Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
உள்ளங்கள் 

உள்ளங்கள்

  • 23

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நான் கேட்கிறேன்
வாய் இருந்தும்
இங்கே
எல்லோரும் ஊமைகளாக

நான் பேசுகிறேன்
செவி இருந்தும்
இங்கே
எல்லோரும் செவிடர்களாக

என் இலட்சியமும்
கனவுகளும்
காணாமல் போயின
சில கள்ளத்தனமான
உள்ளங்களால்

என் ஆசைகளும்
எதிர்ப்பார்ப்புகளும்
எரிந்து போயின
ஏமாற்றும் சில
உள்ளங்களால்

பிற உள்ளங்களின்
உணர்வுகளை
உரசிப்பார்க்கும்
பல உள்ளங்கள்
இங்கே

அடுத்தவர்களை
தட்டிவிட்டு
தப்பிக்கும் பல உள்ளங்கள்
இங்கே

பொய்களை மாட்டிச்
சுற்றும் முகமூடி
முகம் கொண்ட
பல உள்ளங்கள்
இங்கே

அல்பத்தனமான
ஆசைக்காக
அடுத்தவர்களை
அழிக்கும்
அசிங்கமான
பல உள்ளங்கள்
இங்கே

தேவைகளின் போது
மட்டுமே தேனாய்
இனிக்கும் கபடமான
பல உள்ளங்கள்
இங்கே

நம்பிக்கையை
தகர்த்தெறியும்
ஏமாற்றும்
பல உள்ளங்கள்
இங்கே

இத்தனை உள்ளங்களும்
உணரும் வரையில்
என் போன்ற
உள்ளங்கள்
அநாதையாக
தான் இருக்கும்

உள்ளங்களால்
உணரவும் முடியும்
உதறித் தள்ளவும்
முடியும்

அழிக்கவும் முடியும்
அரவணைக்கவும்
முடியும்
புரியாத புதிர்
மனித உள்ளங்கள்!

Rushdha Faris
South Eastern University of Sri Lanka.

நான் கேட்கிறேன் வாய் இருந்தும் இங்கே எல்லோரும் ஊமைகளாக நான் பேசுகிறேன் செவி இருந்தும் இங்கே எல்லோரும் செவிடர்களாக என் இலட்சியமும் கனவுகளும் காணாமல் போயின சில கள்ளத்தனமான உள்ளங்களால் என் ஆசைகளும் எதிர்ப்பார்ப்புகளும்…

நான் கேட்கிறேன் வாய் இருந்தும் இங்கே எல்லோரும் ஊமைகளாக நான் பேசுகிறேன் செவி இருந்தும் இங்கே எல்லோரும் செவிடர்களாக என் இலட்சியமும் கனவுகளும் காணாமல் போயின சில கள்ளத்தனமான உள்ளங்களால் என் ஆசைகளும் எதிர்ப்பார்ப்புகளும்…