Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 28 

எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 28

  • 11

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

“அடி ஏஞ்செல்மா உனக்கு இது ஓவர் ஆஹ் இல்லயா என்னையே கிண்டல் பண்ற லா..”

“இல்ல ஹபி ரொம்ப மாசம் ஏன் லீவ் போட”

இல்லடா இப்போ தானே உங்களுக்கு ஸ்டார்ட் அப்போ உங்களுக்கு கொஞ்சம் வருத்தம் நல்லாகும் வர கூட இருக்கணும், அதோட இடைக்கிடை போய் வருவன். ஒரு பெண் ரொம்ப சொப்ட்டுடா, அத விட பாரு என் ருஷா ரொம்ப ரொம்ப சொப்ட்! ஒவ்வொரு பெண்ணும் காய்ச்சல் வந்தாலே குழந்தையா மாறாள் அந்த நேரம் தண்ட ஹபி கூட இருந்து பார்த்துக்க நினைக்காள் ஆனா ஒரு சில ஆண்கள் அதை புரியாம பல பிரச்சினைகள் இப்படி எல்லாம் வருது உலகத்துல, மார்க்கம் நல்ல வாழ்க்கை வழிகளை சொல்லுது மனைவிய எப்படி பார்த்துகனும் என்று , இப்போ நீங்க பிரக்னண்ட் டைம், இந்த டைம்ல ஒரு பெண் எதிர் பார்க்குற எதிர் பார்ப்பு தன் கணவன் தன் கூட இருக்கணும் என்று இது இயல்பு.

தன் கணவன் இவ்வாறு அடுக்கி கொண்டு போக அளவில்லாத சந்தோஷத்தால் அவள் அழுகை நிசாத்தின் கையை எதிர் பார்த்தது,

“ருஷா ஏன் அழுற டா”

“ஹபி ஒரு மனைவியை புரிஞ்சு வாழ்ற கணவன், அவளுக்கு எது நல்லம் என்று அவள நினைச்சி அவளுக்காக இருக்குற கணவன் கிடைக்குற பெரிய பாக்கியம் ஆனா அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் எனக்கு தந்திருக்கான். அல்லாஹ் ரொம்ப பெரியவன். எத்தனையோ பெண்கள் தன்ட கணவன்மாரால புரிஞ்சி கொள்ளப் படாம தங்கட லைப்ப கழிக்காங்க, இப்படி ஒரு சமூகம் மாற்ற படனும், இதை நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு, நீங்க எனக்கு அல்லாஹ் தந்த பெரும் செல்வம்.”

“டேய் ருஷா எல்லாம் சோதனை மா ஒரு மரத்துல ஆணிய அடிச்சிப் போட்டு ஏன்டா நாம ஆட்டி பாக்கம்,”

“அது பலம்மா அடி பட்டு, பிட் ஆஹ் இருக்காணு பார்க்க ஹபி”

“ஆஹ் அப்டி தான்டா படைச்ச இறைவன் நமட ஈமான் சரியானு பார்க்க தான் சோதனை தாரான். அதுல ஜெயித்தா தான் சுவர்க்கம் அடைய ஏலும். இந்த உலகத்தில ஒன்ற எடுக்க எவ்வளவு கஷ்ட படுறம், ஆனா அந்த சொர்க்கம் ஈஸியா கிடசிடுமா ருஷா.”

“ம்ம் சரி தான் ஹபி”

“சரி மா கொஞ்சம் தூங்குங்க நான் வேலைய முடிச்சுடு வாரன்.”

என்று சொல்லி விட்டு ருஷாவின் கால்களை தூக்கி கட்டிலில் வைத்து அவளை தூங்க வைத்து விட்டு நிசாத் கீழே சென்றான். மாதங்களின் நகர்வு மிகவும் வேகமாய் உருண்டது. அவளின் கருவும் முற்ற முற்ற அவளின் கஷ்டங்களும் கூடின, வாந்தி அவளை வாட்டி எடுக்க சிரமம் பாராது தன் கை கொண்டு தாங்கினான் நிசாத், அழுகை சிரிப்பு என்று ஐந்து மாதம் அவள் கடக்க இஸ்கேனிங் பண்ண வேண்டும் என்ற தன் தாயின் எதிர் பார்ப்பில் இஸ்கேனிங் பண்ண ருஷாவும் நிசாத்தும் சென்றார்கள்.

“வாங்க நிசாத் எப்படி சுகமா .”

“ஓஹ் டொக்டர் அல்ஹம்துலில்லாஹ்..”

“பேச்சுடன் ருஷாவின் இஸ்கேனிங்கும் நடந்தது…”

“நிசாத் கொங்ராட்ச்… டுவின்ஸ் பேபி…”

“ஏஞ்சலும் கிங்கும் …. மாஷா அல்லாஹ்…

“ரொம்ப நல்லா ஹெல்தியா எக்டிவ்வா இருக்காங்க…”

தொடரும்….
K.Fathima Risama
Nintavur.
SEUSL.
வியூகம் வெளியீட்டு மையம்

“அடி ஏஞ்செல்மா உனக்கு இது ஓவர் ஆஹ் இல்லயா என்னையே கிண்டல் பண்ற லா..” “இல்ல ஹபி ரொம்ப மாசம் ஏன் லீவ் போட” இல்லடா இப்போ தானே உங்களுக்கு ஸ்டார்ட் அப்போ உங்களுக்கு…

“அடி ஏஞ்செல்மா உனக்கு இது ஓவர் ஆஹ் இல்லயா என்னையே கிண்டல் பண்ற லா..” “இல்ல ஹபி ரொம்ப மாசம் ஏன் லீவ் போட” இல்லடா இப்போ தானே உங்களுக்கு ஸ்டார்ட் அப்போ உங்களுக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *