Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
என்னருமை மகனே உன் தாய் அழைக்கிறேன் 

என்னருமை மகனே உன் தாய் அழைக்கிறேன்

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

என்னருமை மகனே..! உன் பிறப்பில் நான் என் மரணத்தோடு போராடினேன். நீ நோய்வாய்ப்பட்டு, பின்னிரவுகளில் அழுது கொண்டு இருந்த பொழுதெல்லாம் தூக்கமற்ற பல இரவுகளை கழித்துள்ளேன்.

உனக்கு உணவூட்டாதவரை நான் உணவு உட்கொண்டதேயில்லை. உன்னை இன்று நீ உள்ள இந்நிலைக்கு கொண்டுவர எண்ணிலடங்கா வலிகளையும் தாங்கிக் கொண்டேன்… என்னருமை மகனே! இதற்காக உன் தாய்க்கு என்ன கைம்மாறு பகரப்போகிறாய்?

மகன்: என்னன்புத் தாயே! நான் படித்து பட்டம் பெற்று தொழில் தேடி, நன்கு உழைத்து உங்களை இந்த உலக இன்பங்களால் மகிழ்விப்பேன்.

தாய்: என்னருமை மகனே! உன் தந்தை இதை செய்துவிட்டார், இதை உன்னிடமிருந்தும் நான் எதிர்பார்க்கவில்லை.

மகன்: என்னன்புத் தாயே! நான் நற்பண்புமிக்க ஒரு பெண்ணை தேடி திருமணம் செய்வேன்; அவள் நான் வீட்டில் இல்லாத போது உங்களை அன்போடு அரவணைப்பாள்.

தாய்: என்னருமை மகனே! எனக்காக சேவையாற்றுவது என் மருமகள் மீது கடமையுமில்லை; உன் தாய் நான் அதை அவளிடம் எதிர்பார்க்கவுமில்லை.

மகன்: என்னன்புத் தாயே! நீங்களே கூறுங்கள், நான் உங்களுக்கு எவ்வாறு தான் கைம்மாறு செய்வது?

தாய்: ( கண்களில் கண்ணீர் மல்க) என் மரணத்தின் பின் என்னை தொழுகை நடத்தி ,, என்னைத் தூக்கிச் செல்ல உன் தோள் கொடு மகனே! உன் தொழுகைகளிலெல்லாம் எனக்காக கையேந்திடு மகனே! மகனே, உன் அறிவைக்கொண்டு சமூகத்தில் நண்மைகளை விதைத்து விடு மகனே… மறந்துவிடாதே! நீ புரியும் ஒவ்வொரு நல்லமலும் என் மண்ணறையை பிரகாசிக்கவைக்கும்,, மறுமையை ஒளிர்வூட்டும். எனக்காக இவற்றை மட்டும் செய்திடுவாயா என்னருமை மகனே!

மகன்:( கண்கள் கண்ணீரால் கதம்பமாகிறது; வார்த்தைகள் இல்லை மறுமொழி வழங்க)

அன்பார்ந்த உறவுகளே வாழ்க்கையில் யதார்த்தமாக நடக்கும் விடயத்தையே படிப்பினைக்காக பதிவிட்டுள்ளேன்.. உங்கள் சிலர்களின் தாய்களின் நிலை உங்களுக்கு தெரியும் எனவே அந்த உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதற்கு ஏற்றாற் போல் மாறிவிடுங்கள்….

நீங்கள் உங்கள் தாய்க்கு என்ன கைம்மாறு புரியப்போகின்றீர்கள்?

இது வரை காலமும் நீங்கள் உங்கள் தாய்க்கு என்ன செய்தீர்கள்.?

இதுவரைக்காலமும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்.?

உங்கள் உள்ளத்தை தொட்டு கேற்க வேண்டிய விடயமாகும்….

தாய் என்பது ஒவ்வொருவரது வாழ்வினதும் அதியுன்னத உயிர் ஒரு தாய் என்பவள் சுவனத்துக்கான மிக வலிமையான வாயில்.. அவ்வாயிலை பாதாளம் தள்ளுவதும், பேணிக்கொள்வதும் உங்கள் கரங்கள் சார்ந்தது…

யா அல்லாஹ்

என் தாய்க்கு நல்லருள் புரிவாயாக! அவரை கண்ணியப்படுத்தி, அவரது சொற்படி நடந்து, அவரை நேசித்து, அவரைப் பேணிப்பாதுகாக்கக்கூடிய நல்வழியை என் உள்ளத்திற்கு தந்தருள்புரிவாயாக…

என் அன்புத்தாய்க்கு சமர்ப்பணம்

FASLAN HASHIM
South eastern university of srilanka
( Undergraduate)

என்னருமை மகனே..! உன் பிறப்பில் நான் என் மரணத்தோடு போராடினேன். நீ நோய்வாய்ப்பட்டு, பின்னிரவுகளில் அழுது கொண்டு இருந்த பொழுதெல்லாம் தூக்கமற்ற பல இரவுகளை கழித்துள்ளேன். உனக்கு உணவூட்டாதவரை நான் உணவு உட்கொண்டதேயில்லை. உன்னை…

என்னருமை மகனே..! உன் பிறப்பில் நான் என் மரணத்தோடு போராடினேன். நீ நோய்வாய்ப்பட்டு, பின்னிரவுகளில் அழுது கொண்டு இருந்த பொழுதெல்லாம் தூக்கமற்ற பல இரவுகளை கழித்துள்ளேன். உனக்கு உணவூட்டாதவரை நான் உணவு உட்கொண்டதேயில்லை. உன்னை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *