Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
எனக்கு கொரோனா positive - Youth Ceylon - Research Magazine

எனக்கு கொரோனா positive

  • 15

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஏன் வந்தது என்று
கொரோனாவுக்கும் தெரியாது
எப்படி வந்தது என்று
எனக்கும் தெரியாது
ஆனாலும் positive!

அதையும் அனுபவித்து
பார்ப்போமே – என்றாலும்
அடுத்தடுத்த அனுபவங்கள்!
அன்னையும் அருகில் இல்லை
அன்பின் தந்தையும் இல்லை
ஆயுள் ரேகையான
என்னவனும்
அருகில் இல்லை!
தனிமையில் கண்ணீரில்
தனியாக ஓர் பயணம்!
காரணம் positive!

உறவுகள் அழைப்பில்
மட்டும்- தான் என்றாகிவிட
இனிமேல் அவர்களுடன்
உறவாடுவேனா என்பது
கேள்விக்குறியாகி விட்டது!

கவியின் காதலி தான் – அதற்காக
இறைவன் இவ்வளவு பெரிய
கவிக்கருவை தந்து விட்டானோ?
உணவும் சுவையில்லை
அதை சுவைக்க
உணர்வும் இல்லை?
காரணம் positive!

சிரிப்பதா? அழுவதா?
எங்கோ ஓர் சீன மனிதனுக்கு
கொரோனாவாம்
என்று கேட்ட முதல் செய்தி
ஞாபகம் வந்து சென்றது
இன்று எனக்கும் என்ற போது!
இறந்து விடுவேனோ
இருந்த அடையாளமே
தெரியாது பொசுக்கி
விடுவார்களோ? – என்ற
சிந்தனை வேறு!
காரணம் positive1

பதினொராம் நாள்
மருந்தில்லா மருத்துவத்தில்
நலம் பெற்று Ambulance ல்
ஓர் பயணம்!
வீடு நோக்கி வந்தேன்
ஆயிரமாயிரம் ஆசைகளுடன்!
பிழைத்து விட்டேன்!
இன்னும் ஆயூள்
இருக்கிறது போலும்!

இது இவ்வாறிருக்க
வீட்டினரோடு பல உறவுகள்
தமது உறவாடலை நிறுத்தி
பேச்சையும் மாற்றி – இதுவரை
பயணித்த பாதையையும் கூட
மாற்றி விட்டிருந்தனர்
காரணம் positive!

மனித நேயம்
அதற்கும் positive
ஆனால் அது
பிழைக்க வில்லை!

போகும் இடமெல்லாம்
குசு குசு சத்தம்
‘இவளுக்கு தான் கொரோனா..’
‘இவள் தான் கொரோனா ஆள் ‘
பார்வைகளிலும்
ஆயிரம் கேள்விகள்!
ஆயிரம் கிண்டல்கள்!
கழுவுற மீன்ல
நழுவுற மீன் போல
சிலர் நழுவி செல்ல
பக்கம் வரவே பயம்
காரணம் positive!

இப்படி ஓர் நிலமையை விட
இறந்தே போயிருக்கலாமோ?
இப்படியும் சிந்தனை
காலம் பதில் சொல்லட்டும்
மரணத்தை சற்று
பார்த்து விட்டு வந்து விட்டேனே
அதிலும் ஓர் மகிழ்ச்சி தான்!

Aroosiya Ilyas
Kandy

Online Books Sale

ஏன் வந்தது என்று கொரோனாவுக்கும் தெரியாது எப்படி வந்தது என்று எனக்கும் தெரியாது ஆனாலும் positive! அதையும் அனுபவித்து பார்ப்போமே – என்றாலும் அடுத்தடுத்த அனுபவங்கள்! அன்னையும் அருகில் இல்லை அன்பின் தந்தையும் இல்லை…

ஏன் வந்தது என்று கொரோனாவுக்கும் தெரியாது எப்படி வந்தது என்று எனக்கும் தெரியாது ஆனாலும் positive! அதையும் அனுபவித்து பார்ப்போமே – என்றாலும் அடுத்தடுத்த அனுபவங்கள்! அன்னையும் அருகில் இல்லை அன்பின் தந்தையும் இல்லை…