Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
உண்டியல் - நூல் விமர்சனம் 

உண்டியல் – நூல் விமர்சனம்

  • 7

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கான ஒரு வாய்ப்புக் கிட்டியது. பரீட்சை நிலையம் ரத்மலான ‘Deaf School’ மாணவர்களை அழைத்துக் கொண்டு அவர்கள் இருந்த மண்டபத்தினை நோக்கிச் சென்றோம். அங்கு மாணவர்களை அமரச் செய்து விட்டு அந்தப் பாடசாலை வளாகத்திலுள்ள இன்னுமோர் கட்டிடத் தொகுதியின் முன்னால் உள்ள கட்டில் சற்று அமர்ந்து கொண்டோம். நிறுவனத்தின் அதிபர் உட்பட நானும் அங்கு அமர்ந்திருந்தேன்.

சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். பின்னர் அதிபர் தம் ‘Hand bag ‘ இல் இருந்து இரு புத்தகங்களை வெளியில் எடுக்கக் கண்டேன். டீச்சர் நான் என்னுடைய bag இல் எதற்கும் இவ்விரு புத்தகங்களை போட்டுக் கொண்டு வந்தேன். இந்தாங்க இத நீங்க வாசீங்க என்றார். நானும் உடனே அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொண்டேன். அந்தப் புத்தகத்தை கையில் வாங்கிக் கொண்ட நான் இந்தப் புத்தகத்தை எங்கோ பார்த்திருக்கின்றேன் என்று என் சிந்தனையில் ஓட ஆரம்பித்து விட்டது. உடனே என் நினைவுக்கு வந்தது பாடசாலையில் எமது சகோதரி ஒருவர் இதனை வாசித்துக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கின்றேன் என்பது என் நினைவுக்கு எட்டியது.

உடனே புத்தகத்தின் அட்டைப் பகுதிகளையும் அதன் ஒவ்வொரு பக்கங்களையும் புத்தகத்தின் ஆரம்பப் பக்கத்தில் இருந்தே வாசிக்கத் துவங்கினேன். நூலாசிரியர் (சுலைமா சமி இக்பால் தர்கா நகர்) ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் அவரது எழுத்துத் துறை மற்றும் எழுத்தாற்றல் மென்மேலும் வளர உறுதுணையாக நின்று உதவியவர் உதவிக் கொண்டிருப்பவர். அவரது கணவர் என்பதும் மகிழ்ச்சிகரமானதோர் விடயம்.

அந்தப் புத்தகம் பேசுகின்ற ஒவ்வொரு தலைப்புக்களையும் வாசித்து விட்டு மீண்டும் அட்டைப்படத்தை நுணுக்காமாகப் பார்த்தேன். அங்கிருந்த தலைப்புக்கள் அனைத்தையும் ஒன்று கோர்க்கும் விதமாக அட்டைப்படம் இருந்தது. அதில் என்மனதை ஈர்த்த சிறுகதை ” ஊனம்” என்ற தலைப்பில் இருந்ததாகும்.

அந்தத் தலைப்பு சுமந்து வந்த கதையை நானும் முதலில் ஏற்றுக் கொள்ள மறுத்தேன். ஆனால் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் எதிர்ப்பார்ப்பது ஒன்று தான் அன்பு. அது எங்கிருந்து கிடைக்கப் பெறுகிறதோ அதனைத் தன்னோடு நிதமும் தக்க வைத்துக் கொள்ளவே அந்த ஆன்மா துடியாய் துடிக்கும். அங்கு வெட்கமில்லை, அங்கு ஔிவு மறைவில்லை. அங்கு காலதாமதமும் இல்லை.

உடனடியாகக் கேட்டு உறுதி செய்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம் மட்டுமே உள்ளத்தில் ஓடும். அப்படிப்பட்ட விழிப்புணர்வற்ற ஒரு மாணவன் தன் ஆசிரியையிடம் அவரைத் திருமணத்தின் ஊடாகத் தனதாக்கிக் கொண்டு அவரின் அன்பையும், ஆதரவையும் தன்வசப்படுத்திக் கொண்டு ஓர் அன்புள்ளம் கொண்ட உள்ளத்தோடு இணைவதில் தான் உண்மையான சந்தோசம் இருக்கின்றது என்பதை தனக்குள் தர்மானித்துக் கொண்டு ஆசிரியைக்கு எழுதும் அந்தக் காகித மடலின் வரிகள் யாவும் அவனது ஏக்கத்தையும் எதிர்ப்பார்ப்பையும் என் மனக்கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டது.

எந்தவொரு உடலியல் ரீதியான குறைபாடுமில்லாத ஒருவரைத் திருமணம் முடிக்க எத்தனையோ பேர் முன் வந்த போதிலும், இப்படியான ஒருவரை திருமணம் முடிக்க முன் வருகின்றவர் எத்தனையோ விடயங்கள் குறித்து சிந்திக்க வேண்டிய தேவை இருக்கின்றது. என்பது பார்க்கின்றவர்கள் எமக்குள் தோன்றும் ஒரு விடயம். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி அப்படிப்பட்டவர்களுக்கு காலமெல்லாம் உபகாரம் செய்து அவர்களை கண்ணுங்கருத்துமாய் பாரத்துக் கொள்வதென்பது. மனித நேயமா, பரிவா, பாசமா, என்னவென்று இணங்கண்டு கொள்ள முடியாதவொன்றாக இருக்கின்றது.

இந்தச் சம்பவத்தில் வரும் மாணவன் மற்றும் ஆசிரியை இருவரும் என் கண்முன் நிலைத்தடுமாறியவர்களாகவே இருந்தார்கள். எந்தவொரு ஆசிரியையும் தன்னிடம் கல்வி கற்கும் ஒரு மாணவனை மகனாகத் தான் நோக்குவார். இல்லையென்றால் தன் சொந்தப்பிள்ளையாக இதையும் தாண்டி வாழ்க்கைத் துணையாக வரும் நிலையை ஒருபோதும் கற்பனைக் கூட செய்துபார்ப்பதில்லை. என்றாலும் அந்த மாணவன் தனக்குக் கிடைக்கப் பெற்ற அந்த அன்பு நித்தமும் தன் கூடவே நிழலாகப் பயணித்தால் தன் வாழ்வும் சுபீட்சம் பெறுமென்றே எண்ணினான். அது தவிர வேறு எந்தவொன்றையும் அவன் யோசிக்க முற்படவில்லை. ஆனால் ஆசிரியை என்பவள் அப்படி யோசிக்கக் கூடியவளா? அவள் அனைத்தையும் பொறுப்பாக நின்று நிதானித்து யோசிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அத்தோடு அவனது கோிக்கைக்கு உடன் படும் நாளில் அவன் வேறொரு பெண்ணுக்குக் கணவனாக அவள் தன் சேய்க்குத் தகப்பனாக மாறிவிட்ட நிலையில் அவள் சந்திக்கும் அந்த மாணவன் தன் ஆசிரியையை நோக்கிச் சொல்லும் வார்த்தை டீச்சர் உங்கள் துஆவால் எனக்கொரு நல்லதோர் துணை கிடைக்கப் பெற்று இருக்கிறது.

இந்தக் கதையின் முடிவில்ஒரு இழப்பின் வேதனையும். ஓர் அடைவின் மகிழ்ச்சியும் அழகாய்ப் புரிந்தது.

நிலாத் தோழி

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கான ஒரு வாய்ப்புக் கிட்டியது. பரீட்சை நிலையம் ரத்மலான ‘Deaf School’ மாணவர்களை அழைத்துக் கொண்டு அவர்கள் இருந்த மண்டபத்தினை நோக்கிச் சென்றோம். அங்கு மாணவர்களை…

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கான ஒரு வாய்ப்புக் கிட்டியது. பரீட்சை நிலையம் ரத்மலான ‘Deaf School’ மாணவர்களை அழைத்துக் கொண்டு அவர்கள் இருந்த மண்டபத்தினை நோக்கிச் சென்றோம். அங்கு மாணவர்களை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *