Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பெண் எனும் பொக்கிஷம் 

பெண் எனும் பொக்கிஷம்

  • 98

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இறைவனின் படைப்பில் அதிசயமான படைப்பு பெண். பெண்மைக்கு மென்மையை சேர்த்தே இறைவன் படைத்திருக்கிறான். உடலால் மட்டுமல்ல மனதாலும் அவள் மென்மையானவள்.

ஆண் பெறும் அனைத்து உரிமைகளும் பெண்ணுக்கும் உண்டு. எந்தவிதத்திலும் பெண் ஆணில் குறைந்தவளில்லை. பெண்ணின் அடைக்கலம் அடுப்பங்கரை மட்டுமல்ல. அடுப்பங்கரையைத் தாண்டி இன்று ஆட்சிப்பீடம் வரை இனம், மதம் கடந்து தொடர்கிறது பெண்ணின் வலிமை. இத்தகைய சாதனைப் பெண்களால் உலகம் பயன்பெற்றுக்கொண்டிருக்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.

பெற்றோருக்கு அன்பு மகளாக, தன் உடன்பிறப்புக்களுக்கு சிறந்த சகோதரியாக, கணவனுக்கு சிறந்த துணைவியாக, தன் மாமனார் மாமியாருக்கு நல்ல மருமகளாக, தன் குழந்தைச் செல்வங்களுக்கு சிறந்த தாயாக… என பல நிலைகளிலும் பெண் வாழ்ந்து கொண்டிருக்கின்றாள்.
அவளது தியாகங்கள் எண்ணிலடங்காது. பொறுமையை அவள் மனதில் விதைத்திருக்கின்றாள். அது தான் அவளை இயக்குகின்ற, அவளது கடமைமைகளை செய்யத் தூண்டுகின்ற பெரும் உந்துசக்தி.

பெண்ணின் முதற்கடமை அவளது வீட்டிலிருந்து ஆரம்பிக்கின்றது. திருமணத்துக்கு முன்னால் சுதந்திரமாக, சுட்டியாக வீட்டில் சுற்றித் திரிந்தவள் திருமணத்துக்குப் பின் தனக்கு அறிமுகமே இல்லாத வீட்டுக்கு மருமகளாக, மனைவியாகச் செல்கின்றாள். அங்கு அவள் தன் கணவனுக்கு சிறந்த துணைவியாக தன் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றாள். கணவனின் கடமையை முதற்கடமையாகக் கொள்கின்றாள். கணவன் இல்லாத நேரத்தில் தன் கற்பையும் தன் கணவனின் வீட்டையும் பாதுகாக்கின்றாள். தன் குழந்தைகளை கவனமாக, பொறுப்பாக, நல்லது தீயதைச் சொல்லி அன்பாக வளர்க்கின்றாள். குழந்தைகளுக்கும் கணவனுக்கும் சுவையான உணவுகளை சமைத்துப் பறிமாறுகின்றாள். தன் கணவனுக்கு நல்ல அறிவுரைகளை வழங்குகின்றாள். கணவனின் துன்பத்தில் பங்கு கொள்கின்றாள்.

மழையோ வெயிலோ சுகவீன தினமன்றோ அவளுக்கு விடுமுறை இல்லை. காலை எழுந்தது முதல் இரவில் தூங்கச் செல்லும் வரை பம்பரமாகச் சுழன்று தன் கடமைகளை மகிழ்வுடன் ஏற்று இனிதே செய்கின்றாள் பெண்.

தன் வீட்டுக் கடமைக்கு அப்பால் இன்று சமூக நலனில் அதிக அக்கறை கொண்ட சிங்கப் பெண்களும் இல்லாமல் இல்லை. தான் கற்ற கல்வியைக் கொண்டு சமூகம் பயன்பெற வேண்டும் என்ற தூய நோக்கத்தோடு சமூகப்பணிகளில் பெண்களின் பங்கு இன்று அதிகரித்து வருவதனைக் காணலாம்.

தன் எழுத்துக்களால், குரலால், உழைப்பால், திறமையால் எழுச்சி செய்கிறாள் பெண். அவளது எழுச்சி மூலம் சமூகத்தை எழுச்சி அடையச் செய்வதும் வீழ்ச்சியடையச் செய்வதும் சமூகம் அவளுக்குக் கொடுக்கின்ற கண்ணியம், உரிமை, பாதுகாப்பு, மரியாதை என்பவற்றிலேயே தங்கியிருக்கின்றது.

ஒரு பெண்ணை முதலில் மனிதனாக மதிக்க வேண்டும். ஆண்களுக்குப் போலவே அவளுக்கும் ஆன்மா இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளது தந்தை, சகோதரன், கணவன் என அவளது நெருங்கிய ஆண் உறவுகள் எப்போதும் பாதுகாப்பாளர்களாக இருக்க வேண்டும். இவர்கள் பாதுகாப்புக் கொடுக்கத் தவறுகின்ற இடத்தில் பெண்கள் ஏனைய ஆகளால் பல்வேறு வகையில் பாதிக்கப்படுவார்கள் என்பது நிதர்சன உண்மை.

இவர்கள் தவிர அவளது குடும்ப ஆண்கள், வேலை செய்யும் இடத்தில் உள்ள சக ஆண் ஊழியர்கள், சாரதிகள் என ஏனைய ஆண்கள் அனைவரும் அனைத்துப் பெண்களையும் தன் சகோதரியாக நினைக்கும் போது அவளுக்கு உடல் உள ரீதியாக எந்தத் தொந்தரவையும் அவர்கள்கொடுக்கமாட்டார்கள்.

ஒவ்வொரு ஆண்களும் பெண்களை பாதுகாக்க முன்வருவார்களானால், முழு சமூகமுமே பெண்ணின் பாதுகாப்பு அரணாக மாறும். பெண்கள் பாதுகாக்கப்படும் சமூகம் எப்போதும் தலைநிமிர்ந்து வாழும். ஏனெனில், ஆவதும் பெண்ணாலே! அழிவதும் பெண்ணாலே! எனும் பழமொழி, நல்லவை ஆவதும் பெண்ணாலே! தீயவை அழிவதும் பெண்ணாலே எனும் கருத்தையே குறித்து நிற்கின்றது.

பெண்ணே! நீ எழுந்துவா  நம் சமூகத்தில் நம்மை பற்றி புதைந்து கிடக்கும் மடமைக் குணங்கள், அடக்கு முறைகள், தீய எண்ணங்கள் என்பவற்றை முழுமையாக ஒழித்து, நாமும் ஒரு சுதந்திர மனிதனாக வாழ வேண்டுமாயின் இதை நீ மனதில் புதைத்துக்கொள்! நீ உன் கடமையில், நிலை தவறாதே! கற்ற கல்வியில் கலப்படம் செய்யாதே! நீ பெண்ணாக இரு உன் காலடியில் உனக்குரிய பிரதிபலன்கள் வந்தடையும். பெண்களே எழுந்து வாருங்கள்! தூங்கிக்கிடக்கும் இவ்வையகத்தை பெண்கள் நாம் ஒன்றிணைந்து உயிர்பிப்பதற்கு!

Sasna Baanu Nawas

இறைவனின் படைப்பில் அதிசயமான படைப்பு பெண். பெண்மைக்கு மென்மையை சேர்த்தே இறைவன் படைத்திருக்கிறான். உடலால் மட்டுமல்ல மனதாலும் அவள் மென்மையானவள். ஆண் பெறும் அனைத்து உரிமைகளும் பெண்ணுக்கும் உண்டு. எந்தவிதத்திலும் பெண் ஆணில் குறைந்தவளில்லை.…

இறைவனின் படைப்பில் அதிசயமான படைப்பு பெண். பெண்மைக்கு மென்மையை சேர்த்தே இறைவன் படைத்திருக்கிறான். உடலால் மட்டுமல்ல மனதாலும் அவள் மென்மையானவள். ஆண் பெறும் அனைத்து உரிமைகளும் பெண்ணுக்கும் உண்டு. எந்தவிதத்திலும் பெண் ஆணில் குறைந்தவளில்லை.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *