Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி தெற்கின் அரசியல்வாதிகளா? - Youth Ceylon

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி தெற்கின் அரசியல்வாதிகளா?

  • 11

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

தற்போது ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 28 மாதங்கள் கடந்துவிட்டது. இது தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை வௌிவந்து 6 மாதங்கள் கடந்து விட்டது. இதனால் சுமார் 350 பேர் உயிரிழந்தனர். ஆனால் தற்போது இதனைவிட அதிகமானோர் மரணித்து மரணித்து வாழ்கின்றனர். அதாவது பெரும்பாலனோர் மனசீக ரீதியாகவும் உடலியல் ரீதியாகவும் பாதிக்கபட்டு வாழ்வதாக  நேற்று (20.08.2021) இடம் பெற்ற  தேசிய மக்கள் சக்தி ஊடகவியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

பொறுப்புக்கூற வேண்டிய கடந்த அரச தரப்பு

இதனை ஈஸ்டர் தாக்குதல் என்று கூறினாலும் இது கிறிஸ்தவ கத்தோலிக்க மக்களுக்கு எதிராக மேற்கொண்டதாக நாம் ஏற்றுக் கொள்வதில்லை. இது இனவாத மதவாத தீவிரவாத தாக்குதல் என்று கூறினாலும் நாம் அதனை மாத்திரம் ஏற்றுக் கொள்வதில்லை. அவ்வாறே இது முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பிரச்சினையும் அல்ல. இங்கு இனவாத, மதவாத பிரச்சினைகளை விட பாரிய பிரச்சினை ஒன்று உள்ளது.

குறித்து ஈஸ்டர் தாக்குதலை தடுத்து நிறுத்தாமை குறித்து அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் ஜனாதிபதி அறிக்கையில் முன்வைக்கபட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் உட்பட கடந்த அரசாங்கத்தின் சில அமைச்சர்களும் இது தொடர்பாக அறிந்திருந்தனர்.  எனவே இவர்கள் அனைவரும் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும்.

அவ்வாறே முஸ்லிம் அரசியல்வாதிகளும் உள்ளனர். எந்த அரசாங்கம் வந்தாலும் முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் ஒப்பந்தம் செய்து, தமது பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்திக் கொள்கின்றனர். எனவே இது பற்றியும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்கள் யார்?

எமக்குத் தெரியும் சில தீவிரவாத அமைப்புகள் குறித்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுன்றது. எனவே அது தொடர்பாகவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். என்றாலும் இது வரை மேற்கொள்ளவில்லை ஏனெனில் இது ஒப்பந்த (டீல்) அரசியலாகும்.

இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் யார்?

இந்த தாக்குதலை திட்டமிட்டவர்கள் யார் என்று கேட்டால் சிலர் இது முஸ்லிம் தீவிரவாத குழுக்களின் திட்டம் எனலாம். மேலும் சிலர் இது தெற்கின் அரசியல்வாதிகள் என்றும் கூறலாம். அதுதான் எமக்கு முக்கியமாகும்.

சாரா ஜெஸ்மின் பற்றி சிலர் வௌிநாட்டுக்கு தப்பிச் சென்றதாக குறிப்பிடுகின்றனர்.மேலும் சிலர் அவர்  கொல்லப்பட்டதாக கூறுகின்றனர். அவ்வாறெனில் அவளை கொலை செய்தது யார்?

தெஹிவளையில் தற்கொலை செய்த ஜெமீனுக்கு இராணுவப் புலனாய்வு மூலம் பணிப்புரை வழங்கப்பட்டதாக அறிக்கையில் உள்ளது. இதன் உண்மைத்தன்மை பற்றி தெரியாது.

அதாவது ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி முஸ்லிம் தீவிரவாதிகளா? அல்லது தெற்கின் அரசியல்வாதிகளா என்று தெரியாது.

நல்லாட்சியின் பொடுபோக்கினால் மக்களுக்கு ஏற்பட்ட அழுத்தங்களை பயன்படுத்தி நாட்டில் இனவாதத்தை பரப்பி, தீவிரவாதத்தை உருவாக்கி தெற்கின் அரசியல்வாதிகள் தான் இதனை செய்திருப்பார்கள் என்ற சந்தேகம் தற்போது தமக்கு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. LNN Staff

 

தற்போது ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 28 மாதங்கள் கடந்துவிட்டது. இது தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை வௌிவந்து 6 மாதங்கள் கடந்து விட்டது. இதனால் சுமார் 350 பேர் உயிரிழந்தனர். ஆனால் தற்போது இதனைவிட…

தற்போது ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 28 மாதங்கள் கடந்துவிட்டது. இது தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை வௌிவந்து 6 மாதங்கள் கடந்து விட்டது. இதனால் சுமார் 350 பேர் உயிரிழந்தனர். ஆனால் தற்போது இதனைவிட…