Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
உலமாக்கள் உழைத்து உண்பவர்கள் பிறரிடம் தேவை காணாதவர்கள்! 

உலமாக்கள் உழைத்து உண்பவர்கள் பிறரிடம் தேவை காணாதவர்கள்!

  • 24

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இஸ்லாமிய அறிஞர் அல்லாமா இப்னுல் ஜவ்சி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறியதாவது: மக்களை விட்டும் தேவையற்றிருப்பதற்காக, செல்வத்தை சேகரிப்பதை விட, அறிஞர்களுக்கு பயன் தரும் விடயம் வேறு எதுவும் இல்லை. ஏனெனில், அச்செல்வம் கல்வியுடன் சேரும்போது பூரணத்துவத்தை அடைந்துகொள்ள முடியும்.

பெரும்பான்மையான அறிஞர்களுக்கு, செல்வத்தைச் சம்பாதிப்பதற்குத் தடையாக, கல்வி அமைந்துவிட்டது. இதனால், அவர்களுக்கு அத்தியாவசியமான தேவைகள் ஏற்பட்டு, பொறுமையும் குன்றிவிடவே அவர்களுக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் விடயங்களில் ஈடுபட்டனர். அதற்கு நியாயங்களும் கூறிக்கொண்டனர். தனது செயல்களுக்கு நியாயம் கற்பிக்காமல், அதை விட்டுவிடுவதே அவர்களுக்கு சாலச்சிறந்தது. தமது செயலுக்கு நியாயம் கூறும் இவர்கள், அடைந்துகொண்ட உலக விடயங்களை விட, அவர்களின் உள்ளங்களிலிருந்தும் மார்க்க பரிபூரணத் தன்மையிலிருந்தும் இழந்தவையே அதிகமாகும்.

“சூபியாக்கள்” மற்றும், உலமாக்களில் ஒரு கூட்டம் ஆட்சியாளர்களிடமுள்ளவற்றை அடைந்துகொள்வதற்காக அவர்களை மொய்க்கின்றனர். அதனால் அவர்களில் சிலர் விட்டுக்கொடுத்தும் முகஸ்துதியுடனும் செயற்படுகின்றனர். இன்னும் சிலர் தகாத வார்த்தைகளினால் அவர்களைப் புகழ்கின்றனர். வேறு சிலர் தவறுகளைக் கண்டும், காணாத படி மௌனம் சாதிப்பது போன்ற பல்வேறு நடிப்புக்களில் ஈடுபடுகின்றனர். இதற்குக் காரணம் வறுமையே.

அநியாயக்கார ஆட்சியாளர்களிடமிருந்து விலகியிருப்பதன் மூலமே, பூரண கண்ணியம் கிடைப்பதோடு, முகஸ்துதியிலிருந்து விலகியிருக்கவும் முடியும் என்பதை இதன் மூலம் நாம் அறிந்துகொள்கின்றோம். இவ்வாறு ஆட்சியாளர்களிடம் மண்டியிடாத நிலை இரு தரப்பினர்களைத் தவிர வேறு யாருக்கும் இருந்ததை நம்மால் பார்க்க முடியவில்லை.

ஒரு சாரார்: செல்வ வளம் கொண்ட அறிஞர்கள்

உதாரணமாக
1. “ஸஈத் இப்னு முஸய்யப்” (ரஹ்). அவர் ஒரு எண்ணெய் வியாபாரத்தில் ஈடுபட்டார்.
2. வணிகப் பொருட்களை வைத்திருந்த “ஸுப்யானுஸ்ஸவ்ரி” (ரஹ்),
3. “இப்னுல் முபாரக்” (ரஹ்) அவர்கள்.

மற்றுமொரு சாரார்: கடும் பொறுமையாளராகவும் போதாவிட்டாலும் இருப்பதைப் பொருந்திக் கொள்ளும் பிஷ்ருல் ஹாபீ (ரஹ்), அஹ்மத் இப்னு ஹன்பல் ( ரஹ்) போன்றோர்கள்.

எப்போது, ஒரு மனிதன் இவ்விருவரின் பொறுமையையும் முதல் சாராருடைய செல்வச் செழிப்பையும் பெறவில்லையோ அவர் சோதனைகளுக்கும், ஆபத்துகளுக்கும், ஆளாவதற்கே அதிக சாத்தியமுள்ளது. சிலவேளை அவரது மார்க்கமே பறிபோய்விடும்.

எனவே, கல்வியைத் தேடுபவனே! மக்களை விட்டும் தேவையற்றிருப்பதற்காக, பணத்தை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடுவாயாக! ஏனெனில், உனது மார்க்கத்தை பாதுகாக்க அது உதவியாக இருக்கும்.

பெரும்பாலும் உலக மோகத்தின் காரணமாகவே, மார்க்கப் பற்றிலும், உலகப் பற்றின்மையிலும், பயபக்தியிலும் நயவஞ்சகன் உண்டாகின்றான் என்பதையும் அதன் மூலமே ஒரு அறிஞருக்கு ஆபத்து ஏற்படுகின்றது என்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். பெரும்பாலும் இவற்றிற்கெல்லாம் காரணம் ஏழ்மையே. போதுமான வசதியுள்ளவர் ஆட்சியாளர்களிடம் செல்வதன் மூலம் மேலதிகச் சொத்தை தேடினால் அவர் பேராசை பிடித்தவர் மட்டுமின்றி அறிஞர்கள் வட்டத்தை விட்டும் வெளியேறியவராவார். இவ்வாறான நிலைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றோம். (நூல்: ஸய்யிதுல் காதிர்)

يقول ابنُ الجوزيِّ ـ رحمه الله ـ في «منفعة المال» ما نصُّه:

«ليس في الدنيا أَنْفَعُ للعلماء مِنْ جَمْعِ المال للاستغناء عن الناس؛ فإنه إذا ضُمَّ إلى العلم حِيزَ الكمالُ، وإنَّ جُمهورَ العلماء شَغَلَهُمُ العلمُ عن الكسب فاحتاجوا إلى ما لا بُدَّ منه، وقَلَّ الصبرُ؛ فدخلوا مَداخِلَ شَانَتْهُم وإِنْ تَأوَّلوا فيها، إلَّا أَنَّ غَيْرَها كان أَحْسَنَ لهم… وهؤلاء ـ وإِنْ كانوا سَلَكوا طريقًا مِنَ التأويل ـ فإنهم فَقَدُوا مِنْ قلوبهم وكمالِ دِينهم أَكْثَرَ ممَّا نالوا مِنَ الدنيا، ولقد رأينا جماعةً مِنَ المتصوِّفة والعلماءِ يَغْشَوْنَ الوُلاةَ لأجلِ نَيْلِ ما في أيديهم: فمنهم مَنْ يُداهِنُ ويُرائي، ومنهم مَنْ يمدح بما لا يجوز، ومنهم مَنْ يسكت عن مُنْكَراتٍ، إلى غيرِ ذلك مِنَ المُداهَنات، وسببُه الفَقْرُ؛ فعَلِمْنَا أنَّ كمال العِزِّ وبُعْدَ الرِّياء إنما يكون في البُعد عن العُمَّال الظَّلَمَة، ولم نَرَ مَنْ صَحَّ له هذا إلَّا في أحَدِ رجلين:

ـ إِمَّا مَنْ كان له مالٌ كسعيدِ بنِ المسيِّب: كان يَتَّجِرُ في الزيت وغيرِه، وسفيانَ الثوريِّ: كانَتْ له بضائعُ، وابنِ المبارَك.

ـ وإمَّا مَنْ كان شديدَ الصبر، قَنوعًا بما رُزِقَ وإِنْ لم يَكْفِه: كبِشْرٍ الحافي، وأحمدَ بنِ حنبلٍ.

ومتى لم يَجِدِ الإنسانُ كصبرِ هذين ولا كمالِ أولئك فالظاهرُ تَقلُّبُه في المِحَن والآفات، وربَّما تَلِفَ دِينُه.

فعليك يا طالِبَ العلمِ بالاجتهاد في جمعِ المال للغِنى عن الناس؛ فإنه يجمع لك دِينَك؛ فما رأَيْنا في الأَغْلَبِ مُنافِقًا في التديُّن والتزهُّد والتخشُّع، ولا آفةً طرأَتْ على عالمٍ إلَّا بحُبِّ الدنيا، وغالبُ ذلك الفقرُ؛ فإِنْ كان له by مالٌ يكفيه ثمَّ يطلب بتلك المُخالَطةِ الزيادةَ فذلك معدودٌ في أهل الشَّرَهِ، خارجٌ عن حيِّز العلماء؛ نعوذ بالله مِنْ تلك الأحوال.

(صيد الخاطر)

ஐய்யூப் அப்துல் வாஜித்
இன்ஆமீ

 

இஸ்லாமிய அறிஞர் அல்லாமா இப்னுல் ஜவ்சி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறியதாவது: மக்களை விட்டும் தேவையற்றிருப்பதற்காக, செல்வத்தை சேகரிப்பதை விட, அறிஞர்களுக்கு பயன் தரும் விடயம் வேறு எதுவும் இல்லை. ஏனெனில், அச்செல்வம் கல்வியுடன் சேரும்போது…

இஸ்லாமிய அறிஞர் அல்லாமா இப்னுல் ஜவ்சி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறியதாவது: மக்களை விட்டும் தேவையற்றிருப்பதற்காக, செல்வத்தை சேகரிப்பதை விட, அறிஞர்களுக்கு பயன் தரும் விடயம் வேறு எதுவும் இல்லை. ஏனெனில், அச்செல்வம் கல்வியுடன் சேரும்போது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *