Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
உளத்தூய்மையின் உச்சம் 

உளத்தூய்மையின் உச்சம்

  • 21

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

முஸ்லிம்கள் மஸ்லமா இப்னு அப்தில் மலிக் அவர்களின் தலைமையில் ரோமாபுரியில் மிகப்பெரும் கோட்டையொன்றை முற்றுகை இட்டிருந்தனர்.

ஆனால் கோட்டையின் சுவர்கள் உயரமாக இருந்ததாலும் அதனது அனைத்து வாயில்களும் மூடப்பட்டிருந்ததாலும் முஸ்லிம்களால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. இது ரோமானியர்களுக்கு சார்பாக அமைந்ததுடன் அவர்கள் கோட்டையின் மேலிருந்து தாக்குதலையும் நடத்தினர். முஸ்லிம்களின் சோர்வும் களைப்பும் அதிகரிக்க ஆரம்பித்தது.

ஒருநாள் இரவு முஸ்லிம் படை வீரர் ஒருவருக்கு மிகப்பெரும் யோசனை ஒன்று தோன்றியது. அதாவது யாரும் அறியாத வகையில் கோட்டை வாயில் வரை ரகசியமாக வந்து அதில் துளையிட்டு இரவோடு இரவாக ஓட்டை போட்டு வெற்றியும் கண்டார். பின் யாருக்கும் தெரிவிக்காமல் அங்கிருந்து திரும்பி விட்டார்.

அடுத்த நாள் வழமை போன்று முஸ்லிம்கள் போருக்கு தயாராகினர். குறித்த அந்த வீரன் ஓட்டையினூடாக நுழைந்து கோட்டையின் வாயிலை திறந்து விட்டார். முஸ்லிம்கள் முந்திக்கொண்டு கோட்டையின் சுவர்களில் ஏறினர்.

ஒரு சில விநாடிகளில் ரோமானியர்கள் கோட்டையின் உள் வளாகத்திலிருந்தும் அதன் சுவர்களிலிருந்தும் முஸ்லிம்களின் தக்பீர் முழக்கத்தை செவிமடுத்தனர். அத்தோடு முஸ்லிம்களின் வெற்றியும் உறுதியானது.

போருக்குப் பின்னால் தளபதி மஸ்லமா அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி உயர்ந்த குரலில்: “கோட்டை வாயிலில் ஓட்டையிட்டவர் யார். அவர் இங்கு வரட்டும்; அவருக்கு நாம் சன்மானம் வழங்கப் போகின்றோம்” என்றார்.

ஆனால் யாரும் வரவில்லை. மீண்டும் அழைத்தார். ஆனால் யாரும் வரவில்லை. அடுத்த நாளும் அழைத்தார். ஆனால் யாரும் வரவில்லை.

மூன்றாம் நாள் தளபதி அவர்கள்: “ஓட்டையிட்டவர் இரவிலோ பகலிலோ எந்த நேரமானாலும் அவசியம் என்னிடம் வரவேண்டும் என்று சத்தியமிட்டுச் சொல்கின்றேன் ” என்றார்.

இரவாகியது. தளபதி தன் கூடாரத்தில் இருக்கும் நேரத்தில் முகமூடி அணிந்த நபரொருவர் வருகை தந்தார். அப்போது தளபதி: “நீர்தான் ஓட்டைக்குச் சொந்தக்காரனா” என்று கேட்டார்.

அதற்கு அந்த மனிதர்: “ஓட்டைக்குச் சொந்தக்காரர் தன் தளபதியின் சத்தியத்தை நிறைவேற்ற விரும்புகின்றார். ஆனால் மூன்று நிபந்தனைகளுடன்.” என்றார்.

அதற்கு தளபதி: “அவை என்ன”

அந்த மனிதர்:

  1. அவரின் பெயரை கேட்கக் கூடாது
  2. அவரின் முகத்திரையை நீக்கக்கூடாது
  3. அவருக்கு எந்த சன்மானமும் வழங்க ஏவக்கூடாது.

அதற்கு தளபதி: “சரி அவருக்காக அவரின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன” என்றார்.

அப்போது அந்த மனிதர்: “நான்தான் ஓட்டைக்குச் சொந்தக்காரன்” என்று கூறிவிட்டு வேகமாக திரும்பிச் சென்று படைகளின் கூடாரங்களுக்கிடையில் மறைந்தார்.

தளபதி மஸ்லமா அவர்கள் கண்கள் நிறையக் கண்ணீருடன் நின்றுகொண்டு கீழ்வரும் அல்குர்ஆன் வசனத்தை ஓதுகின்றார்:

“அல்லாஹ்விடம் எதைப் பற்றி உறுதிமொழி எடுத்தார்களோ அதை உண்மைப்படுத்தியோரும் நம்பிக்கை கொண்டோரில் உள்ளனர். தமது இலட்சியத்தை அடைந்தவரும் அவர்களில் உள்ளனர். (அதை) எதிர்பார்த்துக் கொண்டிருப்பவரும் அவர்களில் உள்ளனர். அவர்கள் சிறிதளவும் (வாக்கை) மாற்றவில்லை” அல்குர்ஆன்- 33:23

அதன்பிறகு தளபதி மஸ்லமா தன் ஸுஜூதுகளில்: “இறைவா! ஓட்டைக்குச் சொந்தக்காரரான அந்த மனிதருடன் மறுமையில் என்னை எழுப்புவாயாக” என்று பிரார்த்தனை செய்பவராக இருந்தார்.

(நூல்: உயூனுல் அஹ்பார்- இப்னு குதைபா)

அல்லாஹ்வை சந்திப்பதற்காக மறுமைக்காக. ரகசிய அமல்கள் சிலவற்றை செய்து கொள்வோம். அவை நமக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் மட்டும் இருக்கட்டும். அதுதான் மறுமையில் பயனளிக்கும். அதுவே வெற்றிக்கான ஒரே வழி.

பாஹிர் சுபைர்

முஸ்லிம்கள் மஸ்லமா இப்னு அப்தில் மலிக் அவர்களின் தலைமையில் ரோமாபுரியில் மிகப்பெரும் கோட்டையொன்றை முற்றுகை இட்டிருந்தனர். ஆனால் கோட்டையின் சுவர்கள் உயரமாக இருந்ததாலும் அதனது அனைத்து வாயில்களும் மூடப்பட்டிருந்ததாலும் முஸ்லிம்களால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை.…

முஸ்லிம்கள் மஸ்லமா இப்னு அப்தில் மலிக் அவர்களின் தலைமையில் ரோமாபுரியில் மிகப்பெரும் கோட்டையொன்றை முற்றுகை இட்டிருந்தனர். ஆனால் கோட்டையின் சுவர்கள் உயரமாக இருந்ததாலும் அதனது அனைத்து வாயில்களும் மூடப்பட்டிருந்ததாலும் முஸ்லிம்களால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *