Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
எதிர்காலம் 

எதிர்காலம்

  • 16

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

எதிர்காலம் பற்றிய சிந்தனை இன்று முன்னைய காலங்களை விட மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் அதிகம் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்றால் மிகையாகது.

எனது எதிர்காலம் எப்படி அமையும்?
எனது எதிர்காலத் தொழில் என்ன?

இவ்வாறு மனிதர்கள் எதிர்காலம் குறித்து அதிகம் அலட்டிக் கொண்டதனால் எதிர்கால சவால்கள், பிரச்சினைகள் பற்றி அதிகம் சிந்திக்கத் துவங்கியதால், அளவு கடந்த திட்டமிடல்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். அதேபோன்று எதிர்காலம் பற்றிய ஓர் அச்ச உணர்வுடன் வாழ ஆரம்பித்துள்ளனர்.

எனினும் அன்றைய கால மனிதர்கள் எதிர்காலம் பற்றி இவ்வாறு அளவு கடந்து யோசித்தது கிடையாது. அன்றைய பொழுதை எவ்வாறு மகிழ்ச்சியாய் கழிப்பது என்றே சிந்தித்தார்கள்.

ஆனால் இன்றைய மனிதர்களிடம் இன்றைய வாழ்வு எப்படிப் போனாலும் நாளை எப்படி வாழ வேண்டும் என்ற சிந்தனையே மனித மனதில் தள்ளாடுகிறது. இதனால் அதிகமானோரின் உள்ளங்கள் மனக் கவலையால் துன்பப்படுகிறது.

குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.

“நிச்சயமாக நாமே உங்களுக்கும் அவர்களுக்கும் (உங்கள் பிள்ளைகளுக்கும்) உணவளிக்கிறோம்.”என்கிறது (6:157)

அல்லாஹ் குத்ஸியில் பின்வருமாறு கூறுகிறான்.

“ஆதமுடைய மகனே !என்னை வணங்குவதற்காகவே நான் உன்னை படைத்திருக்கிறேன். ஆகவே விளையாடதே!உனக்குரிய ரிஸ்கை அளந்து வைத்திருக்கிறேன். அவற்றை தேடுவதில் அதிகம் அலட்டிக் கொள்ளாதே!நான் உனக்கு கொடுப்பதில் நீ திருப்தி கொண்டால் நீ எனது அன்புக்குரியவனாய் இருப்பாய். மாற்றமாக நீ ரிஸ்கை தேடுவதில் அளவு கடந்து அலட்டிக் கொண்டால் உன்னை ஓய்வு இல்லாமல் அலைய விடுவேன். அப்போதும் நான் அளந்தது அன்றி உனக்கு கிடைப்பதில்லை. நாளைய அமலை உன்னிடம் கேட்காதது போலவே நாளைய ரிஸ்கை கேட்டகாதே!”

எனவே செல்வம் என்பதும் திருப்தியான வாழ்வு என்பதும் அல்லாஹ் கொடுத்திருப்பதை நிறைவோடு பொருந்திக் கொள்ளும் உள்ளத்துக்கே கிடைக்கிறது.

ஆகவே, எதிர்காலம் பற்றிய அளவு கடந்த அச்சமும் கவலையும் எம்மை மாய்த்து விடாது இருக்க அல்லாஹ்வை எப்பொழுதும் சார்ந்து இருப்போமாக!

Fathima Aysha Saffar
SEUSL

எதிர்காலம் பற்றிய சிந்தனை இன்று முன்னைய காலங்களை விட மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் அதிகம் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்றால் மிகையாகது. எனது எதிர்காலம் எப்படி அமையும்? எனது எதிர்காலத் தொழில் என்ன?…

எதிர்காலம் பற்றிய சிந்தனை இன்று முன்னைய காலங்களை விட மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் அதிகம் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்றால் மிகையாகது. எனது எதிர்காலம் எப்படி அமையும்? எனது எதிர்காலத் தொழில் என்ன?…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *