Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
103, 704 சிறுவர்கள் ஆபத்தான தொழில்களில் - Youth Ceylon

103, 704 சிறுவர்கள் ஆபத்தான தொழில்களில்

  • 8

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

103, 704 சிறுவர்கள் ஆபத்தான தொழில்களில் ஈடுபடுவதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின்  இன்று (04.08.2021) தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்), வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) , இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு  ஆகிய சட்டமூலங்கள் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

ரிஷாட்டின் வீட்டில் உயிரிழந்த சிறுமி தொடர்பில் அரசியல் செய்து வருகிறார்கள். அதில் அனைவரும் மலையக சிறுவர்கள் மாத்திரம்தான் தொழிலில் ஈடுபடுவதாக கூறுகின்றனர். ஆனால் மலையக பிரதி நிதியாக இதனை என்னால் ஏற்க முடியாது. ஏனெனில் 103,704 சிறுவர்களும் மலையகத்தை சேர்ந்தவர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

குறித்த சிறுவர்கள் நாடளாவிய ரீதியில் இருந்து வருகை தந்துள்ளனர். மேலும் வறுமைக்கு இனம், மதம், ஜாதி எல்லாம் தெரியாது. வறுமையில் உள்ளோர் தொழிலுக்கு செல்வார்கள் அதுமாத்திரமன்றி மலையக மக்கள் தரக்குறைவான வேலைகளை செய்யவில்லை. அது வீட்டு வேலையாக இருந்தலும், சுய தொழிலாக இருந்தாலும் அவர்கள் சொந்தக் காலில் நின்று குழந்தைகளை படிக்க வைக்கின்றனர்.

ஆனால் இதனை காரணமாக வைத்து மலையக மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் இருக்கிறாங்க, கஷ்டத்தில் இருக்காங்க என்று நாடகம் ஆடிட்டு இருக்காங்க. எங்களுக்கு யாருடைய பரிதாபமும் தேவையில்லை என்று ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்

நாம நாட்டுக்காக உழைத்ததற்கு சேர வேண்டிய பாக்கி, அங்கீகாரம், மரியாதை, கௌரவம் கிடைத்தாலே போதும். மலையக மக்கள் நிறைய இடங்களில் பணியாற்றியும் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றும் நாட்டுக்கு பெருமை சேர்த்தியுள்ளனர். ஆனால் அந்தப் பெருமைகளை பேசாமல் மலையக மக்கள் கஷ்டத்தில் உள்ளதாக கூறிட்டு இருக்கிறாங்க. இதற்கான காரணம் தொழிற்சங்கமும், அரசியல்வாதியும் என்று சிலர் கூறலாம். ஆனால் இங்கு ஒரு விடயத்தை நினைவுபடுத்த வேண்டும். மலையக மக்களுக்கு முப்பது வருடமாக பிரஜா உரிமை கிடையாது. இதனால் நாம் முப்பது வருடம் பின்தங்கி இருக்கின்றோம்.

மேலும் மனிதாபிமானம் அற்ற விதத்தில் ரிஷாத் வீட்டு பணிப்பெண் விடயத்தில் எதிர்கட்சி அரசியல் செய்திட்டு இருக்குது. ரிஷாத் பதியுந்தீன் வீட்டில் பணியாற்றி இறந்த யுவதி தொடர்பாக இதுவரை நான் எந்த அறிக்கையும் விடவில்லை. ஏனெனில், குறித்த குடும்பத்தின் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும். குறித்த பெண்ணுக்கு இரண்டு சகோதரி உள்ளனர். இது தொடர்பாகவும் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் குறித்த சம்பவம் தொடர்பில் நானும் நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டுதான் உள்ளோம். ஆனால் இதுவரை பகிரங்கமாக பேசவில்லை ஆனால் அது தொடர்பாக இன்று உரையாட வேண்டி உள்ளது.

குறித்த சம்பலம் தொடர்பில் ஒரு அறிக்கை தரப்பட்டுள்ளது. அதில் குறித்த பெண்ணின் வயது 18 என்று நினைத்தாக கூறப்பட்டுள்ளது. 14 வயது பெண்ணை 18 வயது என தவறாக கணிப்பிட முடியுமா? என்று ஐீவன் தொன்டமான் கேள்வி எழுப்பினார். மேலும் 18 வயதோ, 14 வயதோ 40 வயதோ யாருக்கு தவறு நடந்தாலும், தவறு தவறுதான் என்று இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

8 வருடங்களாக இதுபோன்ற சம்பவங்கள் ரிஷாட் வீட்டில் நடந்துள்ளதாக வாக்குமூலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரிஷாட்தான் இதற்கு காரணமென நான் கூறவில்லை. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவிட்டமைக்கு அவரும் ஒரு காரணம் என்றார்.

பாதிக்கப்பட்ட சிறுமி ரிஷாட் வீட்டில் எழுதியதாகக் கூறுகிறார்கள். இதெல்லாம் பொய்யென தெரிவித்த ஜீவன் தொண்டமான், இதுபோன்ற விடயங்களை சும்மா வேடிக்கைப் பார்க்கப்போவதில்லை என்றார்.

இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். கடுமையான தண்டனை வழங்குவதன் ஊடாகவே, இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடப்பதை தவிர்க்க முடியும். மேலும் 18 வயதுக்குக் குறைவான சிறுவர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களையும் தண்டிக்க வேண்டும் என்றார்.

வீட்டு வேலைக்கு செல்வது சம்பந்தமாக 100 ஆண்டுகள் பழமையான இரண்டு சட்டங்கள் உள்ளன. எனவே அவற்றை தற்போது திருத்த வேண்டும்.

அதுமாத்திரமன்றி நாம் தற்போது பணிக்குழுவொன்றை அமைக்கவுள்ளோம். அக்குழுவில் கிராம சேவகர், அதிபர்,  பொலிஸ்மற்றும் குற்ற ஆணையாளர். (Police and Crime Commissioners/  PCC Officer), சமூர்ந்தி உத்தியோகத்தகர், தோட்ட நல அதிகாரி (Welfare Officer of estate) ஆகியோர் உள்ளடங்குவர்.

இவர்களை வைத்து குறித்த பிரதேச தரவுகளை பெற்று யாராவது தவறுகள் செய்து இனங்கண்டால் அவர் மீது நடவடிக்கை எடுப்போம். அது மாத்திரமன்றி தொழில் பயிற்சி நிலையங்களை பதுளை, கண்டியில் கிராமப்புறங்களில் திறக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

மேலும் 18 வயது வரையில் இலவசக் கல்வியை கட்டாயமாக்க வேண்டுமெனவும் இதன்போது கல்வி அமைச்சரிடம் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை ஒன்றையும் விடுத்தார்.

103, 704 சிறுவர்கள் ஆபத்தான தொழில்களில் ஈடுபடுவதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். பாராளுமன்றத்தின்  இன்று (04.08.2021) தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்), வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) , இலங்கைப் பிணையங்கள்…

103, 704 சிறுவர்கள் ஆபத்தான தொழில்களில் ஈடுபடுவதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். பாராளுமன்றத்தின்  இன்று (04.08.2021) தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்), வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) , இலங்கைப் பிணையங்கள்…