Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அவனும் நானும் 

அவனும் நானும்

  • 7

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஒரு நிமிடம் உங்களுக்காய்!

Appreciation என்பது மனிதனாய் பிறந்த அனைவருக்கும் தேவையான ஒரு boost என்றே கூற வேண்டும். அதுவும் கணவன் மனைவிக்கிடையிலான உறவுப்பாலமதை புது மொட்டுக்களால் அழங்கரிப்பதென்னவோ Appreciation தான். பூக்கள் வாடி வாசமிழந்து, இனியும் இந்த பாலத்தை கடக்கத்தான் வேண்டுமா என்ற எண்ணம் தோன்றும் போது, அப்புது மொட்டுக்கள் தொடர்ந்தும் பயணிப்பதற்கான நம்பிக்கையை, புத்துணர்வை ஏற்படுத்தும்.

மனைவி! மனைவி ஒரு வேலையை, அது சமையல், துணி துவைத்தல், வீட்டை சுத்தம் செய்தல், அவளது கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்று தொடரும் அவள் செயற்பாடுகள். அவளது ஒவ்வொரு எட்டும் அது எதுவானாலும் அவற்றை Appreciate பண்ணுவது ஒரு கணவன் என்ற வகையில் அவனது கடமையாக அமைகிறது.

FB இல் யாரென்றே தெரியாத ஒரு பெண் உணவுப்படங்களை internet இல் download செய்து I cooked என்று ஒரு caption யும் இட்டு post பண்ணினால்,

Welldone!!
Awesome!!
உங்கள் கணவன் very lucky!!
எங்களுக்கும் தர மாட்டிங்களா?!

என்று comment பண்ணி அவர்களை புகழ்ந்து பாராட்ட தெரிந்த உங்களுக்கு, (தொப்பி சரியானவர்களுக்கு மட்டும்) யாரோ 3rd person செய்த விடயங்களை பாராட்டி வாழ்த்த தெரிந்த உங்களுக்கு, உங்கள் மனைவி உங்களுக்காய் சமைத்து தரும் உணவுக்கு ஏன் ஒரு பாராட்டு வழங்க முடிவதில்லை?! சாப்பாடு நன்றாக இருக்கிறதென்றாவது கூறலாமே ?

இப்படி நீங்கள் தவிர்க்கும் போது, உங்கள் மனைவி தொழில் புரியும் நிறுவனத்தில் அவர் கொண்டு செல்லும் உணவை உண்ட ஒரு நபர் பாராட்ட அது ஒரு அவருக்கு ஒரு புத்துணர்வை கொடுக்க, பின் இவ்வளவு காலம் என் கணவனுக்கு சமைத்து கொடுத்தோமே!! ஒரு வார்த்தை நல்லாருக்குனு சொல்லியிருப்பாரா! என்று ஆரம்பிக்கும் கணவன் மீதான வெறுப்பின் பாதை அது நீண்டுக்கொண்டே போகும். அது ஒரு முடிவிலி. எதற்கிந்த பிரச்சினை ஒரே ஒரு வார்த்தை தானே சொல்லிவிடுங்களேன்!

நல்லா இருக்கு!!
இன்று சாப்பாடு நல்லா இருக்கு !!

அவ்வளவு தான் ஆனால் அந்த இரண்டு வார்த்தை போதும் அவளுக்கு மீண்டும் மீண்டும் உங்கள் மீது புதிதாய் காதல் கொள்வாள். சமையலை இங்கு உதாரணம் காட்டினேன். அதே போல் தான் எல்லா விடயங்களும்,

அழகாய் இருக்கிறாய் Love u
You are the best
இந்த dress இல் you’re looking gorgeous
You can do it

இப்படி எத்தனை எத்தனையோ நீங்கள் சகஜ மாக social media வில் யாரென்றே தெரியாதவர்களுக்காய் பயன்படுத்தும் வார்த்தைகளை உங்கள் மனைவியிடத்தில் பயன்படுத்தலாமே?! உலகில் உள்ள அனைத்தையும் விட அனைவரையும் விட நீ தான் எனக்கு சிறந்தவள் என்று உங்கள் மனைவிக்கு நீங்கள் உணர்த்த இந்த Appreciation போதும்!!

அப்படி அவள் அதை உணர்வாள் எனில், உலகில் உள்ள அனைத்தையும் விட அனைவரையும் விட உங்கள் மனைவி உங்களை நேசிப்பாள்!! காதலித்துப்பழகுங்கள் உங்கள் மனைவியை!! இதே ஒரு கணவனுக்கு நாம் ஒப்பிட்டு நோக்கினால், இந்த உடையில் அழகாக இருக்கிறீர்கள் என்று office இல் வேலை செய்யும் ஒரு பெண் சொல்வதற்கு முன் மனைவி நீங்கள் சொல்வது உங்கள் உறவை நீடிக்க வழிவகுக்கும் உங்கள் மேல் காதல் கூட அதுவே ஏணியாக இருக்கும்!

You r the best
You can do it
I’m lucky to have u as my husband
You’re handsome love u

என்று உங்கள் கணவனுக்கு கூற ஏன் தயங்க வேண்டும் ? இவற்றை வேறு யாராவது கூறினால் கோபம் பொங்கும் அப்படித்தானே! So அவற்றை நீங்களே கூறி விடுங்கள் problem solve!! அதே சமயம் கணவன் வெட்கப்படுவதை பார்த்து ரசிக்கலாம்.

உலகில் உள்ள அனைத்தையும் விட அனைவரையும் விட நீ தான் எனக்கு சிறந்தவன் என்று உங்கள் கணவனுக்கு நீங்கள் உணர்த்த இந்த Appreciation போதும்! அப்படி அவன் அதை உணர்வான் எனில், உலகில் உள்ள அனைத்தையும் விட அனைவரையும் விட உங்கள் கணவன் உங்களை நேசிப்பான். காதலித்துப்பழகுங்கள் உங்கள் கணவனை!

நான் இங்கு கூறியது பொதுவான விடங்கள். இது தவிர உங்கள் கணவனுக்கு, உங்கள் மனைவிக்கு கூறப்பட வேண்டிய specific Appreciations இருக்கும். அவற்றை கட்டாயம் வார்த்தைகளால் அவர்களுக்கு கூறுங்கள். இல்லர வாழ்க்கை சம்பந்தமான விடங்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள். கலந்துரையாடுங்கள். பாராட்டுங்கள்.

பாராட்டென்பதை யாரும் கேட்டு வாங்க விரும்பமாட்டார்கள். ஆனால் யாராவது நம்மை பாராட்ட மாட்டார்களா என்று ஒவ்வொரு இதயமும் ஏங்குவதை கொஞ்சம் செவி தாழ்த்தி கேளுங்கள்.

I love my wife /husband,
she /he is the best

என்று post போடுவதோடு மட்டும் இருக்காமல் அவர்கள் கண்களை பார்த்து அவற்றை ஒப்புவியுங்கள். புதிதாய் ஒவ்வொரு நாளையும் அனுபவிப்பீர்கள். திரும்ப திரும்ப கணவன், மணைவி எனும் உறவுப்பாலமதில் மொட்டுக்கள் பூத்துக்கொண்டே இருக்கும். மணவாழ்வும் மனம் வீசிக்கொண்டே இருக்கும்.

Appreciate your spouse!!

சப்னா செய்ன்

ஒரு நிமிடம் உங்களுக்காய்! Appreciation என்பது மனிதனாய் பிறந்த அனைவருக்கும் தேவையான ஒரு boost என்றே கூற வேண்டும். அதுவும் கணவன் மனைவிக்கிடையிலான உறவுப்பாலமதை புது மொட்டுக்களால் அழங்கரிப்பதென்னவோ Appreciation தான். பூக்கள் வாடி…

ஒரு நிமிடம் உங்களுக்காய்! Appreciation என்பது மனிதனாய் பிறந்த அனைவருக்கும் தேவையான ஒரு boost என்றே கூற வேண்டும். அதுவும் கணவன் மனைவிக்கிடையிலான உறவுப்பாலமதை புது மொட்டுக்களால் அழங்கரிப்பதென்னவோ Appreciation தான். பூக்கள் வாடி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *