Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
உர இறக்குமதி தடை நீக்கம் - அதிவிசேட வர்த்தமானி Youth Ceylon

உர இறக்குமதி தடை நீக்கம் – அதிவிசேட வர்த்தமானி

  • 8

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

எதிர்வரும் பெரும்போக பயிர் செய்கைக்காக யூரியா உள்ளிட்ட சில வகையான இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று வெளியிட்டார்.

1969 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சரினால் இது தொடர்பாக 2238/ 45 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆந் திகதி சனிக்கிழமை வௌியிடப்பட்டுள்ளது.

உரிமம் பெற்றவர்கள் யூரியா, கால்சியம் கார்பனேட் அல்லது இதர கனிம் அற்ற உரங்கள், சூப்பர் பொஸ்பேட் மற்றும் நைட்ரஜன், பொட்டாசியம் மற்றும் பொஸ்பேட் ஆகிய இரண்டு அல்லது மூன்று கூறுகளைக் கொண்ட உரங்கள் உள்ளிட்ட நைட்ரேட் கலவைகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

திருத்தப்பட்ட, விஷேட இறக்குமதி அனுமதிப் பத்திர ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்ட 2017 ஆம் ஆண்டு நவெம்பர் மாதம் 09 ஆம் திகதிய 2044/40 ஆம் இலக்கம் கொண்ட அதிவிஷேட வர்த்தமானிப் பத்திரிகையின் உப அட்டவணை IV இல் குறிப்பிடப்பட்ட கீழ் காணப்படும் பொருட்கள், குறிப்பிடப்பட்ட உப அட்டவணை IV இல் இருந்து நீக்கப்படுவதோடு மேற்குறிப்பிட்ட வர்த்தமானிப் பத்திரிகையின் உப அட்டவணை I இல் உள்ளடக்கப்படுகின்றது.

[pdfjs-viewer url=”https%3A%2F%2Fyouthceylon.com%2Fwp-content%2Fuploads%2F2021%2F08%2F2238-45_T.pdf” viewer_width=100% viewer_height=800px fullscreen=true download=true print=true]

எதிர்வரும் பெரும்போக பயிர் செய்கைக்காக யூரியா உள்ளிட்ட சில வகையான இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று வெளியிட்டார். 1969 ஆம் ஆண்டின் முதலாம்…

எதிர்வரும் பெரும்போக பயிர் செய்கைக்காக யூரியா உள்ளிட்ட சில வகையான இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று வெளியிட்டார். 1969 ஆம் ஆண்டின் முதலாம்…