இளம் கவிஞர் அஹ்னாப்புக்கு விளக்கமறியல்!

  • 11

நவரசம்  என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், சிரிஐடி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இரகசியமாக கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வார இறுதி நாட்களில் மிக இரகசியமாக இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 11 ஆம் திகதி வெள்ளியன்று, அஹ்னாப் ஜெஸீம், தங்காலை தடுப்பு நிலையத்திலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு, மறுநாள் சனிக்கிழமை கொழும்பு 8 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றில், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 7 (2) ஆம் அத்தியாயம் பிரகாரம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது அவருக்கு சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ள எந்த வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

அத்துடன் அஹ்னாப் ஜஸீமை நீதிமன்றில் ஆஜர் செய்வதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு அவரது சட்டத்தரணிக்கோ அல்லது குடும்பத்தாருக்கோ கூட அறிவிக்கவில்லை எனவும், ஜனநாயகத்துக்கு மிக விரோதமாக இரகசியமான முறையில் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இதனை முன்னெடுத்துள்ளதாகவும், அஹ்னாப் ஜஸீமின் சட்டத்தரணி சஞ்சய தெரிவித்தார்.

அஹ்னாப் ஜஸீமின் குடும்பத்தார் கடந்த சனிக்கிழமை அவருடன் பேசுவதற்காக பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினருக்கு தொலைபேசியில் அழைத்துள்ளபோதும், அப்போது கூட ஒவ்வொரு நேரத்தை கூறி பிறகு அழைக்குமாறு தெரிவித்துள்ளதுடன் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவதை அவர்கள் மறைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், எதிர்வரும் 22 ஆம் திகதி நீதிமன்றில் விசேட வாதங்களை முன்வைக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எம்.எப்.எம்.பஸீர்

நவரசம்  என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், சிரிஐடி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இரகசியமாக…

நவரசம்  என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், சிரிஐடி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இரகசியமாக…