Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
உறவே நில் உன்னுடன் ஒரு நிமிடம் 

உறவே நில் உன்னுடன் ஒரு நிமிடம்

  • 56

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

உறவு என்றவுடன் எமக்கு எமது உறவுகள் அனைத்துமே நினைவுகளில் நீந்தும். ஆனால் எத்தனை உறவுகள் உண்மையான உறவுகளாக உள்ளது என்பதுதான் எல்லோருடைய கேள்விகளும்…?! அதற்கான விடைகாண முயன்றால் பல உறவுகள் விடைபெற்றுவிடும். சில கேள்விகளுக்கு பதில்தான் முடிவாகும் . சில கேள்விகளுக்கு அது கேள்வியாக இருப்பது மாத்திரம்தான் சிறந்த பதிலாகும்.

மனிதம் போற்றும் உறவுகள் என்றும் மரணிப்பதில்லை. மனிதனை மனிதனாக மாத்திரம் பாருங்கள் பட்டம் , பதவி , செல்வம் எனும் நிறக்கண்ணாடிகள் அணிந்து பாரக்காதீர்கள். எதையும் உறவுகளிடம் எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்புக்கள்தான் அனைத்தையும் சீர்குலைப்பது. எதிர்பாராத உறவுகளுக்கே ஆயுள் அதிகம் எதிர்பார்கையுடனானவை எதிர்பார்ப்புகள் நிறைவேறாவிடின். அந்த உறவுகள் உடைத்த கண்னாடிகளாகிவிடுகின்றன. மீண்டும் பழைய நிலைக்கு மாற்றவே முடியாது. உடையும் முன்னர் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

உறவுகள் ஒவ்வொன்றும் அழானவை, உணர்வுபூர்வமானவை அதை ரசித்து ஏற்றக்கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் புதிதாய் அறிமுகமானவர் போல் மனதி்ல் நினைத்துக்கொள்ளுங்கள். அந்த உறவு என்றும் புதுமையுடனே இருக்கும். செய்த நலவை மாத்திரம் அடிக்கடி நினைதாதுப் பாருங்கள். அது அழகானது , அருமையானது, அற்புதமானது , சுவையானது , சுகமானது!

உறவில் தாழ்ந்தது உயர்ந்தது கிடையாது. அதை தாழ்த்தவோ உயர்த்தவோ முடியாது. யாரோ சிலரின் தூண்டுதல்களும், சதிவலைகளும் கூட உங்கள் உறவுப்பாலத்தில் விரிசலை உண்டாக்காயிருக்கலாம். அவைகளைத் தாண்டி உறவைப் பேணுங்கள் துண்டித்து தண்டித்துவிடாதீர்கள்.

உங்கள் உறவு
எம்.எஸ்.எம்.ஹில்மி ஸலாஹில்மி

உறவு என்றவுடன் எமக்கு எமது உறவுகள் அனைத்துமே நினைவுகளில் நீந்தும். ஆனால் எத்தனை உறவுகள் உண்மையான உறவுகளாக உள்ளது என்பதுதான் எல்லோருடைய கேள்விகளும்…?! அதற்கான விடைகாண முயன்றால் பல உறவுகள் விடைபெற்றுவிடும். சில கேள்விகளுக்கு…

உறவு என்றவுடன் எமக்கு எமது உறவுகள் அனைத்துமே நினைவுகளில் நீந்தும். ஆனால் எத்தனை உறவுகள் உண்மையான உறவுகளாக உள்ளது என்பதுதான் எல்லோருடைய கேள்விகளும்…?! அதற்கான விடைகாண முயன்றால் பல உறவுகள் விடைபெற்றுவிடும். சில கேள்விகளுக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *