானிய பொருளியலாரான கப்ரன்டோசன் இன் திட்டப்படி கடுகன்னாவ ஊடாக நிறுவப்பட்ட A1 என்ற குறியீட்டு இலக்க வீதி, ஆளுனர் ஜேம்ஸ் அன்டர்சன் – கம்பளை எட்டியாந்தோட்ட வீதி,ஆளுனர் ஹென்றி வோட் – மாத்தளை, கண்டி, கொத்மலை

  1. ஆளுனர் ஹேர்குலிஸ் றொபின்சன் – கினிகத்தேனை அரநாயக்க வீதி, டிக்கோயா வீதி, காலி அக்குரஸ்ஸ வீதி, கொழும்பு கும்பலவனை வீதி
  2. ஆளுனர் வில்லியம் கிரகரி – கண்டி- யாழ் வீதி, கண்டி- திருமலை வீதி, மதவாச்சி- மன்னார் வீதி, உடப்புசல்லாவ – நுவரெலிய வீதி.
  3. ஆளுனர் லோங்டன் – நுவரெலிய நானு ஓயாவீதி, ஹற்றன் பொகவந்தலாவ வீதி, கண்டி தெல்தெனிய வீதி
  • புகையிரத வீதிகள்

சேர் ஹென்றி வொட் 1865 இல் கொழும்பு அம்பேபுஸ்ஸ புகையிரத பாதை

  1. 1867 இல் கொழும்பு – கண்டி புகையிரத வீதி
  2. 1873 இல் கொழும்பு – கம்பளை புகையிரத வீதி
  3. 1880 இல் கொழும்பு – மத்தளை புகையிரத வீதி
  4. 1888 இல் கொழும்பு – ஹற்றன் புகையிரத வீதி
  5. 1893 இல் கொழும்பு – அப்புத்தளை புகையிரத வீதி
  6. 1924 இல் கொழும்பு – பதுளை புகையிரத வீதி

தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அதன் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டன.

முதலீட்டாளர்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டமை

தோட்ட தொழிலாளர்களுக்கு பிரயாணச் சலுகைகள்

வசிக்கும் இடங்கள், இலவச வைத்திய வசதிகள் அளிக்கப்பட்டமை

போன்ற காரணிகளால் பெருந்தொகையான உழைப்பாளர் தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய முன்வந்தனர்.

இக்காரணிகள் விளைவாக 1883 முதல் 1896 வரையுள்ள காலத்தில் தேயிலை செய்கை வேகமாக விருத்தியடைந்தது.

1890 களில் தான் இலங்கைத் தேயிலையை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தல் ஆரம்பமாகிறது. அதன் பின்னர் உலகிலேயே சிறந்த தேயிலையை உற்பத்தி செய்யும் நாடு என்ற பெருமை இலங்கைக்குக் கிடைக்கிறது.

1890 இல் இலங்கை 22,900 தொன் தேயிலையை உற்பத்தி செய்தது இது 1873–1880 வரை உற்பத்தி செய்யப்பட்ட 12 கிலோவுடன் ஒப்பிடும் போது மிகப்பெரிய வளர்ச்சியாகும்.

1896 இன் பின்னர் தேயிலை செய்கையில் ஒரு சிறு வீழ்ச்சி ஏற்பட்டது. உற்பத்தி கேள்வியிலும் அதிகமாய் இருந்தமையால் விலை வீழ்ச்சிக்கு காரணமாகும்.

ஆயினும் 1904 ஆண்டுக்கு பின்னர் சிக்கனமாக முறைகள் பின்பற்றபட்டதுடன் பல நாடுகளில் தேயிலை நுகர்ச்சி அதிகரித்து தேயிலைக்கான கேள்வி கூடியது

பாரிய தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு புதிய இயந்திர சாதனங்களின் கீழ் தேயிலை உற்பத்தி புத்துயிர் பெற்றது.

1ம் உலகப் போர் காலத்தில் கப்பற் போக்குவரத்து குறைவினாலும் பசளை விலை அதிகரிப்பினால் உற்பத்தி நாடுகளின் போட்டியினாலும் தேயிலை செய்கை ஒரு மந்தநிலையை அடைந்தது.

உலகில் அதிகளவு தேயிலை உற்பத்தி செய்யும் நாடு சீனாவாகும். உலகின் தேயிலை உற்பத்தியில் 30 வீதம் சீனாவில் இருந்து கிடைக்கிறது. அடுத்ததாக அதிக அளவில் தேயிலையை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் கென்யாவும் நான்காவது இடத்தில் இலங்கையும் உள்ளன.

வருடாந்தம் 350 மில்லியன் கிலோ தேயிலையை இலங்கை உற்பத்தி செய்கிறது.

தேயிலை உற்பத்தித்துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவூம் 20 இலட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாட்டின் வருமானத்தைத் தேடித்தரும் ஐந்து முக்கிய ஏற்றுமதிப் பொருட்களில் தேயிலையும் ஒன்றாகும்.

ஆயினும் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் தேயிலை மூலமே கூடுதலான செலாவணி பெறப்பட்டது.

இலங்கையில் தேயிலைச் செய்கை இன்று பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டியிருப்பதாலேயே இந்த சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

1. தொழிலாளர் பற்றாக்குறை

இலங்கையிலுள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் இந்திய வம்சாவளி தமிழர்களின் சம்பளப் பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக இத்தோட்டங்களில் உள்ள இளைஞர்கள், யுவதிகள் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதை விரும்பாமல் நகரங்களுக்குத் தொழில் தேடிச் செல்கின்றனர். இதனால் தோட்டங்களில் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறை தேயிலைத் தோட்டங்களின் உற்பத்தி செயற்பாடுகளுக்கு பெரும் தடையாக உள்ளது.

2. தேயிலை மீள்செய்கை

தேயிலை மீள் பயிரிடலில் போதிய அக்கறை செலுத்தப்படுவதில்லை. அதிகளவான நிலங்கள் சுரண்டப்படுவதைக் காணலாம்.

3. களைக்கொல்லி பாவனை

களைக்கொல்லிகள் விடயத்திலும் குழப்பநிலை நீடிக்கிறது.

ஆகியவை தேயிலைச் செய்கை எதிர்நோக்கும் சவால்களில் சிலவாகும். எனவே, தேயிலை தொடர்பான இழந்த பெருமையை மீட்டெடுக்க இத்துறையில் இடம்பெறும் சவால்களை வெற்றிகொள்வது அவசியமாகும்.

இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியது இப்போது அவசியமாகவும் அவசரமாகவும் உள்ளது. உலகில் ருசியான தேயிலை இலங்கைத் தேயிலைதான் என்ற பெருமையை நாம் தக்கவைத்துக் கொள்வதற்கு மேற்கூறிய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

Zeena Nafees
B.A Special In Geography ®️
SEUSL

பிரித்தானியர் தமது ஆட்சியை இலங்கையில் ஸ்திரமாக்கி கொண்டதன் பின்னர் அதுவரை காலமும் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதார முறை நிலை மாறி வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட திறந்த பொருளாதார முறைக்கு இட்டுச் சென்றது. பல…

பிரித்தானியர் தமது ஆட்சியை இலங்கையில் ஸ்திரமாக்கி கொண்டதன் பின்னர் அதுவரை காலமும் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதார முறை நிலை மாறி வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட திறந்த பொருளாதார முறைக்கு இட்டுச் சென்றது. பல…